Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   04 MAR, 2024 | 10:35 AM

image

ஹெய்ட்டி தலைநகரில் உள்ள பிரதான சிறைச்சாலையொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட கும்பலொன்று அங்கிருந்த 4000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச்சென்றுள்ளது.

தலைநகரின் பிரதான சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக 4000க்கும் அதிகமான கைதிகள் தப்பியோடிவிட்டனர் என செய்திகள் வெளியாகின்றன.

2021 இல் ஜனாதிபதி ஜொவெனல் மொஸ்சேயை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் சிறையுடைப்பு காரணமாக தப்பிச்சென்றுள்ளனர்.

ஹெய்ட்டியின்  வழமையான நெரிசல் மிகுந்த சிறைச்சாலை வெறுமையாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி காணப்படுகின்றது காலணிகளும் ஆடைகளும் கதிரைமேசைகளும் சிதறுண்டு காணப்படுகின்றன என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

haiti_viole1.jpg

சிறைச்சாலை வாயிலில் மூன்று உடல்கள் காணப்படுகின்றன.

இதேவேளை 1400 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது சிறைச்சாலையிலும் சிறை உடைப்பு இடம்பெற்றுள்ளது.

எத்தனை கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர் என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி 4000 சிறைக்iதிகளில் 100க்கும் குறைவானவர்களே எஞ்சியுள்ளனர் எனவும்  தெரிவித்துள்ளது.

நான் ஒருவன் மாத்திரம் எஞ்சியுள்ளேன் என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலையை அறிவித்துள்ள ஹெய்ட்டி அரசாங்கம்  இரவு நேர ஊரடங்கு சட்டத்தையும் பிரகடனம் செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/177839

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹைதியில் சிறையை தாக்கிய முன்னாள் காவல்துறை அதிகாரி; தப்பியோடிய 3700 கைதிகள்

ஆயுதக் குழுக்களின் பிடியில் ஹைட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹைதியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைக்கு வெளியே டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஹென்றி ஆஸ்டியர் மற்றும் ஜியான்லூகா அவாக்னினா
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹைதி நாட்டின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரச் சிறைக்குள் ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு அரசு 72 மணி நேர அவசர நிலையை அறிவித்தது. இந்த சிறைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 3,700 கைதிகள் தப்பினர்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆயுத குழுக்களின் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அவரை வெளியேற்றும் நோக்கில் செயல்படும் ஆயுத குழுக்கள், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

 
ஆயுதக் குழுக்களின் பிடியில் ஹைதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆயுதக் குழுவின் தலைவராக முன்னாள் காவல்துறை அதிகாரி

ஹைதியில் ஆயுத குழுக்களினால் நிகழ்த்தப்படும் வன்முறை பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது.

இரண்டு சிறைச்சாலைகள் வார இறுதியில் தாக்கப்பட்டதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது, ஒன்று தலைநகரிலும் மற்றொன்று அருகிலுள்ள குரோயிக்ஸ் டெஸ் பொக்கெட்ஸ் எனும் நகரிலும்.

குழுக்களின் இந்த 'கீழ்ப்படியாமை' செயல்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு பதிலடியாக உடனடியாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாகவும் அரசு கூறியது, இந்த ஊரடங்கு இந்திய நேரப்படி திங்கட்கிழமை 01:00 மணிக்கு தொடங்கியது.

சிறைச்சாலைகள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு முன்பாக அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்ப மற்ற காவல் நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும் ஹைதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போர்ட்-ஓ-பிரின்ஸின் சிறையில் உள்ள கைதிகளில், 2021ஆம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட குழுவின் உறுப்பினர்களும் அடங்குவர்.

 

கென்யா தலைமையிலான பன்னாட்டுப் பாதுகாப்புப் படையை ஹைதிக்கு அனுப்புவது குறித்து விவாதிக்க வியாழன் அன்று பிரதமர் நைரோபிக்கு சென்றபோது, இந்த வன்முறை சம்பவங்கள் தொடங்கின.

