Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 24

07.12.1990

திரு. மாத்தயா, கருணா, விசு ஆகியோருடன் நாம் புறப்பட்டுச் செல்லும்போது காடுகள். பற்றைகள். வயல்வெளிகளில் என்னமாதிரி யான நிலையில் அகதிகள் வாழ்கிறார்கள் என்பதை திரு. மாத்தயா பார்வையிட்டார். கரிகாலனின் அலுவலகத்திலும் சில பொது மக்களைச் சந்தித்து நிலைமையை ஆராய்ந்தார். மாத்தயா போகும்போது வழியில் ஒரு வயோதிபர் தென்பட்டார். இவரைக் கவனிக்கும்படி விசு கூறினார். அவரைத் தாண்டிச் சென்றதும் கோட்டையை நாம் கைப்பற்றினோம் என்பதை அறிந்து பொதுமக்கள் வெடி கொளுத்திச் சந்தோஷப்பட் டுக்கொண்டிருந்தபோது இவர் இதென்ன பெரிய சண்டை; கப்பலும் கப்பலும் மோதும். இருந்துபார். அதுதான் சண்டை என்று ஒரு பெரிய பிரசங்கமே செய்து கொண்டிருந்தவர் இவர் என்று குறிப்பிட்டுவிட்டுச் சிரித்தார். அதற்கு மாத்தயா 'போராட்டத்தின் வெற்றிமீது இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் இது காட்டுகின்றது. தான் பிறந்து வளர்ந்த கிராமத்தைவிட்டு, வீட்டை விட்டு, அகதியாக ஓடிவந்து அடுத்தநேரச் சாப்பாட்டுக்கு என்னவழி என்பது தெரியாத நிலையிலும் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கையை இவர்கள் இழக்கவில்லை. அதனால்தான் இவர்கள் இப்படிக் கதைக்கிறார்கள். போராட்டத்தின் வெற்றிமீது அசையாதநம்பிக்கை ஏற்பட்டு விட்டது என்ற வகையில் எமக்கு அது ஒரு பலம்தான் என்றார்.

பெரிய வட்டவான் என்னும் கிராமத்தை அடைத்த போது அங்கே மக்களின் நிலைபற்றி மாத்தயா விசாரித்தார். அதற்கு அங்குள்ள போராளிகள் மருந்து இல்லாத நிலைதான் மக்கள் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது என்றார்கள். குழத்தைகளுக்கான மருந்துகள், தடுப் பூசிகள் என்பன பற்றி அவர் கேட்டபோது கிடைத்த பதில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. அக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி (நாம் அங்கு சென்ற தினம்) வரையிலான ஆறுநாட்களில் குழந்தைகள் வயிற்றோட்ட நோயினால் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்தனர். செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை நகருக்குள் வந்தால்தான் வைத்தியவசதி செய்வோம் என்ற பாணியில் அடம்பிடிக்கின்றன. நகருக்குள் போனால் முஸ்லிம் ஊர்காவல் படையினாலோ, ராணுவத்தாலோ உயிரிழக்க நேரிடும். அதற்கு அஞ்சி இப்படியான இடங்களில் இருப்பவர்கள் நோய்வந்து மடியவேண்டியது தான். எங்கு சேவை செய்ய வேண்டுமோ அங்கு சேவை செய்வதைவிடுத்து தங்களுக்கு எங்கு வசதியோ அங்கு அவர்களைத்தேடி நோயாளிகள் செல்லவேண்டும் என நினைக்கிறார்கள். செருப்புக்கு அளவாகக் காலை வெட்டும் நிலை.

