Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கே. சச்சிதானந்தனின் கவிதை ஒன்று. இதை ஜெயமோகன் அவரது தளத்தில் வெளியிட்டிருக்கின்றார்.

எங்கும் போரால் நிறைந்திருக்கும்,

அப்பாவி மக்களை

ஆதரவற்றவர்களை

பலவீனமானவர்களை

கொன்று குவிக்கும் இன்றைய உலகிற்கு ஏற்ற ஒரு கவிதை இது 

வென்றோம் என்றவர்களே தோற்றவர்கள் ஆகின்றனர்.

https://www.jeyamohan.in/208930/

 

**********************************************************

 

இறுதிவிருப்பம்

----------------------

நான் அசோகன்

பிணக்குவியல்களின்

துயரம் நிறைந்த காவல்காரன்

சகோதரர்களின் தலைகளை மிதித்து

ரத்தநதியை கடக்கும் துரியோதனன்

குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட

வெறும் ஊன்தடி

 

என் கழிவிரக்கம்

பாலைவெளியில் அலையும்

ஆண்மையற்ற காளை

என் மனமாற்றம்

குருதி படிந்த வாளின்மீது

சுற்றப்பட்ட காவி

 

தர்மச்சொற்பொழிவாற்றும் இக்கனவுகளால்

என் பாவத்தை மறைக்கமுடியாது

அவையும் என் கீர்த்தித்தூண்களென்றாகும்

என் தீமையின் விரைத்தெழல்கள்.

 

என் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரக்காலும்

நான் ஒடுக்கிய ஒரு வம்சத்தின் முதுகெலும்பு

என் சிம்மங்களின் ஒவ்வொரு சடைமயிரும்

நான் எரித்த நகரங்களின் சிதைச்சுவாலை.

 

இருபோர்களிலும் நான் தோற்றேன்

எனக்கு மரணதண்டனை அளியுங்கள்

என் இறுதிவிருப்பம் இதுவே

இப்புவியின் இறுதி அரசன்

நானேயாகவேண்டும்.

  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.