Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வு பெற்றுக்கொடுப்பேன்; கிளிநொச்சியில் சஜித் வாக்குறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன் என எதிர்கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற, ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சமத்துவக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை ஆரோக்கியமாக உள்ளது. வடக்கில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டிள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும்.

அவ்வாறு பல திட்டங்களை செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்.

வாழ்வாதரம் உள்ளிட்ட பல திட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதற்காக சிறப்பு அலுவலகங்கள் 5 மாவட்டங்களிலும் நிறுவ உள்ளோம்.

அதேபோன்று ஒவ்வொறு பிரதேச செயலக பிரிவுகளிலும் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும்.

இங்கு உள்ள மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். அத்துடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொபோம். அதற்காகவே இந்த அலுவலகங்களை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் நிறுவ உள்ளோம்.

நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு உள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளது. அந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

அதே போன்று நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு IT நிறுவனங்கள் நிறுவப்படும். அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கப்படும்.

கிளிநொச்சியில் பாரிய அபிவிருத்திகளை செய்ய முடியும் என நம்புகிறேன். இதனால் இங்குள்ள மக்களிற்கு தீர்வுகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/308851

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 10 பேரடங்கிய குழுவை தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு Published By: DIGITAL DESK 3   14 SEP, 2024 | 08:33 PM (நா.தனுஜா) சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மிகமுக்கிய தருணத்தில் நடைபெறும் இம்முறை ஜனாதிபதித்தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் அவ்வமைப்பு எதிர்வுகூறியுள்ளது.   நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன. அதேபோன்று சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைiயிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு இன்றைய தினம் (15) நாட்டை வந்தடையவுள்ளது. அதுமாத்திரமன்றி பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் (சார்க்) அங்கத்துவ நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அவர்களது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அதன் தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கடந்த 11 ஆம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. இக்கண்காணிப்பாளர்களில் தேர்தல் செயன்முறை ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் உள்ளடங்குகின்றனர். அவர்கள் நாடளாவிய ரீதியில் 7 மாகாணங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், 14 பிரதான நகரங்களையும், அவற்றைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களையும் இலக்காகக்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது தேர்தல் செயன்முறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ள அவர்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள், வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம் என்பவற்றைப் பரந்துபட்ட அளவில் கண்காணிக்கவுள்ளனர். அதன்படி இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு, 'பொருளாதார ஸ்திரமின்மை, உயர் பணவீக்கம், மக்கள் மத்தியிலான அதிருப்தி ஆகியவற்றுக்கு நாடு முகங்கொடுத்திருந்த நிலையில், தீர்மானம் மிக்கதொரு தருணத்தில் இந்த ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மிகமுக்கிய பங்காற்றும்' எனத் தெரிவித்துள்ளது.  https://www.virakesari.lk/article/193691
    • ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1933 முதல் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை. இந்த போட்டி ரத்தான நிலையில், இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/309436
    • தேர்தல் பிரசார நிறைவின் பின் சமூக வலைத்தளங்களை 48 மணித்தியாலங்கள் முடக்க தீர்மானம்? ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399461
    • தமிழ்ப் பொது வேட்பாளர்  ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் - வட, கிழக்கு நீதிக்கும் சமாதானத்திற்குமான குருக்கள் ஒன்றியம் Published By: DIGITAL DESK 3   15 SEP, 2024 | 10:21 AM (எம்.நியூட்டன்) தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் எனவே அவரையே தமிழ்மக்கள் தெரிவு செய்யவேண்டும் என வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இச் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி- கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது. தற்போதுள்ள சனநாயக முறைமை எண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்ற உண்மை பொது அறிவுக்குட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது.  தெற்கிலிருந்து சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கின்றார்கள்.  ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்.  அதேநேரத்தில் தமிழின அழிப்பில் நீதி கோருவதை மறுப்பதோடல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல்லாடலுக் கூடாகவே கட்டமைக்கின்றார்கள். தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது வெவ்வேறு வடிவங்களை/பரிமாணங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன.  சிங்கள மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளார். இம்முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை என்றுள்ளது. https://www.virakesari.lk/article/193690
    • இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடக்க இன்னும் ஒரு கிழமை உள்ள நிலையில்.... ஸ்ரீலங்காவின் ஆணழகன் யார்.... என நடக்கும் போட்டி. 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.