Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"முதலாவது எழுதப்பட்ட சட்டம்"
 
 
ஒரு சட்ட எழுத்துருச் செதுக்கப்பட்ட களிமண் பலகைத் துண்டும் [வில்லையும்] செம்பினால் வடி வமைக்கப்பட்ட உர்-நம்மு [அல்லது ஊர் நம்மு / Ur-Nammu] என்ற சுமேரிய மன்னரின் உருவச் சிலையும் ஈராக்கில் உள்ள நிப்பூரில் கண்டு பிடிக்கப்பட்டது. இது கி மு 2100 ஆண்டை சேர்ந்தது. இந்த உர்-நம்மு என்ற சுமேரிய மன்னரின் குற்றவியல் சட்டம் 17 விதிகளை கொண்டு உள்ளது. அது மேலோட்டமாக பல்வேறு குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் கூறுகிறது.
 
சுமேரியர்களின் கண்டு பிடிப்புகளில் மிகவும் உறுதியானதும் தொலை நோக்கானதும் இந்த உர்-நம்முவின் சட்ட விதித் தொகுப்பு ["The Code of Ur-Nammu"] ஆகும். எல்லா பண்பாடும் அல்லது நாகரிகமும் ஏதாவது சில சமூக ஒழுங்கமைப்பும் சச்சரவுக்கான தீர்மானமும் வைத்து இருந்தாலும், சட்டம் என்பது ஒரு தனித் துவமான தோற்றப்பாடு [distinct phenomenon] ஆகும். சட்டம் என்பது எழுதப்பட்டு, குற்றம் செய்தவர்களுக்கு அதன் மூலம் தண்டனை வழங்கப்பட்டு [நிர்வகிக்கப் பட்டு], சச்சரவு ஏற்படுத்திய அந்த முரண்பாடுகள் தீர்க்கப் படுகிறது. முன்னைய சுமேரியாவில் சட்ட முரண் பாடுகள் அல்லது பிரச்சனைகள் ஒரு சில வழி முறைகளை பின்பற்றின. நீதிமன்றத்திற்கு அந்த சச்சரவுகள் போக முன், அந்த பிரச்சனையில் பங்கு பற்றிய எல்லா தரப்பினர்களுக்கும் இடையில் முதலில் சமாதானம் செய்ய முயற்சிப்பார்கள். இந்த செயல் முறை மச்க்ஹீம் [maskhim] என்று அழைக்கப்படும் ஒரு நடுவரின் [arbitrator] தலைமையில் நடைபெறும். இது தோல்வியுறும் தருவாயில், இந்த முரண்பாடு நீதி மன்றத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு டிகுட்ஸ் [dikuds] என்று அழைக்கப்படும் நீதிபதிகள் குழு [panel of professional judges] அவர்களின் விவாதத்தை கேட்கிறது. கி மு 2400 ஆண்டு அளவில் சுமேரிய சமுகத்தில் சட்டம் இயல்பாக / சாதாரணமாக இருந்தது.
 
இந்த சட்டம் பலவீனமானவர்களை, ஏழைகளை, விதவைகளை, அனாதைகளை பணக்காரரிடம் இருந்து காப்பாற்ற வடிவமைக்கப்பட்டது ஆகும். இந்த உர்-நம்முவே சிறந்த பெரிய சிகுரத் கட்டியவர்கள் ஆகும். பின்பு வந்த "கண்ணுக்குக் கண்" அல்லது "பலிக்கு பலி"[“eye for an eye,”] என்ற சட்டங்கள் போல் அல்லாது, உதாரணமாக ஹம்முராபி சட்ட தொகுதி [The Code of Hammurabi], இது , இந்த ஆரம்ப கால சட்டம், தீங்கு இழைத்ததற்கான நட்ட ஈடு [monetary compensation] வழங்குவதில் கவனத்தை செலுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியை நிர்வாகிக்கும் பொறுப்பு அரசனிடம் விடப்பட்டது. எனினும் அவரின் வேலை பலு காரணமாக, எல்லா வழக்குகளையும் அவரால் கேட்க முடியவில்லை. ஆகவே நீதிபதி குழு ஒன்றிற்கு தனது அதிகாரத்தை ஒப்படைத்து அவர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட வழக்கை கையாண்டார். என்றாலும் அங்கு ஒரு நடுவர் குழு [juries] வீற்றிருக்கவில்லை. ஒரு வழக்கு ஆரம்பிக்கும் போது, அதில் ஈடு படும் இரண்டு பகுதியினரும் முதலில் உண்மை மட்டுமே சொல்வதாக சத்திய பிரமாணம் எடுக்க வேண்டும். அதன் பின் தமது வாதங்களை / நியாயத்தை நீதிபதிகளின் முன் எடுத்து வைக்க வேண்டும். அத்துடன் அதற்கான ஆதாரங்களையும், சாட்சிகளையும் சமர்பிக்க வேண்டும்.
 
அவர்களின் சம்பவம் பற்றிய கதையில் மாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்துக்கள் காணப்படின், குற்றம் சாட்டப்பட்ட கட்சி பொய் சொல்வதாக அங்கு கருதப் படுகிறது. ஆகவே அங்கு ஒரு கடும் சோதனை செய்து [trial by ordeal] அதில் தெய்வீக வழிகாட்டல் [divine guidance] நாடப்படுகிறது.
 
உதாரணமாக குற்றம் சுமத்தப் பட்டவரை ஆற்றில் எறிகிறார்கள். அவர் அதில் இருந்து உயிர் பிழைத்தால், அவர் அப்பாவி என முடிவு எடுக்கிறார்கள். தீர்ப்பு நியாயமானது இல்லை என எந்த கட்சியும் நம்பினால் அவர்கள் நேரடியாக அரசனுக்கு முறை இடலாம். இந்த முறையிடும் வழக்கம் இன்னும் , குறிப்பாக ஆங்கிலோ - சாக்சன் சட்டத்தில் [Anglo-Saxon law.], இருப்பதை காண்க.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 No photo description available. 18814255_10209428134443072_8161308256123882933_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Ieyqko-vzAUAb7pXff8&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCiFUayjX5aXO49taBvq2khuVVWmIXJsX7tazW1XKc7LA&oe=664CA8B1
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.