சிவத்தப்பாலம் என்னுமிடத்தில் நாம் நின்றபோது எமது எமது போராளியின் சகோதரி ஒருவரும், அவரது கணவரும், குழந்தையும் வந்தார்கள். நகரிலிருந்து படுவான்கரை வழியாக நீண்ட தூரப் பிரயாணத்தின் பின் அவர்கள் வந்திருந்தார்கள். சத்துருக் கொண்டான் பகுதியில் இராணுவத்தினருக்கு கண்ணிவெடி வைத்ததிற்காக நகரில் இராணுவம் வெறியாட்டம் ஆடுகிறது என்றார்கள். பிள்ளையுடன் இவ்வளவு நாளும் நகரிலா இருந்தீர்கள் என்று விசாரித்ததற்கு, இல்லை இங்கே தான் இருக்கிறோம் நகருக்கு சாமான் வாங்கச் சென்றோம். குடும்பஸ்தர்கள் என்றால் கொஞ்சம் மனமிரங்கலாம் என எதிர்பார்த்தே குழந்தையுடன் சென்றோம் எனகுறிப்பிட்டனர். எனக்கு சத்துருக் கொண்டான் சம்பவம் தான் நினைவுக்கு வந்தது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளையே கொன்றிருக்கிறார்கள். இவர்கள் என்னவென்றால் குழந்தையை நம்பி நகருக்குள் செல்கிறார்கள். முன்பென்றால் பாடசாலைக்கோ, தெருவுக்கோ பின்ளைகள் போவதென்றால் பிள்ளைக ளின் பாதுகாப்புக்காக பெற்றோர் செல்வார்கள். இப்போதோ பெற்றோரின் பாதுகாப்புக்காக பிள்ளைகள் செல்கிறார்கள். காலம் தலைகீழாக மாறிவிட்டது.

போராளிகளின் முகாம்கள் பலவற்றிற்கும் சென்றோம். அப்பகுதி யில் கண்ணன் என்ற போராளியே அணைவருக்கும் பொறுப்பாக விளங்குகிறார். (அப்போராளி இப்போது வீரமரணமடைந்து விட்டார்) ஒவ்வொரு முகாமிலும் போராளிகளோடு மாத்தயா உரையாடினார். ஒரு பயிற்சி முகாமில் அனைவரையும் இருத்தி மாத்தயாவை உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தார் கண்ணன். அங்கு மாத்தயா நான் என்ன சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார். ஒரு போராளி எழுந்து தற்போதைய போரைப்பற்றி விளக்கச் சொன்னார். அவரது கோரிக்கையை ஏற்று தற்போதைய நிலை பற்றி போராளிகளுக்கு விளக்கமாகக் கூறினார் மாத்தயா.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முகாமைச் சென்றடைந்தோம். அடுத்த நாள் (13 ஆம் திகதி) மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எமது பிரயாணம் ஆரம்பமானது. எனவே அந்த முகாமிலிருந்த அனைத் துப் போராளிகளிடமும் மாத்தயாவும் நாங்களும் விடை பெற்றுக் கொண் டோம்.

காட்டுப்பகுதியால் சென்று கொண்டிருந்தோம். முன்னால் செல்லும் ஜீப்பை கருணாவே ஓட்டிச் சென்றார். அவருக்கு அருகில் மாத்தயா. நீண்ட நேரப் பிரயாணத்தின் இடையில் காட்டில் மரங்கள் முறியும் ஓசை கேட்டது. அந்த ஓசை நெருங்கியது. உடனே பிரேக் போட்டு ஜீப்பை நிறுத்தினார் கருணா. எதிரே ஒரு தனியன் யானை மாத்தயா இருந்த பக்கமே யானை நிற்கிறது. யானைக்கும் மாத்தயாவுக்கும் இடையில் ஏழு அடி தூரமே இருக்கும்.                                                                                             

  (தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 25

08.12.1990

மாத்தயாவின் அருகில் யானையைக் கண்டதும் அவரது மெய்ப்பாதுகாவலர் சூட்டியின் எம்-16 முழங்கியது. அவ்வளவு தான் வெடியையும் வாங்கிக் கொண்டு பிளிறியபடியே யானைஒரே ஓட்டமாக ஓடியது. நிச்சயமாக அது உயிர் பிழைத்திருக்காது. வெடி வாங்காமலிருந்தால் மாத்தயாவோ அல்லது யாரோ உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள். யானைக்குரிய குணத்தை அது காட்டியிருக்கும்.

இரவு இரண்டு மணியளவில் ஒரு முகாமைச் சென்றடைந்தோம். அடுத்தநாள் காலை 14ஆம் திகதி வெருகல் வாகரை கதிரவெளிப் பகுதியை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றேன். சரிஎன்றார் மாத்தயா. மாலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகளிர் படைப்பிரிவின் பயிற்சி முகாமுக்கு தான் செல்வதாகவும் எம்மை நேரே அங்கே வருமாறும் கூறினார்.

