Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல், நாகம்மை நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (17). பள்ளி மாணவரான இவர் அண்மையில் 12ஆம் தேர்வு வகுப்பு எழுதி முடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 29), தனது வீட்டு மொட்டை மாடியில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. பாதி உடல் கருகிய நிலையில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார் சந்தோஷ். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

90 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடுகளின் மேலே அல்லது விவசாய நிலங்களுக்கு மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் குறித்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றன. வீடு கட்ட நிலம் வாங்கும்போது, அதற்கு மேலே உயரழுத்த மின்கம்பிகள் சென்றால் அல்லது அருகே உயரழுத்த மின்கோபுரங்கள் இருந்தால் அந்த நிலத்தை வாங்க மக்கள் அச்சப்படுகிறார்கள்.

விவசாய நிலங்களிலும்கூட உயரழுத்த மின்கம்பிகள் சென்றால் குட்டைப் பயிர்களைப் பயிரிடுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று செல்போனில் பேசியதால்தான் பள்ளி மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததா? உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா?

 

உயரழுத்த மின்கம்பிகளுக்கு கீழே நின்று செல்போன் பயன்படுத்தலாமா?

உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

“செல்போனில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சுக்கும் உயரழுத்த மின்கம்பிகளில் செல்லும் மின்சாரத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. அதற்குக் கீழே நின்று செல்போன் பயன்படுத்தினால், எந்தக் குறுக்கீடும் ஏற்படாது” என்கிறார் அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் சக்திவேல்.

தொடர்ந்து, “உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று பேசினால், ஒருவித இரைச்சல் ஏற்படலாம், செல்போன் சிக்னல் குறைவாகக் கிடைக்கும். மற்றபடி செல்போன் பேசுவதால் ஒருவர் மீது மின்சாரம் பாயாது. ஏனெனில் உயரழுத்த மின்சாரமாகட்டும் அல்லது வீட்டில் பயன்படுத்தும் மின்சாரமாகட்டும், கம்பிகள் அல்லது ஒரு மின்கடத்தி இல்லாமல் அதைக் கடத்த முடியாது அவர்,” என்கிறார்.

அதேவேளையில், இதில் கவனிக்க மற்றுமோர் அம்சமும் இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் சக்திவேல். காற்று என்பது ஒரு இன்சுலேட்டர் மின்கடத்தாப் பொருள்). ஆனால் "காற்றில் ஈரப்பதம் கூடும்போது, இந்த மின்கடத்தாத் தன்மை குறையும். அத்தகைய சூழலில் வீட்டின் மேலே உயரழுத்த மின்கம்பிகள் செல்லும்போது, நிலத்துக்கும் கம்பிகளுக்கு இடையே நிற்கும் நாம் ஒரு மின்கடத்தியாக மாறிவிடுவோம்."

அவரது கூற்றின்படி, அப்போது நமது கையில் செல்போன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் உடலின் வழியாக மின்சாரம் பாயக்கூடும். எனவே அந்தச் சிறுவனுக்கு செல்போன் மூலமாக மின்சாரம் பாய்ந்திருக்காது. செல்போனின் மின்காந்த கதிர்வீச்சு, உயரழுத்த மின்சாரத்தின் பாதையில் குறுக்கிடும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

"அதுபோல மின்காந்த கதிர்வீச்சால் அல்லது செல்போன் கோபுரங்களால் புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறுகிறார் பேராசிரியர் சக்திவேல்.

“உதாரணமாக ரயில் நிலையங்களில் அல்லது ரயிலின் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் உரசி, சிலருக்கு மின்சாரம் பாய்ந்ததாக செய்திகள் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் நிலத்திற்கும் கம்பிகளுக்கும் இடையே ஒரு மின்கடத்தியாக மனித உடல் மாறிவிடும், இதனால் மின்சாரம் பாய்ந்திருக்கும்.

இதேபோல சிறுவன் இருந்த பகுதியில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாகச் சென்றிருக்கும். அதனால் உடலுடன் ஏதேனும் தொடர்பு ஏற்பட்டு இது நடந்திருக்கலாம்,” என்கிறார் பேராசிரியர் சக்திவேல்.

