Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன தாக்குதல் ஹெலிகாப்டர் பறக்கும் காட்சி

பட மூலாதாரம், PAFFALCONS

படக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்

கட்டுரை தகவல்

  • முன்ஜா அன்வர்

  • பிபிசி உருது, இஸ்லாமாபாத்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவில் தயாரிக்கப்படும் இசட்-10 எம்இ (Z-10 ME) ஹெலிகாப்டர் பாகிஸ்தானில் ஒரு துப்பாக்கிசுடுதல் பயிற்சி மைதானத்தில் நிற்பது போன்ற புகைப்படம் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருந்தது.

பலரும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் என தெரிவித்தனர்., வேறு சிலர் இது பாகிஸ்தானில் பரிசோதனைக்காக வந்த இசட்-10 ஹெலிகாப்டரின் முந்தைய பதிப்பு என நம்பினர்.

இந்த ஊகங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு துறை (ISPR) சீனாவில் தயாரிக்கப்பட்ட இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்தியா முதல்முறையாக அதிக அளவில் கொள்முதல் செய்த முதல் சில நாட்களில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், அமெரிக்காவிலிர்ந்து மூன்று அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் டெல்லி அருகில் உள்ள ஹிண்டன் விமானபடைதளத்திற்கு வந்து சேர்ந்தன.

அதிநவீன வசதிகளுடனான இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்கள் எல்லா காலநிலைகளிலும், பகலிலோ, இரவிலோ துல்லியமான தாக்குதலை நடத்தும் ஆற்றல் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நவீனா ரேடர் மற்றும் மின்னணு போர் கருவிகள் பொருத்தப்பட்ட இசட்-10 எம்இ தரைவழியாகவும், வான் மார்க்கவாகவும் வரக்கூடிய அபாயங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கிறது.

இந்த கட்டுரை சீனாவின் இசட்-10 எம்இ மற்றும் அமெரிக்காவின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குகிறது.

இசட் 10 ஹெலிகாப்டரில் பொருத்தக்கூடிய பலவகையான ஆயுதங்கள்

பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW

படக்குறிப்பு, இசட்-10 எம்இயில் பல வகையான ஆயுதங்களை பொருத்த முடியும்

இசட்-10 எம்இ தாக்குதல் ஹெலிகாப்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன?

இசட்-10 எம்இயின அம்சங்களை அதிகாரி ஒருவர் விளக்கும் புகைப்படம்

பட மூலாதாரம், ISPR

படக்குறிப்பு, இசட்-10 எம்இயின் நவீன மாடலில் புதிய, சக்திவாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது திறனையும் வரம்பையும் அதிகரிக்கிறது

ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் தற்போது முல்தானின் ஏர் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துகிறார்.

அவரது கூற்றுப்படி இசட்-10 எம்இ ஹெலிகாப்டர், டபிள்யு 10 என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கான தயாரிப்பு 1994ஆம் ஆண்டு நவீன தாக்குதல் ஹெலிகாப்டருக்கான தேவையை சீனா உணர்ந்தபோது தொடங்கப்பட்டது. இதுதான் சீனாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தாக்குதல் ஹெலிகாப்டராகும்.

ஏசியன் மிலிட்டரி ரெவ்யூவின் கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் குறுகிய தூர வான்வழி ஆதரவு, டாங்கிகளுக்கு எதிரான நடவடிக்கை, குறைவான அளவு வான்வழி தாக்குதல் ஆகியவற்றை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த அம்சங்கள் காரணமாக அது இந்தியாவின் ஏஹெச்-64இ(AH-64E) அபாச்சி கார்டியன் ஹெலிகாப்டருடன் ஒப்பிடப்படுகிறது.

முஸாமில் ஜிப்ரான் கூற்றுப்படி கடந்த காலத்தில் இந்த ஹெலிகாப்டரின் பல்வேறு பதிப்புகள் இருந்திருக்கின்றன.

அவரது கூற்றுப்படி பனிமூட்டமான சூழலில் பெரும்பாலான ரேடர்கள் சரியாக செயல்படுவதில்லை, ஆனால் இசட்-10 எம்இயில் பொருத்தப்பட்டுள்ள ரேடர் மூடுபனியிலும் வெகு சிறப்பாக செயல்படும்.

"இந்த ஹெலிகாப்டரின் துப்பாக்கிகள் ஹெல்மெட் மவுண்டட் சைட்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, இது ஒரு நகரும் ஆயுத அமைப்பாகும், பைலட் எந்த திசையைப் பார்த்தாலும், துப்பாக்கி தானாக அந்த திசையில் சுடும்," என்கிறார் முஸாமில் ஜிப்ரான்.

அதன் புதிய பதிப்பில் கூடுதல் ஆற்றல் கொண்ட ஒரு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது அதன பறக்கும் ஆற்றலையும், தூரத்தையும் அதிகரிக்கிறது.