நானும்மற்றும் சிலரும் வெருகல் பகுதிக்குச் சென்றோம். ஆலய மடத்திலும், ஆற்றங் கரைகளிலும் இருக்கும் அகதிகளைச் சந்தித்தோம். ஆற்றங்கரையோரமாக இருந்த குடிசை ஒன்றுக்குச் சென்றேன். அங்கே ஒரு முதியவரும் பாட்டியும் இரு குழந்தைகளும் இருந்தனர். குழந்தைகள் கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள். நேரத்தைக் கவனித்தேன். பகல் 12.30 மணி. முதியவரை அணுகி “என்ன ஐயா இப்பதானா சாப்பாடு சாப்பிடுறீங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர் 'நாங்கள் காலையில் சாப்பிடுவதில்லை. மத்தியானம் தான் கஞ்சிகுடிப்போம் மாலையில் தான் சோறுசமைப்பதுண்டு" என்றார். அவரது முகத்தில் இயலாமையுடன் கூடிய சிரிப்புத் தெரிந்தது ஏன் தான் கேட்டோம் என்று ஆகி விட்டது எனக்கு. சோறு சமைத்தால் கறிக்கு என்ன செய்வீர்கள்? என்றுகேட்டேன். ஆற்றங்கரைகளில் கிடைக்கும் கீரைகளைப் பிடிங்கிச் சமைப்போம் என் றார். "அரச உதவி..." என்றேன். "இதுவரை இல்லை” என்றார். 'அப்ப சாப்பாட் முக்கு என்னவருமானம்?" என்று கேட்டேன். "பாய் இழைத்து விற்போம்" என்றார்.

குடிசையினுள். பார்வையைச் செலுத்தினேன். பின்னிமுடிக்கப்படாத நிலையிலிருந்த ஒரு பாயும் பாய் இழைப்பதற்கு பயன்படும் காயவைத்த புற்களும் அங்கே காணப்படடன. சொந்த இடம் எது என்றேன் 'பூநகர்' என்றார். மேலும் பலரைக் கண்டு விசாரித்து விட்டு கதிரவெளிப்பக்கம் சென்றேன்.

கதிரவெளி கடைத்தெருவில் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் ஒருவரைச் சந்தித்தேன். இந்தச் சாமான்களை எங்கே வாங்குகின்றீர்கள்? என்று கேட்டேன். நான்சாமான்வாங்கப் போவதில்லை வாழைச்சேனையில் இருந்து சாமான்' வாங்கி வருபவர்களிடம் தான் வாங்குவதுண்டு. என்றார். ஏன் நீங்கள் போவதில்லை என்று கேட்டேன். இது வரை தனக்குத் தெரிந்த ஆறு மூதூர் வாசிகள் இவ்வாறு சாமான் வாங்கப் போய்த் திரும்பி வரவில்லை எனக் கூறி அவர்களின் பெயரையும் தெரிவித்தார்.

அப்படியே அந்தப் பகுதி முழுவதையும் சுற்றிப் பார்த்தோம். அங்கிருந்து புறப்பட்டோம். இடையில் ஒரு முகாமுக்குச் சென்றோம் அங்குள்ள முகாம் பொறுப்பாளர் சங்கர் என்பவரைச் சந்தித்தோம். பன்னிரண்டாம் திகதியன்று சேனைக்கு பொருள்கள் வாங்கப் போன மூன்று வியாபாரிகளில் இருவரை முஸ்லிம் ஊர்காவற்படையினர் பிடித்துச்கொன்றதாகவும் ஒருவர் ஆடைகளை இழந்த நிலையில் தப்பி வந்ததாகவும் தெரிவித்தார்.

          அங்கிருந்து புறப்பட்டு மகளிர் படைப்பிரிவின் முகாமுக்குச் சென்றோம். விடுதலைப் புலிகளின் மகளிர் படைப் பிரிவின் சிரேஷ்ட போராளிகளில் ஒருவரான ஜெயாவே இந்த முகாமுக்கும், மட்டக்களப்பில் உள்ள பெண் போராளிகளுக்குப் பொறுப்பாக விளங்குகிறார். இவரிடம் மட்டக்களப்பு நிலைமைகளைக் கேட்டோம். என்னென்ன மாதிரியான திட்டங்களை தாங்கள் நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதை விளக்கினார். அப்போது மாத்தயாவும் ககுணாவும் வந்தனர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர். இறுதியில் மாத்தயாவும், கருணாவும் உரையாற்றினர். இதுவரை நாளும் தங்களை களத்தில் இறங்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்த அந்த மகளிர் படைப்பிரிவினருக்கு விரைவில் அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனக்கூறி கருணா சமாளித்தார். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ரஞ்சன் விஜேரட்னா கூறும் மழலைப் பட்டாளமாக இருந்தாலும் சரி, மகளிர் பட்டாளமாக இருந்தாலும் சரி அனைவரும் தங்களைக் களத்தில் இறங்க அனுமதிக்க வேண்டும் என்றே முரண்டு பிடிப்பார்கள்.