 

மழைக்காலங்களில் உயரழுத்த மின்கம்பிகளுக்கு கீழே நின்றால் என்ன ஆகும்?

உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் என்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக இந்த விபத்து நடந்திருக்கும் எனக் கேட்டபோது, “நான் முன்பு கூறியது போல, காற்றின் ஈரப்பதம் கூடும்போது, அதன் மின்கடத்தாத் தன்மை குறையும்.

மழைக்காலங்களில் இது அதிகமாக நடக்கும். அப்போது மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மின்கசிவுகள்கூட ஏற்படும்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில்கூட சிறுவனுக்கு மின்சாரம் பாய்ந்திருக்கலாம். எனவே மழைக் காலங்களில் அல்லது காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள நேரங்களில் உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நிற்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்,” என பேராசிரியர் சக்திவேல் கூறினார்.

உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களை வாங்கலாமா?

உயரழுத்த மின்கோபுரங்கள் இருந்தால் அல்லது மின்கம்பிகள் நிலங்களின் மேலே சென்றால், அந்த நிலத்தை வாங்கி வீடு கட்டலாமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் ஒருவர், “மின்பாதைகளுக்குக் கீழே இருக்கும் தரிசு நிலங்களை இரண்டு காரணங்களுக்காக வாங்கலாம், ஒன்று வீடு கட்ட அல்லது விவசாயத்திற்கு," என்று தெரிவித்தார்.

மேலும், "விவசாயத்திற்கு என்றால் அரசே அதற்கான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த நிலங்களில் நெல், காய்கறிகள் போன்ற குட்டைப் பயிர்கள்தான் வளர்க்க வேண்டும். தென்னை போன்ற உயரமான மரங்கள் நடுவதற்குத் தடை உள்ளது. அடுத்ததாக தரிசு நிலங்களை வீடு கட்டும் நிலங்களாக மாற்றும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாகச் சென்றால் அங்கே வீடு கட்டக்கூடாது என நிலத்தை விற்பவர்களுக்குத் தெரியும், ஆனால் குறைவான விலையில் அதை விற்று விடுகிறார்கள். இதனால் ஆபத்து என்பது அங்கு வீடு கட்டி வசிப்பவர்களுக்கே,” என்கிறார் அவர்.

“மின்சாரத்தில் இரண்டு வகை உண்டு, ஹை-டென்ஷன் லைன் (High tension line) மற்றும் லோ-டென்ஷன் லைன் (Low tension line). இதில் ஹை-டென்ஷன் லைனில் 50 கிலோவாட்களுக்கு குறைவாக மின்சாரம் பாய்ந்தால், வீட்டிற்கும் கம்பிகளுக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். 50 முதல் 200 கிலோவாட் என்றால் கண்டிப்பாக 15 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

இதில் 110 கிலோவாட் அல்லது அதற்கு மேல் என்றால் எக்ஸ்ட்ரா ஹை-டென்ஷன் லைன் எனச் சொல்வார்கள். இதன் மூலம் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும். அதில் பயன்படுத்தப்படும் கம்பிகளும் மிகவும் கனமாக இருக்கும். எனவே கண்டிப்பாக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட இடைவெளி விட்டே வீடுகள் கட்டப்பட வேண்டும்,” என்று கூறினார் அந்த அதிகாரி.

தொடர்ந்து பேசிய அவர், “சிலர் வீட்டைப் பெரிதாகக் கட்ட வேண்டும் என ஆசைப்பட்டு, இந்த இடைவெளியை ஒழுங்காகப் பின்பற்றுவதில்லை. அது தவறு, அத்தகைய சூழ்நிலைகளில்தான் பல விபத்துகள் ஏற்படுகின்றன.

நாங்களும் பல இடங்களில் ஆய்வு செய்து, ஹை-டென்ஷன் லைன் செல்லும் பகுதிகளில் 15 அடிக்கும் குறைவான இடைவெளியில் வீடுகள் கட்டப்பட்டால் அதற்கு மின்னிணைப்பு கொடுப்பதில்லை அல்லது அந்தப் பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கிறோம்,” என்றார்.