டிபென்ஸ் செக்யூரிட்டி ஆசியாவின் கூற்றுப்படி, "செயல்திறன் அடிப்படையில், இசட்-10 எம்இ-யின் அதிகபட்ச வேகம் மணிக்கு 300 கிலோமீட்டராக உள்ளது. எடை மற்றும் கூடுதல் எரிபொருளைப் பொறுத்து அதன் பயண வரம்பு 800 முதல் 1,120 கிலோமீட்டர் வரை இருக்கும்."

இந்த ஹெலிகாப்டரின் வெற்று எடை சுமார் 5,100 கிலோகிராம், அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 7,200 கிலோகிராம் வரை செல்லலாம். இது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Control) ஒட்டி நீண்ட தூரம் ஊடுருவி தாக்குதல் நடத்தும் ஆற்றலை அதற்கு வழங்குகிறது.

பாதுகாப்பு ஆய்வாளர் சவுத்ரி ஃபாரூக்-கின் கூற்றுப்படி இந்த ஹெலிகாப்டரில் பலவகையான ஆயுதங்களை பொருத்த முடியும்.

இசட்-10 எம்இ-யில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கவும், வான்வழி அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள பயன்படும் வழிநடத்தக்கூடிய 16 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 32- ட்யூப் ராக்கெட் பாட்கள் மற்றும் டி ஒய்-90 வானிலிருந்து வானில் ஏவக்கூடிய ஏவுகணைகளை பொருத்தலாம்.

இசட்-10எம்இ மற்றும் அபாச்சி இடையிலான வேறுபாடுகள்

அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் சர்வதேச போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இசட்-10 எம்இ இதுவரை அதுபோல் பயன்படுத்தப்படவில்லை

பட மூலாதாரம், INDIAN MEDIA

படக்குறிப்பு, அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் சர்வதேச போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இசட்-10 எம்இ இதுவரை அதுபோல் பயன்படுத்தப்படவில்லை

அபாச்சியுடன் ஒப்பிடுகையில் இசட்-10எம்இ யில் சீனா பல்வேறு மேம்பாடுகளை செய்திருப்பதாக ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் சொல்கிறார்.

அவரது கூற்றுப்படி, ஏவுகணைகளில் இன்ஃப்ராரெட் (ஹீட்-சீக்கிங்) ஏவுகணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது."இந்த சூழலில், இந்த சீன ஹெலிகாப்டர் ஒரு முக்கிய சாதக அம்சத்தை கொண்டுள்ளது, இதன் இன்ஜினின் புகை வெளியேற்றும் அமைப்பு கிடைமட்டமாக இல்லாமல் 45 டிகிரி கோணத்தில் பின்புறமாக சாய்ந்துள்ளது. இதனால், இதன் வெப்ப அடர்வு (heat signature) கணிசமாகக் குறைகிறது."

இந்த வடிவமைப்பு காரணமாக, எதிரிகளின் ரேடர் அல்லது வெப்பத்தை உணரும் கருவி இந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பதில் சிரமத்தை சந்திக்கின்றன என அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டர்கள் பல போர்களிலும் சர்ச்சைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இசட்-10 எம்இ பாகிஸ்தானுக்காகவே தயாரிக்கப்பட்டது என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளன.

ஆனால் இந்த ஹெலிகாப்டர்கள் இதுவரை எந்த போரிலும் பயன்படுத்தப்படவில்லை.

அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பென்டகன் அதிகாரியுமான அலெக்ஸ் பிளெட்சாஸ், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் உயர்-தொழில்நுட்பத் துறைகளில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் நிபுணராவார்.

"இசட்-10 எம்இ குறைவான எடை கொண்டது, அளவில் சற்று சிறியது மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டது, இது அதை மிகவும் இலகுவாக இயக்கும் தன்மையுடையதாக்குகிறது. ஆனால், ஏஹெச்-64 அபாச்சியின் வேகம் அதிகம்," என அலெக்ஸ் பிளெட்சாஸ் விளக்குகிறார்.

மேலும், "இது பலவகையான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியது மற்றும் நவீன ரேடார் மற்றும் இலக்குகளை குறிவைக்கும் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இசட்-10 எம்இயின் விலை குறைவு, ஆனால் இரு ஹெலிகாப்டர்களும் டாங்கிகளை தாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டவை," என்று அவர் விளக்குகிறார்.

சீன மற்றும் மேற்கத்திய தொழில்நுட்பங்களின் ஒப்பீடு

இசட்-10 எம்இ ஹெலிகாப்டரில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு நிற்கும் காட்சி

பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW

படக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் எனக் கூறப்படுகிறது

1965ஆம் ஆண்டு பாகிஸ்தான்-இந்தியப் போருக்குப் பிறகு, அமெரிக்க ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகே பாகிஸ்தான்- சீனா பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடங்கியது.