மகளிர் படைப்பிரிவினர் இவ்வளவு நாளும் ஏன் தங்களை களத்தில் இறங்க அனுமதிக்கவில்லை என்று போர்க் கொடி உயர்த்தியபோது ஏனோ எனக்கு ஈ. பி. ஆர். எல் எவ். பற்றிய நினைவு வந்தது. 1983ஆம் ஆண்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தாக்க அப்போதைய ஈ.பி.ஆர். எல். எவ்வின் இராணுவப் பிரிவான பி. எல். ஏயின் கொமாண்டர் குன்சி தலைமையில் ஒரு குழு புறப்பட்டது. பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் ஒவ்வொருவரும் நீர் முன்னுக்குப் போம் தோழர் இல்லை நீர் முன்னுக்குப் போம் தோழர் என்று பிரச்சினைப்பட்டார்கள். கடைசியில் ஒருவரும் போகத் துணியவில்லை. அவர்களின் அதிர்ஷ்டம் அந்த வேளை ஒரு நாய் குரைத்தது. எனவே குன்சி நாய் குரைத்துவிட்டது. ஆகவே அவர்கள் அலேட்' (உஷார் நிலை) ஆகிவிடுவார்கள் திரும்பிப் போவோம் என்று கூறி அனைவரையும் திருப்பிக் கொண்டு வந்துவிட்டார்.

அங்கே நீ முன்னுக்குப் போ என்கிறார்கள், இங்கே என்னை முன்னுக்கு விடு என்கிறார்கள். அதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

அன்று இரவே திருமலை மாவட்டத்தினுள் சென்றோம் எம்மை வரவேற்க பதுமனும் மற்றவர்களும் வந்திருந்தனர் எம்மை பதுமனிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பினார் கருணா.                                    

(தொடரும்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 26

09.12.1990

திருக்கோணமலை மாவட்டத்திற்கு திரும்பிய நாம் அங்குள்ள 'இளங்கோ முகாமில்' தங்கினோம். தீபாவளித் தினத்தன்று (17-10-90 புதன் கிழமை) கிழக்கு மாகாணத் தில் உள்ள கிராமியக் கலைஞர்கள் சிலரைச் சந்தித்துவரப் புறப்பட்டோம். வெருகல், மாவடிச்சேனை, முகத்துவாரம் போன்ற இடங்களிலிருந்து பல கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். திடீரெனவே நாம் இவர்களை அழைத்திருந்தோம். அதனால் இவர்கள் போதிய ஏற்பாட்டுடன் வரவில்லை. எனவே அவர்களைக்கொண்டு கிராமியப் பாடல்களைப் பாடச்சொல்லி அவற்றைப் படமாக்கத் தீர்மானித்தோம்.

