Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா]
 
 
மக்கள் மரணம் பற்றி அறிய ஆவலாகவும் அதேநேரம் கவலையாகவும் உள்ளார்கள். ஏனென்றால்,
 
1] ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்ககள் மற்றும் அன்பானவர்களுக்கு, அது ஒரு வேதனையை கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவு முன்னையதில் இருந்து சீர்குலைகிறது அல்லது மாற்றி அமைகிறது,
 
2] வாழ்க்கையின் முழுமையற்ற அபிலாஷைகள் [Incomplete aspirations of life],
 
3] மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற விளக்கம் இல்லாமை ஆகும்.
 
மரணத்தின் கருத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், பதட்டத்தைக் குறைப்பதற்கும் மரண பயத்தை குறைப்பதற்கும் கட்டாயம் வழிசமைக்கும். இதைத்தான், விஞ்ஞானமும், இலக்கியமும் சமயமும் செய்கின்றன.
 
என்றாலும் அவைகளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு காரணம் அவர்களின் அறிவு, பண்பாடு மற்றும் நம்பிக்கைகள் ஆகும். நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக, அறிவிற்கு ஒவ்வாததாக இருந்தாலும், அது மற்றவர்களை பாதிக்காத வரை பிரச்சனை இல்லை. என்றாலும் மரணத்தை பற்றிய அல்லது மரணத்தின் பின் வாழ்வு பற்றிய எல்லா நம்பிக்கைகளும் அப்படி அல்ல. அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வேண்டாத, அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளை, நீங்கள் எந்த சமயத்தை பின்பற்றினாலும் தூக்கி எறியவேண்டும். இதைத்தான் அறிஞர்களும் சித்தர்களும் கூறினார்கள்.
 
மேலும் பொதுவாக ஆண்கள் மரணத்தை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஓரளவு சமரசம் செய்கிறார்கள், ஆனால் பெண்கள் அப்படி இல்லை. மற்றும், மரணம் பற்றிய கவலை, அதிக மத நம்பிக்கை கொண்டவர்களிடத்தில் குறைவாக காணப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம் சில 'சமயங்கள்', இறப்பை இன்னும் ஒரு தொடக்கத்தை குறிப்பதாக கருதுவதாகும் [some religions associate death with another beginning]. இது ஓரளவு பாதிப்பில்லா மூடநம்பிக்கை. அப்படியான, ஆத்மாவின் விடுதலை அடையும் வரை, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் இறையியலில் திருவள்ளுவர் நம்பினார் [theology of cycle of births and deaths till the liberation of soul is attained]. அதன் விளைவுதான் குறள் 339 எனலாம். அதில் அவர்:
 
"உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"
 
என்று கூறுகிறார். உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள். என்றாலும் தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது. அது தான் இறப்பது. அதாவது தூங்குவது போன்றதே இறப்பு, தூங்கிய பின்னர் விழிப்பது போன்றதாம் [மீண்டும்] பிறத்தல் என்கிறது.
 
இந்த சிந்தனையில், பாவ புண்ணியங்களை பொறுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நம்பிக்கையும், அதை ஒட்டிய கருத்துக்களும் கூட தெரிகிறது. ஒருவர் நன்றாக ஆழ்ந்து தூங்கும் போது, இவ்வுடம்பைப் பற்றிய எண்ணத்தையோ, அது இருக்கும் நிலையைப் பற்றியோ மூளை நினைவு படுத்திக் கொண்டிருப்பதில்லை. அது ஓரளவுக்கு உயிரியக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும். தானும் ஓய்வு கொண்டு, உயிர், உடல் இவற்றுக்கும் ஓய்வினைத் தந்து இயங்குகிறது.
 