பிரதமரை பதிவியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கில் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை அறிவித்தார் ஆயுதக் குழுவின் தலைவர் ஜிம்மி செரிசியர் ("பார்பெக்யூ" என்ற புனைப்பெயர் கொண்டவர்)

"நாங்கள் அனைவரும், அதாவது மாகாண நகரங்களில் உள்ள ஆயுதக் குழுக்களும் தலைநகரில் உள்ள ஆயுதக் குழுக்களும் ஒன்றுபட்டுள்ளோம்" என்று போர்ட்-ஓ-பிரின்ஸில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமானவராக கருதப்படும் இந்த முன்னாள் காவல்துறை அதிகாரி கூறுகிறார்.

தலைநகரின் பிரதான சிறைச்சாலையை வலுப்படுத்த உதவுமாறு ஹைதியின் போலிஸ் தொழிற்சங்கம் ராணுவத்திடம் கேட்டிருந்தது, ஆனால் அதற்குள் சனிக்கிழமை சிறைச்சாலை தாக்கப்பட்டது.

சிறைச்சாலையின் கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன, அதிகாரிகள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தது. தப்பிச் செல்ல முயன்ற மூன்று கைதிகள் முற்றத்தில் பிணமாகக் கிடந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்குள் சென்ற ஏஎப்பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட சுமார் 10 உடல்களைக் கண்டதாகக் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சிறை ஊழியர் ஒருவர், "அதிபர் மொய்ஸின் கொலைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கொலம்பிய வீரர்கள் உட்பட 99 கைதிகள் துப்பாக்கி சூட்டிற்கு பயந்து தங்கள் அறைகளில் முடங்கிவிட்டனர்" என்று கூறினார்.

ஆயுதக் குழுக்களின் பிடியில் ஹைதி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோடியதால் சிறை அறைகள் காலியாக உள்ளன

அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை அன்று போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களை உடனடியாக ஹைதியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசா சேவைகளை மூடுவதாக பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹைதி பல ஆண்டுகளாக ஆயுதக் குழுக்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 2021இல் அதிபர் மோயிஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. 2016 முதல் அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால் அதிபர் பதவி காலியாக உள்ளது.

ஒரு அரசியல் ஒப்பந்தத்தின் கீழ், பிப்ரவரி 7க்குள் பிரதமர் ஹென்றி பதவி விலக வேண்டும். ஆனால் திட்டமிட்டு தேர்தல் நடத்தப்படாததால் அவர் இன்னும் பதவியில் நீடிக்கிறார்.

கிளாட் ஜோசப், அதிபர் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபோது தற்காலிக பிரதமராக செயல்பட்டவர் மற்றும் இப்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். பிபிசியிடம் பேசிய ஜோசப், ஹைதி நாடு ஒரு 'கொடுங்கனவில்' வாழ்ந்து வருவதாக கூறினார். முடிந்தவரை பிரதமர் பதவியில் நீடிக்க ஹென்றி விரும்புவதாகவும் ஜோசப் கூறுகிறார்.

"பிப்ரவரி 7ஆம் தேதி பதவி விலக முதலில் ஒப்புக்கொண்டு, பின்னர் மறுத்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தாலும், அவர் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ஆனால் இப்போது இந்த குற்றவாளிகள் அவரை பதவி விலகுமாறு கட்டாயப்படுத்த வன்முறை வழிகளைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது" என்கிறார் ஜோசப்.

கடந்த ஆண்டு ஹைட்டியின் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட வன்முறையில் 8400 பேர் கொல்லப்பட்டனர் என்று ஜனவரியில் வெளியான தனது அறிக்கையில் ஐ.நா. கூறியுள்ளது. இது 2022இல் பலியானவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் ஐ.நா. கூறியுள்ளது.

வன்முறையால் பல மருத்துவமனைகள் செயல்படாமல் உள்ளன.