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கே கூடியிருந்த மக்களைப் பார்த்து ஏதாவது கேட்போம் எனத் தீர்மானித் தேன். விற்பனைக்காக கச்சான் சுருள்களுடன் நின்ற ஒரு சிறுமியைப் பார்த்தேன் இச்சிறுமிக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். போட் டிருந்த சட்டை இருபக்கத்தாலும் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. தீவாவளித் தினத்தன்று புது ஆடை உடுத்து சந்தோஷமாகக் கொண்டாட வேண்டிய இச்சிறுமி வயிற்றுப்பிழைப்பாக கச்சான் விற்றுக்கொண்டு... அந்தப் பிள்ளையின் ஆடையும்... பிள்ளையை நெருங்கினேன். இன்று எவ்வளவு காசுக்கு வியாபாரம் நடந்தது என்று கேட்டேன், இன்னும் ஒருவரும் வாங்கவில்லை என்றாள். நேரத்தைப் பார்த்தேன். பதினொரு மணி. இவ்வளவு நேரமும் வியாபாரம் நடக்கவில்லை.  ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் அந்தப்பிள்ளை அங்கே நின்றுகொண்டிருந்தது. பிள்ளையைவிட்டு விலகினேன். அப்போது அருகில் நின்ற ஒருபோராளி ‘வீரமரணமடைந்த போராளி மேஜர் பவானின் மருமகள்தான் இந்தப் பிள்ளை’ என்று சொன்னார். கட்டைபறிச்சானில் அறுபது இராணுவ கொமாண்டோக்களை சடலமாக்கிய வெற்றிகரமான தாக்குதல் போன்ற பல துணிகரமான தாக்குதல்களில் பங்குபற்றிய போராளியின் குடும்பத்தினர் இந்த நிலையில் கொஞ்சம் தள்ளி நின்ற ஒருவரிடம் போனேன். நீங்கள் எந்த ஊர் என்று கேட்டேன். பாட்டாளிபுரம்' என்றார். பாட்டாளிபுரத்தின் தற்போதைய நிலைமை எப்படி?" என்று கேட்டேன். 'ஆமி வந்ததால எங்கட சோளமும் போச்சு - உடுக்கும்போச்சு' என்றார். எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. சோளம்போச்சு என்று சொல்வது எதிர்பார்க்கக்கூடிய விஷயம்தான். 'சோளமும்போச்சு. உடுக்கும் போச்சு' என்றால் சோளத்துக்கு உள்ள அதேயளவு முக்கியத்துவம் உடுக்குக்கும். அந்த மக்களைப் பொறுத்தளவில் கலைகளை எந்தளவுக்கு நேசிக்கின்றார்கள்; எந்தளவுக்கு அவர்கள் வாழ்வில் ஊடுருவி யிருக்கின்றது என்பதற்கு அவரது இந்த வார்த்தைகளே போதும்.

ஆலயவிதியில் கலைஞர்களை அமரச் செய்து கிராமியப்பாடல் களைப் பாடச் சொல்லி படமாக்கினோம். இக்காட்சியைக் காண ஏராளமானோர் குழுமியிருந்தனர். எங்கிருந்தாவது ஒரு உடுக்கு எடுத்துவாருங்கள் என்று ஒருவரை அனுப்பினார்கள். நீண்டநேரமாக அவர் வரவில்லை. எனவே ஒரு மிருதங்கம் மட்டுமே பக்கவாத்தியமாக அமைய கச்சேரி தொடங்கியது. பாடகர்கள் எல்லோருமே நாற்பது வயதை தாண்டியவர்கள்தான். மிகவும் உற்சாகத்தோடு பாடினார்கள். ரசிகர்களும். பெரும்பாலோனோர் அதே வயதுதான். நாடகமேடைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கையில் தன்னை மறந்த நிலையில் ஒருவர் எழுந்து அபிநயம் பிடித்து ஆடத்தொடங்கி விட்டார்.  பாடகர்களில் அறுபது வயதான ஒரு முதியவரே கதாநாயகனாத் திகழ்ந்தார். 1960 க்கு அண்டிய காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைப் பற்றியும் அருமையாகப் பாடினார். அவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கோ திருப்தியில்லை. “எவ்வளவு நீட்டுப்பாட்டெல்லாம் வச்சிருந்தநீ. கொட் இதென்ன கொட்டான்(சிறிய) பாட்டெல்லாம் பாடுறா நீ" என்று அன்புடன் கோபித்துக் கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இக்கச்சேரியின் பின் முகாமுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டோம். அப்போதுபறட்டை தலை யுடன் உடுக்கும்கொண்டு சைக்கிளில் ஒருவர் வேகமாக வந்தார். பாடுவதற்காக இவ்வளவு ஆர்வமாக வந்த அந்தக் கலைஞரைத் திருப்பி அனுப்பினால் அந்தக் கலையுள்ளம் வேதனைப்படும் என்பதை உணர்த்த நாம் அவரைப் பாடச் சொன்னோம். கையில் உடுக்கை வைத்து அடித்தபடியே தன்னைமறந்த நிலையில் அவர் அனுபவித்துப் பாடிக்கொண்டிருந்தார். காத்தவராயன் கூத்துப் பாடல்கள் அவை. உடுக்கை அவதானித்தேன். பல குஞ்சங்கள் தொங்கின. ஆடைகள் தைக்கும் போது எஞ்சும் கழிவு துண்டுகளால் இக்குஞ்சங்கள் அமைக்கப் பட்டிருந்தன, பலவர்ணங்களில் அவை இருந்தன. கலைகளை நேசிப்பதன் இன்னுமொரு அடையாளம் இது.

