Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

02 Aug, 2025 | 02:17 PM

image

திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில்  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp_Image_2025-08-02_at_2.03.57_PM.

WhatsApp_Image_2025-08-02_at_2.03.58_PM_

WhatsApp_Image_2025-08-02_at_2.03.59_PM.

WhatsApp_Image_2025-08-02_at_2.03.59_PM_

https://www.virakesari.lk/article/221615

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் சிலாவத்தை தெற்கு பகுதியில் இன்று (03) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு

தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்று இக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம் | Mullaitivu Protest Demanding Federal Power Sharing

அத்துடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டத்தின் இறுதியில் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/mullaitivu-protest-demanding-federal-power-sharing-1754213950

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

07 AUG, 2025 | 06:28 PM

image

இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்றைய தினம் (7) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு, மீளப் பெற முடியாத வகையில், சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கவனயீர்ப்புப் போராட்டமானது 100 நாள் செயல்முறையில் 7வது நாளான இன்று மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனியார் புரம் பகுதியில்  நடத்தப்பட்டது.

1000313786.jpg

"சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வாகும்" என்ற ஒரே கோசத்துடன் இந்த போராட்டம் பெரும் எண்ணிக்கையான மக்களின் பங்கேற்பில் நடைபெற்றது. 

இதன் நோக்கமானது, தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் மறுபடியும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கவனிக்கப்படவேண்டும் என்பதேயாகும்.

தொடர்ச்சியாக, 100 நாட்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இத்தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

அவ்வரிசையில், இன்றைய போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டது. 

இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவின் 5வது வருடம் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம். 

1948க்குப் பின்னரான இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கிக் காணப்படுகிறது. 

1000313789.jpg

இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. 

1908 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை. அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக, மொழி ரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின.

சுதந்திரம் கிடைத்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மலையகத் தமிழர்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களுக்கு எதிராக 50களில் கிழக்கிலும், மலையகப் பகுதிகளிலும், தெற்கிலும் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகள், சுதந்திரத்துக்குப் பின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டமை என இனவாதம் விரிவாகியது. அதன் உச்சமாக 1956இல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமானது அரச கட்டமைப்பை சிங்களமாக்கியது. இதுவே வடக்கு - கிழக்கு தமிழர்கள் தமக்கான "சமஷ்டி" முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை கோரக் காரணமானது.

1000313790.jpg

ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அரசியல் தீர்வு பற்றி பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கினாலும், பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இனவாதமும் அடக்குமுறைகளும் அதிகரித்து இறுதியில் தமிழின அழிப்பு யுத்தத்தில் நிறைவுற்றது. 

போருக்குப் பின்னரான காலத்தில் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கங்கள் அக்கறை காட்டவில்லை. திடமான அரசியல் தீர்வுக்கான உரையாடல்கள் முன்னெடுக்கப்படாமல், தமிழ் மக்களின் அரசியல் தளம் வெறுமையானது. இந்த நிலையை மாற்றி வடக்கு, கிழக்கு ரீதியாக மக்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் நோக்குடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி "அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவை" ஆரம்பித்தோம். 

வடக்கு, கிழக்கின் கிராமங்கள், நகரங்கள் என 100 இடங்களில் இந்த ஜனநாயக வழிப்பட்ட மக்கள் திரள் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு 100வது நாளான 2022 நவம்பர் எட்டாம் திகதி "சமஷ்டி அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்துடன்" நிறைவேறியது.

தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. 

"ஜனநாயகம்", "கட்டமைப்பு மாற்றம்", "இன, மத பேதமின்மை" எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளன எனும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்துவருகிறது.

1000313791.jpg

வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தில் ஆக்கிரமிப்பு, மகாவலி குடியேற்றம் மற்றும் சிங்களமயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு "இன மத பேதமின்மை" குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன, மத பேதமின்மை" எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

மேலும், 2015ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஏற்பாடு 20ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது.

ஆகவே. இனவாதத்தை சார்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம்.

சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும். போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள், எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்துகின்றன.

எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும். இதுவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின்  திடமான அரசியல் அபிலாசையாகும் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

1000313787.jpg

https://www.virakesari.lk/article/222073

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை வலியுறுத்தி திரியாயில் மக்கள் போராட்டம்

10 AUG, 2025 | 01:14 PM

image

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய் கிராமத்தில் இடம்பெற்றது. 

பல வழிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திரியாய் மக்கள் தொடர்ந்தும் நில அபகரிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை  கூடிய மக்கள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தினர்.

இதில் பெருமாபாலான மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

IMG-20250810-WA0024__1_.jpg

IMG-20250810-WA0017.jpg

IMG-20250810-WA0027.jpg

IMG-20250810-WA0012.jpg

https://www.virakesari.lk/article/222232

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.