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள், டேங்குகள் மற்றும் பீரங்கிகளை வழங்கி நீண்டகால ராணுவ மற்றும் ராஜதந்திர உறவுகளுக்கு சீனா அடித்தளம் அமைத்தது. பனிப்போருக்கு பிறகு, ஆயுதங்கள் வாங்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு பதிலாக சீனாவை சார்ந்திருக்க தொடங்கிய பிறகு இந்த கூட்டணி மேலும் ஆழமடைந்தது.

சீனாவும், பாகிஸ்தானும் 1963-ல் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் எல்லை சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்து, 1966-ல் பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ உதவி அளிக்கத் தொடங்கியது.

கடந்த சில சதாப்தங்களில், சீனா தான் தயாரித்த பல ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது.

ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரை பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81% சீனாவிலிருந்து வந்தவை.

SIPRIயின் கூற்றுப்படி, 2015-2019 மற்றும் 2020-2024 ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 61% அதிகரித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, சீனாவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களில் நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் அடங்கும். பாகிஸ்தானில் உள்ளூரில் தயாரிக்கப்படும் சில ஆயுதங்களில் சீனாவின் பங்களிப்பு உள்ளது. இவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவை.

இசட்-10 எம்இ தேர்வு செய்யப்பட்டது எப்படி?

இசட்-10 எம்இ ஹெலிகாப்டரின் இறகுகள் க்ளோஸ் அப் ஷாட்

பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW

படக்குறிப்பு, இசட்-10 எம்இ, சிங்கப்பூர் ஏர் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது

பாகிஸ்தான் ராணுவம் முதலில் ஏஹெச் -1இசட் வைப்பர் ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டது. 2015இல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது, ஆனால் இந்தியாவுடனான வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகள் காரணமாக இதிலிருந்து பின்வாங்கியது.

பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த பைலட் ஒருவர், "தாக்குதல் ஹெலிகாப்டர்களில் மிக முக்கியமானது பராமரிப்பு," என பிபிசியிடம் தெரிவித்தார்.

" அமெரிக்க அபாச்சி முற்றிலும் புதிய கட்டமைப்பு தேவைப்படும் ஒரு முற்றிலும் வேறுபட்ட ஒரு இயந்திரம். முன்னதாக பாகிஸ்தான், 'சூப்பர் கோப்ரா' அல்லது 'வைப்பர்' எனப்படும் ஏ ஹெச்-1இசட் ஹெலிகாப்டரில் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பொருத்த தயாராகி வந்தது, ஆனால் அந்த ஹெலிகாப்டர் இதுவரை கிடைக்கவில்லை," என அவர் கூறினார்.

பின்னர், துருக்கியின் டி129 ஹெலிகாப்டர்களைப் பெற பாகிஸ்தான் முயற்சித்தது, ஆனால் இயந்திர சிக்கல்கள் காரணமாக அந்த வாய்ப்பும் முடிவுக்கு வந்ததையடுத்து, சீனாவை நாடியது.

2015இல் வந்த சீன ஹெலிகாப்டர்களை தொழில்நுட்பக் காரணங்களால் பாகிஸ்தான் நிராகரித்ததாக அவர் சொல்கிறார். அதன் பின்னர் 2019இல் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் நிபுணர்கள் இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப அபாச்சி போன்ற ரேடர், வானிலிருந்து வானில் தாக்கும் மற்றும் வானிலிருந்து தரையில் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளை பொருத்தினர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இசட்-10 எம்இ ஹெலிகாப்டரின் புகைப்படம்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட இசட்-10 எம்இ படத்தை பலர் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று கூறினர்

இசட்-10 பாகிஸ்தானின் முதல் தேர்வாக இருக்கவில்லை என அலெக்ஸ் பிளெட்சாஸ் சொல்கிறார்.

"பாகிஸ்தான் துருக்கியில் தயாரான ஹெலிகாப்டர்களை வாங்க விரும்பியது, ஆனால் அமெரிக்கா இன்ஜின் பகுதிகள் இறக்குமதியை தடை செய்தது. இதன் பின்னர், சீனாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவை வலுப்படுத்த பாகிஸ்தானுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது," என்று அவர் சொல்கிறார்.

இந்த கட்டுரையை எழுதும் நேரம்வரை பாகிஸ்தான் ராணுவம் (ஐஎஸ்பிஆர்) இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை பிபிசியிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவின் மூத்த பைலட் ஒருவரின் கூற்றுப்படி பாகிஸ்தான் சீனாவிலிருந்து 30 ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது, இவை பல தொகுதிகளாக பாகிஸ்தானுக்கு வந்து சேரும்.

ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் இத்துடன் உடன்படுவதாகத் தெரிகிறது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyvvmn2604o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.