அவரது பாடல்களை கொஞ்ச நேரம் படமாக்கிய பின் கலைஞர்கள் அனைவரிடமுமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் முகாமுக்கு வந்தோம்.

முகாமுக்குத் திரும்பியதும் சில செய்திகள் அறிந்தோம். நாங்கள் மட்டக்களப்புக்கு போகும் போது இருந்ததை விட தற்போது இராணுவ முகாம்கள் கூடியிருக்கின்றன என்பதே அது. நாங்கள் சென்ற பாதையில் மேலும் நான்கு முகாம்கள் கூடியிருக்கின்றன. ஆகவே நாங்கள் மேலதிகமாக நடக்க வேண்டியிருக்கும். சுற்றுப்பாதை வழியாகவே இந்த முகாம்களை விலத்திச் செல்ல வேண்டும்.

நடப்பதற்கு தயாராக இருந்த வேளை கருணா வந்து சேர்ந்தார். தலைவர் அழைத்திருப்பதால் இந்தப் பயணத்தில் தானும் எம்முடன் இணைந்து யாழ்ப்பாணம் வரப்போவதாகத் தெரிவித்தார்; மீண்டும் நடைதொடங்கியது. இப்போது மேலதிகமாக ஆட்கள் இருந்தபடியால் அனுமார் வால்போல வரிசை நீண்டதாகக் காணப்பட்டது. ஏற்கனவே அனுபவித்த சிரமங்களை அனுபவித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். சில இடங்களில் இராணுவ முகாமில் இருந்து டோர்ச்லைட் அடித்துப் பார்த்தார்கள். எனினும் சிக்கல் ஏதுமின்றி போய்ச் சேர்ந்தோம். பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு மூன்று மணி வரை இந்தப் பிரயாணம் தொடர்ந்தது.                                                              

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 27

10.12.1990

 

அடுத்த முகாமிலிருந்த போது எமக்கு பல தகவல்கள் கிடைத்தன. கட்டைபறிச்சானில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டைபறிச்சான் இராணுவ முகாமிலிருந்து 15-10-90 அன்று வெளியே வந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஜீப்பும் எரிந்தது. பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

அதேதினம் புதிதாக அமைக்கப்பட்ட கற்குழி முகாமை நோக்கி சூரங்கல் முகாமிலிருந்து சென்ற இராணுவத்தினர்மீது கண்ணிவெடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் இத்தாக்குதலில் 7 இராணுவத் தினர் கொல்லப்பட்டனர் என்றும் ஒரு எவ், என். சி. உட்பட பல ஆயு தங்களும் ரவைகளும் கைப்பற்றப்பட்டன என்றும் அறிந்தோம். கட்டைபறிச்சான் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய ராஜன் என்பவரைச் சந்தித்து அத்தாக்குதல் எப்படி நடைபெற்றது என்பதை அறிந்தோம். கற்குழியில் கைப்பற்றப்பட்ட எவ். என்.சி யையும் பார்த்தோம்.

கற்குழியில் இடம் பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து தம்பலகாமம் கோவிலடி அகதி முகாமுக்குள் இராணுவம் புகுந்து கள்ளிமேட்டைச் சேர்ந்த 55 வயதான மா. துரைநாயகம், முள்ளியடியைச் சேர்ந்த 35 வயதான அ. நாகராசா, மேற்குக் கொலனியைச் சேர்த்த 38 வயதான அமிர்தலிங்கம் கூட்டாம் புளியைச் சேர்ந்த சா. சந்திர சேகரம் 15 வயதான இவரது மகன் ச. ஜீவராசா ஆகியோரைக் கைது செய்து கொண்டு போனதாகவும் அறிந்தோம். கைது செய்யப்பட்ட சந்திர சேகரத்தின் வீட்டிற்குச் சென்ற முஸ்லிம் ஊர்காவல்படையினர் தந்தையையும் மகனையும் விடுவிக்க 2 லட்சம் ரூபா கோரியதாகவும் பணமாக தன்னிடம் இல்லை என்று அவரது மனைவி கூறியபோது அவரது கழுந்தை நெரித்ததாகவும் அறிந்தோம்.

சடையன என்பவரை இராணுவம் பலமாகத் தாக்கியதால் அவர் தம்பலகாமம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்றும் ஆஸ்பத்தி ரிக்குச் சென்ற முஸ்லிம் ஊர் காவல்படையினர் வெளியே வா கவனித்துக் கொள்கிறோம் என்று சொன்னதால் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி காட்டுப் பகுதியில் அலைவதாகவும் சொன்னார்கள்.

