Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கோப் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

adminDecember 18, 2024
harsha-de-silva.jpg

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

https://globaltamilnews.net/2024/209401/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் தரப்பில் அருச்சனவையும் சேர்த்திருந்தால் அனுராவையே கதறவிட்டிருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

18 DEC, 2024 | 01:00 PM
image
 

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024  டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக குழுவின் தவிசாளராக கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பணியாற்றுவதற்கான ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் சபாநாயகர் இன்று புதன்கிழமை  (18) சபையில் அறிவித்தார்.

இதற்கமைய, கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா,  நிமல் பலிஹேன, விஜேசிரி பஸ்நாயக்க,  திலிண சமரகோன், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/201556



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியார் கல்வி நிறுவனத்தில்  காத்திருக்கும் பெற்றோருக்கு இலவசமாக சிங்கள் மொழியினை கற்பிக்கலாம்.
    • 18 DEC, 2024 | 01:42 PM   கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான முன்றலில்  முன்னெடுக்கப்பட்டது.  இலங்கையில் 5,000க்கும் மேற்பட்ட சைகை மொழி பேசுபவர்கள் இருக்கின்ற போதும் அந்த மொழிகள் அங்கீகரிக்கப்படாது இருக்கின்றது.  அவர்கள் அரச தினைக்களங்களிலும் ஏனைய இடங்களிலும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என கோரி பேரணி முன்னெடுக்கப்பட்டது.  இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார் தொடர்ந்து  ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிக்கட்டது.  இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த  சைகை மொழி பேசுவபவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  https://www.virakesari.lk/article/201570
    • எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும், குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/313902
    • பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் திருச்சியில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வந்த இளைஞர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் நாக்கை இரண்டாகத் துண்டித்து, டாட்டூ போடுவது, கண்களில் நிறமி பூசுவது போன்றவற்றைச் செய்துள்ளார். மேலும், அவற்றைத் தனது இன்ஸ்டா பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? மனிதர்களின் நாக்கை பாம்பு போல மாற்றுவது ஏன்? டாட்டூ என்ற பெயரில் திருச்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நபர்கள் பிடிபட்டது எப்படி? அதுகுறித்த வீடியோவில் பேசும் இளைஞரிடம் எந்தவித தயக்கமோ, அச்சமோ இல்லை. அவர் கைகாட்டும் இடத்தில் நாக்கு இரண்டாகத் துண்டிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு தையல் போடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. "இவ்வாறு அறுவை சிகிச்சை செய்வதை தவறு என அவர்கள் உணரவில்லை என்பதைவிட, அவர்கள் இதை ஒரு பெரிய பிரச்னையாகவே பார்க்கவில்லை" என்கிறார், திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி. மனு பாக்கர் ஒலிம்பிக்கில் சாதிக்க உத்வேகம் தந்த 'டாட்டூ' வாசகம் - என்ன தெரியுமா? உடலில் 500 பணிகளைச் செய்யும் கல்லீரலை பாதுகாப்பது எப்படி? 'டாட்டூ' ஆபத்தா? ரஷ்யாவில் பாதுகாக்கப்படும் லெனின் உடல் 100 ஆண்டுகள் கடந்து எப்படி உள்ளது தெரியுமா?   'ஏலியன் இமோ டாட்டூ' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ஜெயராமனை கடந்த ஞாயிறு அன்று (டிசம்பர் 15) திருச்சி போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மேல சிந்தாமணி அருகிலுள்ள பழைய கட்டடம் ஒன்றில், ஏலியன் இமோ டாட்டூ (Alien Emo tatto) என்ற பெயரில் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்தக் கடையை நடத்தி வந்த ஹரிஹரன் என்பவரை இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். 