அரசியல் வெற்றிடம் மற்றும் அதீத வன்முறையின் மூலம் வெளிப்படும் கோபம், அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது. அரசு எதிர்ப்பாளர்கள் இப்போது பிரதமரின் ராஜினாமாவைக் கோருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/ce9ry752e15o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹைதி: ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, நாட்டை கலங்கடிக்கும் கேங்ஸ்டராக மாறிய கதை

ஹைதி வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஜிம்மி 'பார்பெக்யூ' செரிசியர்

6 மார்ச் 2024, 04:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்

ஹைதி நாட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் நாட்டையே கலங்க வைக்கும் தாதாவாக மாறி அச்சுறுத்தி வருகிறார். அவரது பெயர் ஜிம்மி செரிசியர்.

ஹைதியில் தொடரும் வன்முறையின் காரணமாக அந்நாட்டு அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள், ஹைதி பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தத் தலைவர்களில் ஒருவர்தான் ஜிம்மி செரிசியர். இவர் 'பார்பெக்யூ' என்றும் அழைக்கப்படுகிறார். ஹைதியின் வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜி-9 அண்ட் ஃபேமிலி (G-9 and Family) என்ற மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவின் தலைவர் இவர்.

சனிக்கிழமையன்று நாட்டின் பிரதான சிறைக்குள் நுழைந்த ஆயுதக் குழுக்கள், 3,700க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த பின்னர் இந்த வன்முறை புதிய நிலைகளை எட்டியது. அந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

பிரதான சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஹைதி நாட்டில் 2020ஆம் ஆண்டு முதல் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைக்கு மற்றொரு சாட்சியாகும்.

நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஆயுதக் குழுக்கள் முன்னெடுத்த போர், நாட்டில் வன்முறை பரவ அடிப்படையாக செயல்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஹைதியில் இப்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

 
ஹைதி வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% நிலப்பரப்பை ஆயுதக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன.

தலைநகரை ஆளும் ஆயுதக்குழுக்கள்

ஜூலை 7, 2021 அன்று அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டது மிகவும் தீவிரமான தருணங்களில் ஒன்றாகும். இது அரசு நிர்வாகத்தில் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது, அது இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது.

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% நிலப்பரப்பை இந்த ஆயுதக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன. வெவ்வேறு செய்தி அறிக்கைகளின்படி, சிறைச்சாலை மீதான இவர்களின் சமீபத்திய தாக்குதலின் நோக்கம், அதிபர் மொய்ஸின் மரணத்திற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த பிரதமர் ஹென்றி பதவி விலக வேண்டும் என்பதாகும்.

தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஹென்றி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இன்றுவரை நடத்தப்படாததால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

"ஹைதி தேசிய காவல்துறை மற்றும் ராணுவம் தங்கள் பொறுப்பை ஏற்று பிரதமர் ஏரியல் ஹென்றியை கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மீண்டும் சொல்கிறோம், மக்கள் எங்கள் எதிரி அல்ல. ஆயுதக் குழுக்களின் நோக்கம் மக்களுக்கு எதிராக செயல்படுவது அல்ல" என்று சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு செய்தியில் செரிசியர் கூறினார்.

ஆயுதக் குழு தலைவரான செரிசியர் கடந்த காலத்தில் ஹென்றியின் அரசாங்கத்திடம் பொது மன்னிப்பு கோரியிருந்தார். தனது குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

முன்னாள் போலீஸ் அதிகாரியான செரிசியர், சமீபத்திய ஆண்டுகளில் ஹைதியை உலுக்கி வரும் ஒரு முன்னணி ஆயுதக் குழுவின் தலைவராக மாறியுள்ளார். நாட்டின் வன்முறை அலைக்கு பின்னால் ஒரு முக்கிய புள்ளியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் கூற்றுப்படி, ஹைதியில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு இவரே பொறுப்பு. இந்த காரணத்திற்காக, அமெரிக்காவும் ஐ.நாவும் இவர் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன.