 

உயரழுத்த மின்கம்பிகளால் ஏற்படும் ஆபத்துகள்

உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

“மழைக் காலங்களில் அல்லது இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் கண்டிப்பாக சாதாரண மின்கம்பங்கள் அடியில்கூட நிற்கக்கூடாது. அதிலும் உயரழுத்த மின்கம்பிகள் அல்லது கோபுரங்கள் என்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

இப்போதைக்கு இன்சுலேட்டராக (Insulator) பாலிமரை (Polymer) பயன்படுத்தி வருகிறோம். இதனால் முடிந்த அளவு அசம்பாவிதங்களைத் தவிர்த்து வருகிறோம். ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடந்து விடுகிறது. எனவே மக்களும் நிலத்தை வாங்கும்போது, குறைவான விலையில் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு வாங்காமல் கவனமாக இருக்க வேண்டும்," ," என்று விளக்கினார் தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர்.

மேலும், உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் வீடுகளுக்கு இடையே இடைவெளி குறைவாக இருந்தால், சில நேரங்களில் அந்த மின்கம்பிகளில் அதிக மின்சாரம் பாயும்போது வீட்டிலுள்ள மின்சாதனங்கள் சேதமடையும்.

"பொருள் சேதம் மட்டுமில்லாமல் உயிர்ச் சேதமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், இத்தகைய பகுதிகளில் வீடு கட்ட நிலம் வாங்கும்போது ஒரு மின்பொறியாளரிடம் ஆலோசனை கேட்பது நல்லது,” என்று கூறினார் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரி.

https://www.bbc.com/tamil/articles/c84d2rmn7djo



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
    • எம்ம‌வ‌ர்க‌ள் போடும் கூத்தை பார்க்கையில் ம‌ண்ணுக்காக‌ போராடி ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கும்....................   2009க்கு முன்னும் ச‌ரி 2009க்கு பின்னும் ச‌ரி எம‌க்காக‌ உயிர் நீத்த‌வ‌ர்க‌ளுக்கு நானோ நீங்க‌ளோ துரோக‌ம் செய்து இருக்க‌ மாட்டோம்   ஆனால் 2009க்கு பிட் பாடு ப‌ல‌ துரோக‌ங்க‌ளை பார்த்த‌ பின் தான் அண்ணா இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான்   த‌மிழ் தேசிய‌ம் என்று எம் ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ கூட்ட‌ம் தான் ம‌க்க‌ள் ப‌டும் அவ‌ல‌ நிலைய‌ க‌ண்டு கொள்ளாம‌ த‌ங்க‌ட‌ குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்வை   ம‌கிந்தாவோ அல்ல‌து ம‌கிந்தாவின் ம‌க‌ன் இப்ப‌வும் ஆட்சியில் இருந்து இருந்தால் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளின் ர‌த்த‌ம் இன்னும் கொதிச்சு இருக்கும் எம் இன‌த்தை அழித்த‌ குடும்ப‌ம் எங்க‌ளை ஆட்சி செய்வாதான்னு   இப்ப‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் புரிந்து இருக்கும் இனி நாட்டை யார் ஆண்டால் நாடு ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் என்று   ம‌கிந்தா குடும்ப‌ம் கொள்ளை அடிச்ச‌ காசை அனுரா அர‌சாங்க‌ நிதிதுறையில் போட்டால் இல‌ங்கையின் பாதி க‌ட‌னை க‌ட்டி முடித்து விட‌லாம்     ஆம் இனி எம்ம‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முடியாது உல‌க‌ம் கைபேசிக்குள் வ‌ந்து விட்ட‌து ந‌ல்ல‌து கெட்ட‌தை அறிந்து அவையே சுய‌மாய் முடிவெடுப்பின‌ம்....................   இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அவ‌ர்க‌ள் கையில் தான் எல்லாம்..................      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.