Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பண்டைய தமிழரின் செல்வம் பற்றிய சிந்தனை"
 
 
இன்று நாம் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கும், வளமோடு வாழ்வதற்கும் வழிவகுப்பன, நம் முன்னோர்களின் வாழ்க்கை நெறிகள் ஆகும். இந்த நெறிமுறைகளைப் பத்திரப்படுத்தி அதன் மூலம் எம்மை இன்றும் பக்குவப் படுத்திக் கொண்டு இருப்பன பண்டைய சங்க இலக்கியங்கள் ஆகும்.
 
உதாரணமாக பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும், பொருள் இல் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை என்பதையும், பகுத்துண்டு வாழ்தல் வேண்டும் என்பதையும், மற்றும் நாம் உழைத்து, அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சில சங்க பாடல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
 
அப்படியான மூன்று பாடல்களை எடுத்துக் கட்டாக கிழே தருகிறோம்.
 
 
ஒன்று: குறுந்தொகை 283
 
"உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே."
 
குறிப்பு: பாட்டனார் தேடி வைத்த பொருளைச் சிதைப்போர் உயிரோடு உள்ளவராகக் கருதுவது நம் தமிழர் மரபில் இல்லை என்பதாகும். தாமே தம் முயற்சியால் பொருள் ஈட்டாமல், முன்னோர் ஈட்டி வைத்துள்ள செல்வத்தைச் சிதைப்பவர்கள் செல்வமுடையோர் எனச் சொல்லப்பட மாட்டார்கள். நம் பெற்றோர் சேர்த்த செல்வத்தை நாம் செலவு செய்யும் போது, அந்த செல்வத்தின் மதிப்பை நாம் உணராமல் போகிறோம். தன் முயற்சியால் தேடாமல் வாழ்வது, இரந்து வாழ்தலை விட இழிந்தது என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
 
இப்பாடல் வழியாக மேலும் "பகுத்துண்டு வாழ்தல் வேண்டும்", "நாம் உழைத்து, அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும்" என்பதயும் அறியமுடிகிறது.
 
 
இரண்டு: அகநானூறு 151
 
"தம் நயந்து உறைவோர்த் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார்நல்கூர்ந்தோர்! என
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆபமன் வாழி தோழி கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல் முதற் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறுங்கால் உழுஞ்சலி
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
அரிக் கோற் பறையின் ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை்ப பொருந்தி செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண்குரல்
கணிவாய் பல்லிய காடு இறந்தோரே!"
 
குறிப்பு: சங்ககாலத் தலைவன் ஒருவனுடைய சிந்தனை இப்படி இருக்கிறது. பணம் [பொருள்] எதற்கு?
அவரை விரும்பி வாழ்வோருக்கும், அவரால் விரும்பப்படுவோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், நகைமுகம் காட்ட முடியாமல் வறுமையில் வாடுவோருக்கும் நல்கி அவர்களை வாழவைப்பதற்குப் பொருள் வேண்டுமாம்!
 
இதனால் வரும் மகிழ்ச்சி ஒன்று, தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக் கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று. இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் பொருள்! அதனால் பொருளைத் தேடவேண்டும்" அதாவது தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் இங்கு கலக்கிறது.
 
 
மூன்று: புறம் - 189
 
"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே''
 
குறிப்பு: எல்லோருக்கும் அடிப்படையானது உணவு, உடை, உறைவிடம் … போதும் என்று மனிதன் சொல்வது உணவுக்கு மட்டுமே! மானம் காக்கவே ஆடை அணிகிறோம்! உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே!
 
இவை போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும். உயிர்கள் யாவுக்கும் உணர்வுகள் பொதுவானது (உண்பது நாழி; உடுப்பவை இரண்டே)
 
இந்த செயல்கள் பணக்காரனுக்கும் ஏழைக்கும் [அரசனுக்கும், ஆண்டிக்கும்] பொதுவானது. பெற்ற செல்வத்தைக் அடுத்தவருக்குக் கொடுப்பதே சிறந்த அறமாகும்.கொடுத்து வாழ்வோர் இறப்புக்குப் பின்னரும் வாழலாம்!!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
13891963_10207068565575325_1872993241266155402_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gFdnafZ-LI0Q7kNvgFrwGsL&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDkiSIvsODbSNCuWCWxKUhUqOnyVk57tT2BnWxoy4lfNw&oe=667EA064 13939616_10207068566175340_5480747867431080034_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nxYdYnCf-70Q7kNvgGUcaiS&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDyIdgjNA34p-lgfolMSq-AvI_0K7NvJ6Zkc1IdQpDFVw&oe=667EC2D8 13938617_10207068566855357_5317636283990016789_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ifK7oTFXpRMQ7kNvgHfgn0A&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBaDerCtcn-8pjk25imPQKB1MdTKc3b5GZrirgdWg5aLw&oe=667EA5C2
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.