Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

pirasident.jpg?resize=700,375&ssl=1

யாழ் சூழலை மாசுபடுத்திய ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான நேற்றைய விஜயத்தின்போது அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்று கடும் புகையினை வெளியேற்றியவாறு சென்றதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் புகையினை வெளியேற்றும் போது தண்டங்களை விதிக்கும் பொலிஸார் ஏன் அரச வாகனங்களுக்கு அந்த நடைமுறைகளை பேணுவதில்லை என இவ்விடயம் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அதிகளவில் புகையை வெளிவிடும் வாகனங்களுக்கு எவ்வாறு புகைச்சான்றிதழ் வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அரசாங்க வாகனங்களுக்கு ஒரு சட்டமும் பொதுமக்களது வாகனங்களுக்கு ஒரு சட்டமும் இலங்கையில் காணப்படுகின்றதா என அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1364974

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது இலங்கையின் நண்பன் இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனம் போலும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நியாயம் said:

இது இலங்கையின் நண்பன் இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனம் போலும். 

இந்த டிபெண்டெர் வாகனம் பிரித்தானிய தயாரிப்பாக இருக்க வேண்டும். எப்படியோ இலவசமாக கிடைத்தால் இலங்கை எல்லாவற்றையும் எடுத்து கொள்ளும். 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.