அதிபர் மொய்ஸின் மரணத்திற்குப் பிறகு, நாட்டின் 'ஊழல்' அரசியல்வாதிகளுக்கு எதிரான புரட்சியை ஊக்குவிப்பதில் செரிசியர் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளார். அவரது விருப்பமான வழிகளில் ஒன்று சமூக வலைதளங்கள். தனது குழுவின் செய்தியை உலகுக்கு அறிவிக்க மட்டுமல்லாமல், அவரது ஆயுத குழுவுக்கு புதிய உறுப்பினர்களை ஈர்க்கவும் அது உதவுகின்றது.

 
ஹைதி வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

காவல்துறை அதிகாரி முதல் கேங்ஸ்டர் வரை

'பார்பெக்யூ' என்ற அவரது புனைப்பெயருக்கான காரணம் என்ன என்பதே முதல் கேள்வியாக இருக்கும். அவரது அம்மா தெருவில் கோழி விற்றதே இதற்கு காரணம் என்று அவர் பேட்டிகளில் கூறியுள்ளார்.

ஆனால் ஹைதி வன்முறைகளை நேரில் கண்ட சில சாட்சிகளின் கூற்றுப்படி, அவர் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் உடல்களை எரிப்பதால் தான் இந்த புனைப்பெயர் வந்துள்ளது.

ஒரு போலீஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய செரிசியர் இன்று ஜி-9 அண்ட் ஃபேமிலி என்ற குழுவின் தலைவராக உள்ளார். உலகின் அதிக வன்முறைகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஹைதியின் மிகவும் ஆபத்தான ஆயுதக் குழுக்களின் கூட்டணி தான் இந்த ஜி-9 அண்ட் ஃபேமிலி.

2021ஆம் ஆண்டில் 17 அமெரிக்க மற்றும் கனேடிய மிஷனரிகளைக் கொண்ட குழுவைக் கடத்தியது உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் இந்த குழு ஈடுபட்டுள்ளது. 400 மாவோஸோ போன்ற சக்திவாய்ந்த குற்றவியல் அமைப்புகளுடன் இணைந்து செரிசியர் இதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதியின் தலைநகரில் பிறந்தார் செரிசியர். அவருக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளோ அல்லது அவரது நாட்டில் உள்ள எந்த அதிகார அமைப்போ அவரது நடவடிக்கைகளை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

செரிசியரின் குற்றவியல் வாழ்க்கை, அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தபோது தொடங்கியது. நவம்பர் 2017இல், போர்ட்-ஓ-பிரின்ஸ் நகருக்கு அருகில் இருந்த கிராண்ட் ரவைன் பகுதியில் மாஃபியாக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடவடிக்கையில் பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதில் செரிசியரின் பங்கு இருந்ததாக கூறப்பட்டது.

அந்த தருணத்திலிருந்து, நாட்டில் செயல்படும் ஆயுதக் குழுக்களுடனான அவரது உறவும் தொடங்கியது. தொடக்கத்தில் டெல்மாஸ் 6 என்ற குழுவின் முக்கிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரானார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச அறிக்கைகளின்படி, செரிசியர் அந்த கும்பலிடமிருந்து அதிகாரத்தைப் பெற முடிந்தது. காவல்துறை செல்வாக்கு மற்றும் மொய்ஸின் அரசாங்கத்தின் உதவிகளும் அதற்கு காரணம்.

ஒரு போலீஸ் அதிகாரியாக அவர் சில அட்டூழியங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது, அதற்காக அவர் மீது சர்வதேச அமைப்புகள் சில தடைகளை விதித்தன.

போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே நடந்த லா சலின் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்று ஐ.நாவும் அமெரிக்காவும் சுட்டிக்காட்டியுள்ளன. அரசுக்கு எதிராக லா சலின் மக்கள் நடத்திய போராட்டத்தில், போலீஸ் மற்றும் குற்றவியல் குழுக்களின் ஒருங்கிணைந்த தாக்குதலால் பலர் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்களின் போராட்டத்தை அடக்கவே இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டது என அமெரிக்கா கூறியது.

அப்போது குறைந்தது 71 பேர் இறந்தனர். ஆனால் செரிசியர் எப்போதும் போல அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

 
ஹைதி வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

'ஜி-9 அண்ட் ஃபேமிலி' உருவானது எப்படி?