'ஹாய் ஏலியன்ஸ்' எனக் குறிப்பிட்டு, இவர் பேசும் காணொளிகளுக்கு ஒரு சாரார் மத்தியில் வரவேற்பு கிடைத்து வந்துள்ளது. ஹரிஹரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்களுக்கு செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்துவது, நாக்கைத் துண்டிப்பது, பல்வேறு வகை டாட்டூ போடுவது என உடல் அமைப்பு (body modification) மாற்றம் தொடர்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை 'கலாசாரம்' என்றே வீடியோ ஒன்றில் ஹரிஹரன் குறிப்பிடுகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?8 மணி நேரங்களுக்கு முன்னர் 4,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்4 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு சம்பவங்கள் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டாட்டூ கடை நடத்தி வந்த ஹரிஹரன் என்பவரை இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர் கடந்த டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு பேருக்கு நாக்கைத் துண்டித்து ஹரிஹரன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறுகிறார், கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி. இதுதொடர்பாக ஹரிஹரன் பதிவேற்றிய இரண்டு காணொளிகள், காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாம்பு போல மனிதர்களின் நாக்கை இரண்டாகத் துண்டித்து, அதற்கு நிறமூட்டும் வேலைகளைச் செய்வதை ஒரு சாதனையாக வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் 25 வயதான ஹரிஹரன் மற்றும் 24 வயதான ஜெயராமனை கோட்டை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். பட மூலாதாரம்,ALIEN_EMO_TATTOO/INSTAGRAM தனது நாக்கையும் மும்பை சென்று துண்டித்து நிறமூட்டியதாக காவல்துறை விசாரணையில் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதற்காக 2 லட்ச ரூபாய் வரை செலவு ஆனதாகவும் அவர் கூறியுள்ளார். இவரது டாட்டூ கடையில் நடத்தப்பட்ட சோதனையில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திகள், பிளேடு, ஊசி, மயக்க மருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்னென்ன பிரிவுகளில் வழக்கு? கைதான இருவர் மீதும் 118 (1), 125, 123, 212, 223 BNS, 75, 77 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நபர் வேண்டுமென்றே ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தி வேறு ஒருவருக்குத் தீங்கு விளைவிப்பதைக் குற்றம் என சட்டப் பிரிவு 118 (1) கூறுகிறது. பி.என்.எஸ் (பாரதிய சன்ஹிதா) சட்டப்பிரிவு 123இன்படி, ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் நச்சு, மயக்கம், தீங்கு விளைவிக்கும் பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்துக் கூறுகிறது. இந்த வகையான குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 தமிழ் பாதிரியார்கள் பிரேசில் காடுகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றுவது ஏன்?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டாட்டூ போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இந்த வழக்கு குறித்து மேலதிக தகவல்களை பிபிசி தமிழிடம் விவரித்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி, "டாட்டூ கடையில் வைத்தே அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால், அதுதொடர்பான படிப்பறிவோ, முறையான உரிமமோ ஹரிஹரனிடம் இல்லை," என்றார். "கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவனுக்கு நாக்கைத் துண்டாக்கும் சிகிச்சையை ஹரிஹரன் செய்துள்ளார். மைனர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது தீவிர குற்றம் என்பதால் வழக்குப் பதிவு செய்தோம்" என்று நடந்ததை விவரித்தார். டாட்டூ வடிவங்களில் புதுப்புது மாதிரிகளை அறிமுகப்படுத்தி, 'ஜென் இசட்' தலைமுறையினரைக் கவர்வதற்காக இதுபோன்று ஹரிஹரன் செயல்பட்டு வந்துள்ளதாகவும் கோட்டை காவல் நிலைய போலீசார் கூறுகின்றனர். 'அபாயகரமான கருவிகள்' மாநகராட்சியில் உரிமம் பெறாமல் டாட்டூ கடையை ஹரிஹரன் நடத்தி வந்ததாகக் கூறுகிறார், திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் விஜய் சந்திரன். "எந்தக் கண்காணிப்பு வளையத்திலும் இந்தக் கடை இல்லை. மாநகராட்சி சட்டப்படி கடை நடத்தப்படவில்லை என்பதால் உடனே சீல் வைக்கப்பட்டுவிட்டதாக," அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "நாக்கைத் துண்டாக்கும்போது, மயக்க மருந்தை நாக்கில் ஹரிஹரனே செலுத்தியுள்ளார். அதே ஊசியை வேறு நபர்களுக்குப் பயன்படுத்தியுள்ளாரா எனத் தெரியவில்லை" எனக் கூறுகிறார் விஜய் சந்திரன். கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?7 மணி நேரங்களுக்கு முன்னர் கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,VIJAYCHANDRAN படக்குறிப்பு, இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார், விஜய் சந்திரன் இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். "கண்களுக்கு ஊசி மூலம் செயற்கை நிறங்களைச் செலுத்தி நிறமூட்டும் வேலையைச் செய்துள்ளார். நாக்கு துண்டிக்கப்பட்ட இருவருக்கும் கண்களில் நிறமூட்டூம் வேலையை அவர் செய்யவில்லை" எனக் கூறுகிறார் விஜய் சந்திரன். "உடற்பாகங்களில் துளையிட்டு டாட்டூ போடுவதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசிகள், பிளேடு ஆகியவற்றைக் கையாண்டுள்ளார். இந்தக் கருவிகளை கிருமி நாசினி மூலம் முறையாகச் சுத்தப்படுத்தவில்லை. இவை பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக் கூடியவை என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்கிறார், மருத்துவர் விஜய் சந்திரன். பட மூலாதாரம்,ALIEN_EMO_TATTOO/INSTAGRAM