கண்ணிவெடிச் சம்பவத்திற்கு முதல்நாளும் (14.10.90) தம்பலகாமம் முகாமிலிருந்து திருக்கோணமலைக்குச் செல்லும் போது சிலர் கைது செய்யப்பட்டனர் என்று சொன்னார்கள். மேற்கு கொலனி கிராம சேவையாளரான 32 வயதான க. மாணிக்கராசா, நடுபிரப்பந்திடல் வாசியான 30 வயதான க. சிவபாதசுந் தரம், 35 வயதான இ. வைரமுத்து பஸ்ஸில் இருந்த ஒரு மட்டக்களப்புவாசி, ஒரு கந்தளாய்வாசி ஆகிய ஐவர் கைது செய்வப்பட்டதாகவும் இவர்கள் உயிருடன் இல்லை எனவும் தெரிவித்தனர். அக்டோபர் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மேற்குக் காலனியைச் சேர்ந்த புஷ்பராசாவின் மகனைப்பற்றிய விபரமுமில்லை என்றனர். அக்டோபர் 9 ஆம் திகதி பிற்பகல் 1-30 மணியளவில் தம்பலகாமம் முகாமை அண்டியபகுதியில் உள்ள வயல் வெளியில் வைத்து வர்ணமேட்டைச் சேர்த்த 32 வயதான வி. வசந்தகுமார், 22 வயதான மு. நிமலேந்திரன், முள்ளியடியைச் சேர்ந்த 20 வயதான சு. நாகேந்திரன், 24 வயதான நாயன்மர் திடலைச் சேர்ந்த சி. குட்டி, 21 வயதான நாயன்மர் திடலைச் சேர்ந்த இ. திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் இதில் திருநாவுக்கரசு மட்டுமே உயிரோடு இருப்பதாகத் தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

கற்குழிச் சம்பவத்தின் பின்னர் கள்ளிமேடு, சிப்பித்திடல், கரைச்சித்திடல், கூட்டாம்புளி, பட்டிமேடு போன்ற கிராமங்கள் தமிழர் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி கிடைத்தது. இந்தச் சம்பவத்தின் பின் ஒரு நாள் இரவு மாடுகள் சென்று கொண்டிருந்த போது அவை, பயந்திருந்த இராணுவத்தினரின் கண்ணுக்கு புலிகள் போலத் தோற்றமளித்ததால் இராணுவத்தினர் சரமாரியாகச் சுட் டனர். இதில் ஏழு மாடுகள் இறந்தன.

இந்த விபரங்களை நாம் தெரிந்து கொண்ட பின்னர் பிரதான முகாமுக்கு போகலாம் என்ற தகவல் கிடைத்தது. எனவே மீண்டும் நடக் கத்தொடங்கினோம். இதற்குள் ஒரு போராளி கண்ணில் கோளாறு இருப்பதாகத்தெரிவித்தார். எனவே முன்னே செல்லும் ஒருவரில் ஒரு கயி றைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டு பிரயாணத்தைத் தொடரச் சொன்னார் மாத்தயா. அப்படியே அவர்கள் சென்றார்கள். பாரமான பொதிகளுடன் ஒருவர் போக பின்னால் இவர் பிடித்துக் கொண்டு போவது காவடி ஆட்டத்தை நினைவுபடுத்தியது. செடில் பிடிப்பவரைப் போல அந்த நோயாளி வந்து கொண்டிருந்தார் முன்னே செல்பவர் விழுந்தால் இவரும் விழுவார். இப்படியாகப் பிரயாணம் தொடர்ந்தது.

இந்தப் பிரயாணத்தில் நாம் முன்பு போன போது இருந்த பல முகாம்கள் இடம் மாறியிருந்தன. அடிக்கடி முகாம்களை மாற்றுவது என் பது இலேசான காரியமல்ல. ஒருவாறு பிரதான முகாமுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

அந்த முகாமில் திருமலை அரசியற் பொறுப்பாளர் ரூபன் அவர்களிடம் நிதர்சனத்துக்காகவும் ஈழநாதத்துக்காகவும் ஒரு பேட்டி எடுத்தேன். திருமலையின் இன்றைய நிலைபற்றி வெளியுலகிற்கு கொண்டு வருவதே இதன் நோக்கம். அந்தப் பேட்டியில் திருமலை மாவட் டத்தில் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றியும் கேள்வி கேட்டிருந்தேன். ஏனெனில் திருமலை மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் மகளிர் படைப்பிரிவை நான் காணவில்லை.