"நான் ஒரு கேங்க்ஸ்டர் அல்ல, நான் ஒருபோதும் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்," என்று அவர் செய்தி நிறுவனமான அல்-ஜசீராவிடம் 2021இல் ஒரு நேர்காணலில் கூறினார்.

"இது நான் எதிர்த்துப் போராடும் அரசு அமைப்பு செய்யும் வேலை. அந்த அமைப்பு பணத்தின் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. நான் ஒரு கேங்க்ஸ்டர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறியிருந்தார்.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், போர்ட்-ஓ-பிரின்ஸின் சில இடங்களில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களில் செரிசியருக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

"காவல்துறையை விட குற்றக் கும்பல்களிடம் சிறப்பான ஆயுதங்கள் உள்ளன. அதிகாரிகளின் ஆதரவும் அவர்களுக்கு உள்ளது" என்று ஹைதியின் 'மனித உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கூட்டமைப்பின்' இயக்குநர் பிபிசியிடம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆயுத பலம் மற்றும் அதிகார பலத்துடன், போர்ட்-ஓ-பிரின்ஸின் பிராந்தியக் கட்டுப்பாட்டிற்கான போரைத் தொடங்கினார் செரிசியர். அங்கு தொடர்ச்சியான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அது தலைநகரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை பரப்பியது.

ஹைதியில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பின் தகவல்படி, செரிசியர் மற்றும் அவரது ஆயுதக் குழுக்கள் மக்களைக் கொல்வதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, அவர்களின் குடியிருப்புகளை தீயிட்டு எரிப்பதிலும் கவனம் செலுத்தியது.

ஜூன் 2020 வரை நிலவிய அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, ஒன்பது ஆயுதக் குழுக்களை ஒன்றிணைத்தார் செரிசியர். அதற்கு ஜி-9 அண்ட் ஃபேமிலி என்று பெயரிட்டார். இந்த அறிவிப்பை தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டார்.

ஆனால் 2021இல் அதிபரின் படுகொலை அவரது அமைப்புக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. சர்வதேச ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அதுவரை அவருக்கு கிடைத்த அரசாங்க பாதுகாப்பை இழக்க வழிவகுத்தது.

இன்சைட் கிரைம் போர்ட்டல் தளத்தின் தகவலின் படி, மொய்ஸின் கொலைக்கு முன், ஜி-9 இன் நிதியில் 50% அரசாங்கப் பணத்திலிருந்து வந்தது, 30% கடத்தல்களிலிருந்து வந்தது, மீதமுள்ள 20% மிரட்டி பணம் பறித்தல் மூலம் திரட்டப்பட்டது.

அதிபர் படுகொலைக்குப் பிறகு, அரசாங்க நிதியுதவி 30% குறைந்தது. இந்த வீழ்ச்சி தான் நாட்டின் அரசியல் கட்டுப்பாட்டை மரபுரிமையாகக் கொண்ட மக்களுக்கு எதிரான தனது போரைத் துவங்க செரிசியரைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

 
ஹைதி வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இந்த வார இறுதியில் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலைக்குள் ஆயுதக் குழுக்கள் படையெடுத்ததை அடுத்து ஹைதியில் நிலைமை மோசமாக உள்ளது.

ஹைதி பிரதமர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

மொய்ஸின் படுகொலைக்குப் பிறகு பிரதமராகப் பதவி ஏற்றார் ஹென்றி. 2021 அக்டோபரில், அவர் ஒரு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார். ஏனெனில் செரிசியரின் ஆயுதக்குழு உறுப்பினர்கள் அப்போது திடீரென்று தோன்றி பிரதமரை நோக்கி சுட்டனர்.

வெள்ளை நிற உடையை அணிந்துகொண்டு, சுற்றி ஆயுதமேந்திய நபர்கள் நிற்க, தலைவர் செரிசியர் அதே நினைவுச்சின்னத்தில் மலர் மாலையை வைத்து அஞ்சலி செலுத்தினார். இது நாட்டில் அவருக்கு இருந்த அசாதாரணமான சக்தியை வெளிப்படுத்தியது.

நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக நாசவேலை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக செரிசியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹென்றியின் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக செரிசியரின் ஆட்கள் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் பல வாகனங்களை தடுத்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு ஹைதியில் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

அவரது ஜி-9 குழு, எதிரி குழுவான ஜி-பெப் உடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் மொய்ஸை சில கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தன. அந்த கட்சிகளுடன் ஜி-பெப் குழுவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இரு குழுக்களிடையே நடக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் போர்கள் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டன. தொலைதூர கிராமங்களில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் வரை இந்த சண்டைகள் பரவியுள்ளன.

இத்தகைய சண்டைகள் அவர்களின் வட்டத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாது, புதிய உறுப்பினர்களை ஈர்க்கவும் உதவுகிறது.

 
ஹைதி வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆயுதக் குழு தலைவராக மாறுவதற்கு முன்பு ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தார் செரிசியர்.

யூடியூப் மூலம் உத்தரவுகள்

போர்ட்-ஓ-பிரின்ஸின் தெருக்களில் இருப்பது போலவே சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளார் செரிசியர்.

"ஹைதியில் சமூக வலைத்தளங்களின் உதவி இல்லாமல் கொள்ளைக்காரர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்க முடியாது. இந்த நாட்டில் எப்போதும் குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள், ஆனால் இந்த தளங்கள் இல்லாமல் அவர்கள் பிரபலமாக மாறியிருக்க முடியாது" என்று அயிதி டேமேன் என்ஜிஓ அமைப்பின் இயக்குனர் யுவன்ஸ் ரம்போல்ட் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் கூறினார்.

செரிசியர் தனது திட்டத்தை செயல்படுத்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினார். அவர் தனது யூடியூப் வீடியோக்களை ஜி-9 குழுவின் உருவாக்கத்தை பற்றித் தெரிவிக்க மட்டும் பயன்படுத்தவில்லை, ஹைதியின் தற்போதைய பிரதம மந்திரியை கைது செய்யும்படி காவல்துறைக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்தார்.

யூடியூப் மட்டுமல்லாது எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) நாட்டைக் கைப்பற்றவும் தற்போதைய ஆளும் வர்க்கத்தை அகற்றவும் வலுவான அழைப்புகளை விடுத்துள்ளார்.

தனது யூடியூப் சேனலில் ஒரு நேர்காணலில் சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார் செரிசியர்.

"இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நேரடியாக பொதுமக்களை அணுகி நாம் யார் என்பதை கூற தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கிறது. நான் பொய்களை கூறவில்லை," என்று அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.

மேலும், "நான் யார் என்று நான் தான் சொல்ல வேண்டும். அவர்கள் என்னைப் பற்றி சொன்னதில் 99 சதவிகிதம் பொய்கள் தான். என்னை தற்காத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் எனக்கு நல்ல வாய்ப்பை அளித்துள்ளன" என்று கூறியிருந்தார் செரிசியர்.

https://www.bbc.com/tamil/articles/cn0wx0xq3q4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெய்ட்டியின் தலைநகர் வன்முறை கும்பலின் பிடியில் - இராஜினாமாவை அறிவித்தார் சர்ச்சைக்குரிய பிரதமர்

Published By: RAJEEBAN   12 MAR, 2024 | 10:52 AM

image
 

2021 இல் ஹெய்ட்டியின் ஜனாதிபதி படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி கடந்த வருடம் தேர்தலை நடத்த மறுத்துள்ளார்.

