Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அலைபாயும் மனது நான் அல்ல"


"அலைபாயும் மனது நான் அல்ல 
அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்!  
அன்பாய், கனிவாய், அக்கறையாய் வருபவரை 
அதிகாரம் அற்று நேசிப்பவன் நான்!" 

"ஆழ்ந்த அறிவு அகன்ற பார்வை  
ஆய்வு செய்திகள் விரும்புபவன் நான்! 
ஆறுதல் தேடி நட்பு நாடுபவரை 
ஆனந்தமாய் அணைத்து மதிப்பவன் நான்!"     
 
"அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என்று 
அன்றும் இன்றும் உணர்பவன் நான்! 
அறிவு ஒற்றுமை காணாத கூட்டத்தை 
அண்டி வாழாமல் புறக்கணிப்பவன் நான்!"  

"ஆடைகளை கழட்டுவது போடுவது போல 
ஆட்களை கொள்கைகளை மாற்றுபவனல்ல நான்!
ஆசை ஒன்றைப்  பெற்று நிறைவேற்ற 
ஆரத்தி எடுத்து பந்தம்பிடிப்பவனல்ல நான்!" 

"அனைவரும் ஒன்றே குலம் என்று    
அகிலம் முழுவதும் நேசிப்பவன் நான்!
அனுபவம் ஆற்றல் நிறைந்த தலைவர்களை    
அச்சம் இன்றித் பின்தொடருபவன் நான்!" 

"ஆட்டமாய் ஆடினாலும் கூட்டத்தை சேர்த்தாலும் 
ஆத்திரமடையாமல் உண்மையை தேடுபவன் நான்!.
ஆவேசம் கொண்டாலும் ஆற அமர்ந்து 
ஆலோசித்து முடிவு எடுப்பவன் நான்!"

"அடுத் தடுத்து துன்பங்கள் வந்தாலும்
அறிவுடன் சிந்தித்து செயலாற்றுபவன் நான்!
அசிங்கம் என நினைத்து ஒதுங்காது
அன்புடன் அனைவருடனும் பேசுபவன் நான்!" 

"ஆனந்த வாழ்வின் அர்த்தம் புரிந்து
ஆறறிவு கொண்டு செயல்படுபவன் நான்! 
ஆழம் அறிந்து கால் பதித்து 
ஆபத்தை தவிர்த்து வாழ்பவன் நான்!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

 396697373_10224244460001951_5438671324800320103_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=chs4v7NpwSYQ7kNvgE4eSKR&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCRENb5vn7zKX_M_PDgh9pP5nJu6934T0TFCPaO23Xl2Q&oe=667F0FAC 1964935_10201660231970365_355864926_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=N6w-bI6P1fkQ7kNvgFJmFoo&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYC1bKrUuEHdWvgnuagx22YA6ChgQCvh50t-oE3MXfNHMg&oe=66A0A741

 

Edited by kandiah Thillaivinayagalingam

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"அலைபாயும் மனது நான் அல்ல" / கவிதை - 02
 
 
"அலைபாயும் மனது நான் அல்ல
அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்!
அன்பாய் இவள் இடம் கேட்க
அதிகாரம் அற்று அணைத்தவன் நான்!"
 
"ஆழ்ந்த அறிவு பார்த்து இவளை
ஆசிரியர் ஆகவும் கொண்டவன் நான்!
ஆறுதல் தேடி அடைக்கலம் புகுந்தவளை
ஆரவாரம் போடாமல் சேர்த்தவன் நான்!"
 
"அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என
அன்றும் இன்றும் உணர்பவன் நான்!
அனாதையாய் நிற்கிறேன் என்று வந்தவளை
அடக்கமாய் நட்பாய் இணைத்தவன் நான்!"
 
"ஆடைகளை கழட்டுவது போடுவது போல்
ஆசைக்கு பெண்களை சேர்ப்பவனல்ல நான்!
ஆதிக்கமின்றி பண்பாய் பாசமாய் வந்தவளை
ஆனந்தமாய் பற்றுடன் ஏற்றவன் நான்!"
 
"அனைவருக்கும் மேல் இவளை உயிராய்
அக்கறையுடன் என்றும் நேசிப்பவன் நான்!
அனுபவம் அழகு நிறைந்த அவளை
அச்சம் இன்றி கைபிடித்தவன் நான்!"
 
"ஆட்டமாய் ஆடினாலும் கூட்டத்தை சேர்த்தாலும்
ஆன்லைன்கடந்த அன்பில் மூழ்பவன் நான்!
ஆத்திரம் கொண்டாலும் ஆற அமர்ந்து
ஆலோசித்து முடிவு எடுப்பவன் நான்!"
 
"அடுத் தடுத்து துன்பங்கள் வந்தாலும்
அறவையிலும் வந்தவளை வாழவைப்பவன் நான்!
அந்தரங்கம் மதித்து விட்டுக் கொடுப்புகளுடன்
அயிர்ப்புஇன்றி அவளை ஏற்பவன் நான்!"
 
"ஆனந்த வாழ்வின் அர்த்தம் புரிந்து
ஆறறிவுகொண்டு அவளை நோக்குபவன் நான்!
ஆண்டு பலமாறி கோலம் பலமாறினாலும்
ஆதரவு அன்பு குறைக்காதவன் நான்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பி கு :
அறவை --- உதவியற்ற நிலை [Helplessness]
அயிர்ப்பு --- சந்தேகம் [Doubt]
118769044_10217720068496241_7509695175596936354_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=WrQkSuKHVWAQ7kNvgGaIXU5&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCGzNV5otgP8oJGqZ-1eyuZKt_l1qewYZ-UolJioaAEjw&oe=66C19081 118769044_10217720074136382_1762562860829284737_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=_FntmydAdMsQ7kNvgFES7nr&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYB36Gzc-HOnQcrN1TJL45ysS9pUepLx8R6e9mO5BvhN2A&oe=66C1B766
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.