தூக்கம் என்பது ஏறக்குறைய இறந்த நிலை தான். ஒருவருக்கு. ஒவ்வொரு நாளும் உறங்கி விழிப்பது, பிறப்பது போல என்பது, தூங்குவது இறப்பானால், விழிப்பது பிறப்புதானே என்கிற ஒரு வாதத்தை ஒட்டிய கருத்து ஆகும். நாம் தூங்கி விழிக்கும் போது நமக்கு நேற்று நடந்தது, இன்று நடக்க வேண்டியது, நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றிய அறிவும் நினைவும் இருக்கின்றன. ஆனால் பிறக்கும் ஓர் உயிருக்கு - ஒரு கருத்துக்கு, மறு பிறப்பு என்று ஒன்று இருந்தால் கூட? - கடந்த பிறவிகளின் நினைவுகள் வருவது இல்லை, ஒரு சிலருக்கு இருப்பதாக நாம் செய்திகள் மூலம் கேள்விப் பட்டாலும் கூட அது இதுவரை அறிவியல் ரீதியாக உறுதிப் படுத்த வில்லை.
 
பொதுவாகப் பார்க்கையில், இறப்பு என்பது நினவுகளை முற்றிலும் மறக்கச் செய்கிற நிகழ்வு. பிறப்பு என்பது எவ்வித நினைவுகளையும் சுமந்து வராத நிகழ்வு. பிறப்பை ஒரு தற்செயலாக தன்னிச்சையான செயலாகச் சொல்லலாம். இறப்பை ஒரு உறுதியான இறுதி செயலாகச் சொல்லலாம். இந்த கருத்தை யொட்டிய பாடல்களை, நாலடியார், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலிய வற்றிலும் பார்க்கலாம்.
 
“விழித்திமைக்கும் மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு”
 
என்கிறது நாலடியார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்,
 
“ஓடு புனற்க ரையாம் இளமை உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி”
 
என்கிறது.
 
“பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மை யின்”
 
என்கிறது மணிமேகலை. இந்நிலையாமையை நாம் உணர்வதில்லை என்று சுந்தரர், இன்னும் ஒரு தேவாரத்தில்,
 
"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்"
 
என்று கூறுகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர்
 
"வறிதே நிலையாத இம்மண் ணுலகில் நரனா கவகுத் தனைநா னிலையேன்"
 
என்று பாடுகிறார். இவை எல்லாம் இறப்பை பற்றிய அன்றைய சிந்தனைகள். அரசனின் ஆணை தன்னைக் கட்டுபடுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர், திருநாவுக்கரசர், நாம் யாருக்கும் குடி அல்ல; நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். நரகத்தில் இடர்ப்படோம். அதாவது ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம். அதாவது, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது. என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே என்று பகிரங்கமாக அறை கூவல் விடுகிறார். இங்கும் இறப்பை பற்றிய அன்றைய கருத்து தெளிவாகிறது.
 
"நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை."
 
திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மேலும் சில பாடல்களைக் காண்கிறோம். உதாரணமாக “நாள் என்பது, ஒவ்வொரு நாளாக வாழ் நாளின் உயிரை குறைக்கும் கருவி” என பொருள் படுத்தி, குறள் 334
 
“நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்"
 
என்று சிறப்பாக சொல்கிறது. அதாவது, ஒவ்வொரு நாள் முடிவும் உங்களை வாழ்க்கையின் முடிவான இறப்பிற்கு கிட்ட கிட்ட கொண்டு போகிறது. யமனின் வாள் போன்றது நாள் என்கிறது. இந்த வாளை பாவித்தே உங்களின் வாழ்வு காலம் அளக்கப்படுகிறதாம். அதாவது ஒரு நாள் முடியும் போது, யமன் வாழ்வின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விட்டு, இன்னும் இறப்பில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என அளக்கிறான் என்கிறது.
 
இறப்பு மனிதனின் ஒவ்வொரு வாழ்வின் அடியையும் பின் தொடர்கிறது. என்றாலும் மனிதன் இந்த நிலையற்ற பொருட்களையும் தொடர்புகளையும் இன்னும் வைத்திருக்கிறான். வாளின் இறுதி பிரயோகத்தில், அவனது வாழ்வு எந்தவித அறிவிப்பும் இன்றி துடைத்து எறியப்படுகிறது. இறப்பின் பின் மனிதனை தொடர்வது அவன் செய்த நல்ல செயல்களின் சிறப்பு மட்டுமே என்று மேலும் கூறுகிறது. இதை உறுதி படுத்துவது போல பட்டனத்தார்,
 
"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே"
 

என்று கூறுகிறார். 