ஹெய்ட்டி வறுமை மற்றும் குழுவன்முறைக்குள் மேலும் சிக்குப்பட்டுள்ளதால் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

-----------------

கடந்த ஒருவாரத்திற்கு மேல் வன்முறையில் சிக்குண்டுள்ள ஹெய்ட்டியின் பிரதமர். தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஹெய்ட்டியில் வன்முறை கும்பல் அரசகட்டிடங்களை தாக்கிவருவதன் காரணமாக சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் ஹெய்ட்டி வீழ்ச்சியடையும் நிலையில் காணப்படுகின்ற ஒரு சூழலில் பிரதமரின்  ராஜினாமா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமரின் ஆலோசகர் இதனை உறுதி செய்துள்ளதுடன் புதியபிரதமர் பதவியேற்க்கும்  வரை தற்போதைய ஜனாதிபதி பதவியில் நீடிப்பார் என தெரிவித்துள்ளார்.

haiti_viole3.jpg

நிலைமாற்றுக்கால ஜனாதிபதி பேரவை அறிவிக்கப்பட்டு இடைக்கால பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியானதும் ஹெய்ட்டி பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார்  என கயானாவின் தலைவரும் கரிபீயன் சமூகம் மற்றும் பொதுவான சந்தைக்கான அமைப்பின் தலைவருமான இர்பான் அலி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேர்தலை நடத்துவதற்காக நிலைமாற்றுக்கால பேரவை  ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அந்த கரீபியன் சமூகம் மற்றும் பொதுவான சந்தைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைதியான அதிகார மாற்றத்திற்கான நிலைமாற்றுக்கால ஆட்சி ஏற்பாடு குறித்து நாங்கள் உறுதியாகயிருக்கின்றோம் என கரீபியன் அமைப்பு தெரிவித்துள்ளது.

2021 இல் ஹெய்ட்டியின் ஜனாதிபதி படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி கடந்த வருடம் தேர்தலை நடத்த மறுத்துள்ளார்.

ஹெய்ட்டி வறுமை மற்றும் குழுவன்முறைக்குள் மேலும் சிக்குப்பட்டுள்ளதால் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

ஹெய்டியின் பாதுகாப்பின் மீதான கட்டுப்பாட்டை தான் இழந்துள்ளதால் 1000 கென்யா பொலிஸ் உத்தியோகத்தர்களை ஹெய்ட்டிக்கு வரவழைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக ஹெய்ட்டி பிரதமர் கென்யா சென்றிருந்த தருணத்தில் கடந்த வாரம் தலைநகரில் வன்முறைகள் வெடித்தன.

haiti_pm.jpg

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுத கும்பல் ஒன்று சட்ட அமுலாக்கல் மற்றும் அரச கட்டிடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

கடந்த வாரம் ஆயுத குழுக்கள் ஹெய்ட்டியின் மிகப்பெரிய சிறைமீது தாக்குதல் நடத்தி 3500 க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ததை தொடர்ந்து அரசாங்கம் தலைநகரில் அவசரநிலையை பிரகடனம் செய்திருந்தது.

சிறைச்சாலை மீதான தாக்குதலிற்கு உரிமை கோரிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் ஹென்றி அரசாங்கத்தை பதவிகவிழ்ப்பதற்காகவே இந்த வன்முறை என தெரிவித்துள்ளார்.

ஏரியல் ஹென்றி பதவி விலகாவிட்டால் அவருக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவு வழங்கினால் அவர்கள் எங்களை உள்நாட்டு யுத்தம் இனப்படுகொலையை நோக்கி கொண்டுசெல்வார்கள் வன்முறை கும்பலின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டி தலைநகர் தற்போது பெருமளவிற்கு வன்முறை கும்பலின் பிடியில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐநா ஏனைய பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளில் வன்முறை கும்பல்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஹென்றி வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில் சர்வதேச விமானநிலையத்தை முற்றுகையிட்டுள்ள வன்முறை கும்பல்  பிரதமர் நாட்டிற்கு திரும்புவதை தடுத்துள்ளது.

haiti_vio_4.jpg

இந்த குழப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த குழப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதுவரை வன்முறைகள் காரணமாக 300000க்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஹெய்ட்டியில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள அதேவேளை அரசியல் வன்முறையும் வரட்சியும் தீவிரமடைந்;துள்ளதால் சுமார் 5.5 மில்லியன் மக்களிற்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது.

haiti_viol4.jpg

https://www.virakesari.lk/article/178500

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.