Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

10 JUN, 2025 | 01:39 PM

image

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நில பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு பேரணியானது, காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்படும்.

எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/217086

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பு 

11 JUN, 2025 | 02:19 PM

image

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான மக்களும் பங்குகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-11_at_11.46.50_AM

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை அடைந்தது.

பின்னர் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி பதாதைகளை ஏந்தியவாறு பலவாறு கோஷம் எழுப்பினர்.

“மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையிலான காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து”, “எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே”, “அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.

DSC_0841.JPG

இந்த பேரணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், மன்னார் மக்கள் எதிர்நோக்கும் இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அளிக்கவேண்டிய மகஜரினை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர்,

மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கறிவேன்.

மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில், என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பேன் என்றார்.

ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"எங்களையும், எங்கள் வாழ்விடங்களையும், எங்கள் வளங்களையும் பாரிய அழிவிலிருந்து பாதுகாக்க உங்களை வேண்டுகின்றோம்"

கடந்த ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை நாம் சாத்வீக முறையில் தொடர்பாடல்கள் வழியாகவும், போராட்டங்கள் மூலமாகவும், பல துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பல அரச நிறுவனங்களுடன் மாவட்ட, மாகாண மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் மூலமாகவும் எமது நாட்டையும் எமது மாவட்டத்தையும் எமது வாழ் விடங்களையும் எமது வளங்களையும் எமது வாழ்வாதாரங்களையும் பெரும் அழிவிலிருந்து பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும், மகிழ்வுடன் வாழவும் முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து வருகிறோம்.

ஆனால் இதுவரைக்கும் இலங்கை நாட்டு மக்களாகிய நாம் பல்வேறு தளங்களிலும், பல்வேறு விடயங்களிலும், திட்டமிட்ட முறையில் நடைபெறும் பல பயங்கரமான அழிவுகளை சந்தித்துவருகிறோம்.

எங்களுக்குரிய மனித உரிமைகள் அனைத்தும் இழந்த நிலையில், நம்பிக்கைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட நிலையில் உங்கள் ஆட்சியில் வாழ நேரிட்டிருப்பது வேதனைக்குரிய, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலையாக உள்ளது.

எமது மாவட்டத்தில் நடைபெறும் சரியான முறையில் திட்டமிடப்படாத திட்டங்களும், மக்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்காத திட்டங்களும், நாட்டில் உள்ள பல்வேறு சட்டதிட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் திட்டங்களும், எமது மனித உரிமைகளை மீறும் திட்டங்களையும், எமது வாழ்விடங்களையும், வளங்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்கும் திட்டங்கள் அனைத்தையும் உடன் நிறுத்தி, மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் நீண்ட வாழ்வினை பாதிக்காத, வளங்களை பாதுகாக்கின்ற, வதிவிடங்களை அழிக்காத, சுற்றுச்சூழலை பாதிக்காத திட்டங்களை மட்டும் முன்னெடுக்குமாறு இலங்கை நாட்டு மக்களாகிய நாம் அன்புடன் கேட்டு நிற்கின்றோம்.

இப்போது எமது மாவட்டத்தில் எமது வாழ்வினை அழித்துக்கொண்டிருக்கும் திட்டங்கள், மனித உரிமை மீறல்கள் சில...

1. மன்னார் தீவில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் (பல நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் அனுமதியுடன் ஆதரவுடன் செய்து வருகிறது. உதாரணம் தாழ்வுபாடு, கீரி, தரவன் கோட்டை, சாந்திபுரம், சவுத்பார், சிலாவத்துறை, காயாக் குழி போன்ற சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2. வெளிநாட்டு தனியார் கொம்பனிகளினால் எமது இலங்கை நாட்டையும், மன்னாரையும் முற்றாக அழித்து எங்கள் வளங்கள் முழுவதையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல மன்னார் தீவிலும், மன்னார் பெரும் நிலப்பரப்பிலும் மேற்கொள்ளப்படும், மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வளங்களை அழிக்கும், மனிதன் வாழும் உரிமைகளை அழிக்கும் பல கனிய மணல் அகழ்வு திட்டங்கள். இரண்டு நிறுவனங்களால் கனிய மண் அகழ்வுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்படுகிறது.

3. பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் கடல் வளங்கள், அத்துமீறிய இந்திய மீனவர்கள் வருகை, சட்டங்களுக்கு எதிரான மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், திட்டமிடாத அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல் போன்ற செயல்களால் கடல் வளங்கள் பாரிய அளவில் அழிக்கப்பட்டு வருகிறது.

4. மக்களின் வாழ்விடங்களும் காணிகளும் அபகரிக்கப்படுதல். மக்களின் தேவை கருதியும், அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படும் வகையில் காணிகள் இன்னும் பங்கிட்டு கொடுக்கப்படாமல் காலங்கள் பிற்போடப்பட்டு பல ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். (இதுவரை 4000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு காணிகள் கேட்டும், 800 க்கு மேற்பட்ட இளையோர் சுய தொழில்கள் தொடங்க காணிகள் கேட்டும், மன்னார் மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள்.)

இவை போன்ற பல பாரிய அழிவுகளை இலங்கைக்கும் எமது மாவட்டத்துக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தும், பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று, இந்த கண்டன, எதிர்ப்பு ஊர்வலத்தில் நீங்கள் ஆட்சி செய்யும் இலங்கை நாட்டின், மன்னார் மாவட்டத்தின் மக்களாகிய நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

DSC_0726.JPG

DSC_0749.JPG

DSC_0772.JPG

DSC_0735.JPG

DSC_0867.JPG

DSC_0809.JPG

DSC_0841.JPG

WhatsApp_Image_2025-06-11_at_11.45.58_AM

WhatsApp_Image_2025-06-11_at_11.45.36_AM

https://www.virakesari.lk/article/217154

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.