இறக்கும் தருவாயில் படுத்து இருக்கும் போது, கண் ஒன்றையும் பார்க்காது, காது ஒன்றையும் கேட்காது, எல்லா உறுப்புகளும் தளர்ந்து விடும், நா வாய்க்குள் மாட்டிக்கொள்ளும், கடைசி மூச்சு விக்கலாக வரும் - அந்த நேரத்தில் புகழ்த் தகுதியுடைய எந்த காரியமும் செய்ய முடியாது. அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை வரும் முன், உடனடியாக நற்பணபுள்ள, நன்மார்க்க செயலை செய்து சிறப்பு பெறுவாயாக. நேரத்தை வீணாக்க வேண்டாம். இறப்பு எந்த நேரமும் கதவை தட்டலாம் என்று திருவள்ளுவர், தனது குறள் 335 இல்
 
"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்"
 
என ஆலோசனை கூறுகிறார். இந்த ஆலோசனையை உறுதி படுத்துவது போல மகாபாரதத்தில் இப்படி ஒரு சம்பவம் காணப்படுகிறது. ஒரு பிரமணன் பாண்டவர்களின் அரண்மனை வாசலில் வந்து உதவி கேட்டான். தர்மன் ஒரு முக்கிய வேலை செய்ய வேண்டி இருந்ததால், அடுத்த நாள் வந்து தருமத்தை பெறும்படி கூறுமாறு செய்தி அனுப்பினான். பக்கத்தில் இருந்த பீமன் தனது மூத்த சகோதரனிடம் கேட்டான்: அண்ணா, எனக்கு அதிசயமாக இருக்கிறது, நீங்கள் நாளை உயிருடன் கட்டாயம் இருப்பீர்கள் என்பது உறுதியா? தருமனுக்கு தனது முட்டாள்தனம் விளங்கி விட்டது. உடனடியாக பிராமணனின் தேவையை தருமன் கவனித்தான் என்கிறது அந்த கதை.
 
ஒவ்வொன்றும் மற்றதை விட சிறந்தது. ஆயினும், எவரையும் பயம் கொள்ள வைத்த குறள் – ”நேற்று வரை உயிரோடு இருந்தான், ஆனால் இன்று இல்லையே” என்று சொல்லுவதைப் போன்று நிலையற்றை தன்மை உடையது இந்த உலகம் என்று கூறும், குறள் 336 ஆகும். அது,
 
."நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு".
 
எனக் கூறுகிறது.
 
“நேற்று வரை உன்னுடன், உண்டு, பேசி, சிரித்து, சண்டையிட்டு, மகிழ்ந்திருந்த நெருங்கிய நண்பன் இன்று இல்லை, இனி ஒருபோதும் பேசவோ, சண்டையிடவோ போவதில்லை, இதோ உன் முன் மவுனமாக, மரணமாய், கிடத்தப்பட்டுள்ளான், இந்த உலகு, இத்தகைய சிறப்பு உடையது”
எனச்சொன்ன இந்த குறள். எவ்வளவு கொடுமையானது? நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம், இன்றைய தினமும் நேற்றையை போலவோ, நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா? என்று கட்டாயம் புலம்பி இருக்கும். நீ விரும்பும் இந்த உலகில் எது மிகவும் பெரியது?. ஒவ்வொரு நாளும் மக்கள் இறக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒருவர் ஒருவரை மரணத்தால் இழக்கிறார். வாழ்வு நிலையற்று இருக்கும் போது, நிலையற்ற பொருட்களை, நல்ல செயல்களை செய்யாமல், வைத்திருப்பதால் என்ன பயன்? இறந்த பின் என்னத்தை கொண்டு போகப்போகிறாய்? மீண்டும் மகாபாரத்தத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம், யக்கர் / யக்ஷகர் ஒருவனின் கேள்வி ஒன்றிற்கு தருமன் இப்படி பதில் அளிக்கிறான்.
 