படக்குறிப்பு, கத்திகள், பிளேடு, ஊசி, மயக்க மருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மேற்கொண்டு பேசிய விஜய் சந்திரன், "நாக்கைத் துளையிடுவது, மூக்கில் வளையம் போடுவதற்கு சில கருவிகளை ஹரிஹரன் வைத்துள்ளார். அவையெல்லாம் மிகவும் அபாயகரமானவை. சற்று வேகமாக அழுத்தினால்கூட மனிதர்களின் மூக்குப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுவிடும்" என்றார். தன்னிடம் நாக்கை வெட்டிக் கொண்டவர்களுக்கு சில வாக்குறுதிகளை ஹரிஹரன் கொடுத்துள்ளதாகவும் மருத்துவர் விஜய் சந்திரன் தெரிவித்தார். "நாக்கைத் துண்டாக்கி அழகுபடுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் புரொமோட் செய்தால், பிரதிபலனாக திருவெறும்பூர் மற்றும் திருச்சியின் மையப் பகுதியில் புதிதாகத் தொடங்கவுள்ள டாட்டூ மையங்களை அவர்களுக்கே கொடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்" என்றார் விஜய் சந்திரன். நாக்கைத் துண்டிப்பதால் என்ன நடக்கும்? "சமூக ஊடகங்களில் காணொளிகளைப் பார்த்துவிட்டு, அறிவியலுக்கு மாறான செயல்களைச் செய்யும்போது அவை உயிருக்கு ஆபத்தாக முடியும்" என்று எச்சரிகிறார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணி ராஜன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவர் பேசுவதற்கு நாக்கு மிக முக்கியம். நாக்கைத் துண்டிக்கும்போது பேச்சுத் திறன் பாதிக்கும்; சுவை உணர்வு பறிபோகும். இவ்வாறு செய்வதால் சரியாகப் பேசுவதில் குளறுபடி ஏற்படும்" என்றார். வளரிளம் பருவத்தில் உள்ளவர்களின் மனதில் இதுபோன்ற காணொளிகள் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் தேரணிராஜன், "கண்ணில் நிறங்களைச் செலுத்தும்போது பார்வைத் திறனில் பாதிப்பு ஏற்படும். விழித்திரைப் படலத்திற்குள் ஊசியைச் செலுத்தி நிறமூட்டும்போது கண் பார்வையே போய்விடும்" என்கிறார். செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 அமேசானின் இந்த 'கொதிக்கும் நதி' சூடாவது எப்படி? மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?14 டிசம்பர் 2024 டாட்டூ - உளவியல் பின்னணி என்ன? பட மூலாதாரம்,THERANIRAJAN படக்குறிப்பு, இப்படி டாட்டூ போடுவது, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார், மருத்துவர் தேரணிராஜன் "தங்களின் உடலை வருத்தி டாட்டூ போட்டுக் கொள்வது உளவியல் சிக்கலுக்கு உட்பட்ட ஒன்று" என்கிறார், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன். இயற்கைக்கு மாறாக, உடல் அமைப்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர் என்கிறார் மாலையப்பன். அந்த வகையில், "மிக அதிகமாக டாட்டூ குத்திக் கொள்ளும் சிலரின் பழக்கத்தை, இயல்பான நடத்தையாக (Normal behaviour) பார்க்க முடியாது" என்றும் மாலையப்பன் தெரிவித்தார். "பொதுவாகவே, தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது மனிதர்களின் இயல்பான குணம். அது அளவுடன் இருக்கும்போது எந்தவித பாதிப்பும் வரப் போவதில்லை" எனக் கூறுகிறார் மாலையப்பன். இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு பஷர் அல்-அசத் முதல் அறிக்கை - என்ன கூறியுள்ளார்?17 டிசம்பர் 2024 படக்குறிப்பு, இயற்கையில் இருந்து பிறழும் நடவடிக்கையாக இதைக் கருதுவதாக, மாலையப்பன் கூறுகிறார். "இதை மனநோய் என்று அழைக்காமல், இயற்கையில் இருந்து பிறழ்ந்து போவதாகப் பார்க்கலாம். மற்றவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக உடல் உறுப்புகளை மாற்றிக் கொள்வதை உளவியல் சிக்கலாக அணுக வேண்டும்" என்கிறார் மாலையப்பன். அதோடு, இவ்வாறான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகும் நபர்களை முறையாக மனநல ஆலோசனை வழங்கி நெறிப்படுத்தலாம் என்றும், வேறு எந்தெந்த வகைகளில் கவனத்தை ஈர்க்கலாம் என ஆலோசனை கொடுக்கும்போது அவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் விவரித்தார் அவர். டாட்டூ கடைகளில் ஆய்வு நடத்தக் குழு டாட்டூ கடைகளை முறைப்படுத்துவதற்கு திருச்சி சம்பவம் உதாரணமாக மாறியுள்ளதாகக் கூறும் திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலர் விஜய் சந்திரன், "மாநகராட்சியில் கடைகளைப் பதிவு செய்யும்போது 'ஆர்ட்டிஸ்ட்' எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், நேரில் ஆய்வு நடத்தும்போது, அவை டாட்டூ கடைகளாக உள்ளன" என்கிறார். திருச்சி சம்பவத்தை ஆய்வு செய்வதற்காக மருத்துவ சேவைப் பணிகள் கழகத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4x3p7kkydo
    • இப்படித்தான் ஈராக், லிபியா, போன்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.  தற்போது ஈராக்கிலும், லிபியாவிலும் யேமனிலும் பாலும் தேனும் ஓடுகிறது. ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களின் பக்கச் சார்பான செய்திகளை மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் காலம் மலையேறிவிட்டது.  😏  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.