யக்கர்: இந்த உலகில் மிகவும் வியப்படையச் செய்வது எது ?
தருமர்: ஒவ்வொரு நாளும் மக்கள் மரிணிக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும், உயிருடன் இருக்கும் இந்த மனிதன் தான் சாகப்போவதில்லை என நினைக்கிறான். இது தான் இந்த உலகின் திகைக்கவைத்த ஒன்று என்கிறான்.
 
உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் பிறந்து வாழ்ந்து மாண்டு போய் விடுகின்றன. உயர்ந்த அறிவு படைத்த மனிதனும் அதே போல் பிறந்து வாழ்ந்து மாண்டு போகின்றான். இவை உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும் என்ற கருத்தை உடையவர். இவர் தனது ஒரு பாடலில்
 
" ... பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
இனிச்சாகும் பிணங்க ளேநீர்
கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
என்னபயன் கண்டீர் சுட்டே ...
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
சம்மதிக்கும் பேய ரேநீர் ... "
 
[திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5609]
 
என்று கேட்கிறார். மேலும் இவர்
 
"இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்?"
 
[திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5600]
 
என்றும் தனது அவாவை வெளிப்படுத்துகிறார். அதாவது உலகத்து நன்மக்களே! செத்தவர்களை அடக்கம் செய்ய எடுக்கும் போது வாய்விட்டுப் புலம்புகின்றீர்களே அன்றிச் சாவாத பெரிய வரத்தை ஏனோ பெறாது ஒழிகின்றீர்கள் என கேட்க்கிறார். அது மட்டும் அல்ல, பறை மேளத்தின் சத்தம் கேட்டு தான் கலங்குவதையும் கூறுகிறார்.
 
"மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின்
வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம்
கடவுள்நீ யேஅறிந் திடுவாய்"
 
[திருவருட்பா 3428.]
 
மெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானே! உலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்; உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கை என்கிறார். இறுதியாக திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றை பார்ப்போம்:
 
"நடலை வாழ்வுகொண்டு என் செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிரமாணமே
கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே."
 
உடலைப் பேணுதலிலேயே காலத்தை வீணாக்காதீர். இவ்வுடலானது ஒரு நாள் உயிர் பிரிந்த பொழுது ஊரார் பிணம் என்று சொல்லி வெறுக்கத்தக்க பொருளாகக் கிடக்கும் என்கிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
342975840_5798682293588575_2165190856896525177_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EkJYHmJ2AJQQ7kNvgEJejky&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDMiKbm-3TVJ08tAjxpogIw02lzVku5xB34-JXd9LO8vg&oe=666805FD 17457596_10208857997029993_1849726036639288999_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nQQbJcWJJukQ7kNvgH4_TtA&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCtMPK90xARdxenr51AzC9K8md8YUVPZU3eEGRlhYMqPQ&oe=66898B98 343074830_1470281653719455_3864009263116031218_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=12giZVW_EdgQ7kNvgGyjpxJ&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBGXX_g3WMxTEZgq2kGGSZ1l4K7esfj6RAl7e3_4eIvQw&oe=6667D1C0 343940878_1415409199207443_5523532166689790302_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_dUaK2pw2YIQ7kNvgFLwHzW&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYCMR_ou10XuEZIgzuVW820-wyc85ugG3lIgDir0sWdH8w&oe=6667D4BA 343777693_6146272628819993_1557751940759376356_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gSw7qprKEzEQ7kNvgGgfrV3&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDwjkU6uuOXQwArw_uWBzZgyLbI6-oUatFiHDSNmme4EA&oe=6667FDC3 11392982_10204493745966444_7406603746135351639_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Lj_oaVKVTO8Q7kNvgHl6AD1&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAaShe5rqEo8KJ1IP9xORetYvuh5-5P7J8_1rllOwEeEQ&oe=66899A7A
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி எல்லோருக்கும்  

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.