திரு.ரூபன் அவர்களின் பேட்டி முடிந்ததும் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி உரையாடினோம் அப்போது திரு. மாத்தயா சில கருத்துக்களைக் கூறினார்.

எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் பங்களிப்பு மகத்தானதாக இருப்பதைக் காணலாம். ஏனெனில் ஒடுக்குமுறை யாளர்களுக்கு முதலில் முகம் கொடுப்பது பெண்களே. எனவே அவர்களுக்குத்தான் புரட்சிக்கான நிர்ப்பந்தங்கள் உண்டு. அத்துடன் விடுதலைப் போராட்டங்களில் ஆண்களின் இழப்பு அதிகரிக்கும் போதும் உழைப்பாளர் தொகை குறையும் போதும் பெண்களின் பங்களிப்பு இயல் பாகவே அதிகரிக்கின்றதைபல வரலாற்று நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. நான் அறிந்தவரை சில நாடுகளில் நடந்த போராட்டங்களில் பெண்களே முன்னணியில் நின்று தலைமை தாங்கிப் போராடியிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த விடயங்கள் அமுக்கப்பட்டுவிட்டன. எமது போராட்டத்திலும் பெண்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க நாம் தான் பிந்தி விட்டோமே தவிர அவர்கள் தயாராகத்தான் இருந்தார்கள் என்றார். கருணா. பதுமன், ரூபன். மாத்தயா ஆகியோர் தொடர்ந்து பல விடயங்களை ஆராய்ந்தார்கள்.

இறுதியாகக் கிழக்கு மாகாணம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் பட்டது. சில அரசியல் ரீதியான பிரச்சினைகளை தலைவருடன் பேசி முடிவெடுப்பதெனத் தீர்மானித்தனர். அதையடுத்து எமது பிரயாணத்தின் போது வடக்கு நோக்கி வரும் பலரைக் கண்டோம். மிகுந்த வேதனையுடன் தமது தாய் மண்ணைப் பிரிந்து வடக்கே வரும் அவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியும் எழுந்தது.

முன்னர் சந்தித்த அனுபவங்களுடன் எமது பயணம் தொடர்ந்தது.

திருமலை மாவட்ட எல்லையில் பதுமன் எம்மை வழி அனுப்பி வைத்தார். மட்டக் களப்புத் தளபதி கருணாவுடன் முல்லைத்தீவு மாவட்டத் தினுள் காலடி வைத்தோம்.                                                          

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 28


11.12.1990

அன்பான வாசகர்களே!

36 நாட்களாக வெளிவந்த “உதிக்கும் திசைநோக்கி உன்னத பயணம்" கட்டுரை தொடரைப் படித்திருப்பீர்கள். கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையை நேரில் தெரிந்துகொள்ள திரு. மாத்தயா அங்கு சென்றபோது அவருடன் கூடச்சென்ற நான் என்னால் முடித்தவரை அந்த மக்களின் அவல நிலைகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொடரின் மூலம் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது பத்துவீதமே என நான் கருதுகிறேன். அந்த அவலங்களின் உண்மை வடிவத்தை முழுமையாக எழுத்தில் வடிக்க என்னால் முடியவில்லை. அந்தளவுக்கு எழுத்துத் துறையில் எனக்கு அனுபவமில்லை. இத்துறையைப் பொறுத்தவரை நான் கற்றுக்குட்டிதான்.

உச்சக்கட்ட இன அழிப்பு, அவலங்கள் நிறைந்துள்ள அம்பாறை மாவட்டத்திற்கு எம்மால் போக முடியாததால் இக்கட்டுரை எந்த விதத்திலும் முழுமையானதல்ல. அத்துடன் தொடராக இத்தனைநாள் வாசகர்களை ஒரே நிலையில் வைத்திருப்பதில் எந்தளவுக்கு வெற்றிகண்டுள்ளேன் என்பதும் தெரியவில்லை. என்னோடு கூடவந்த நிதர்சனம் படப்பிடிப்பாளர்கள் இவற்றை வீடியோ மூலம் பட மாக்கியுள்ளார்கள். எனவே இவற்றை நேரில் காணும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கும்போது அங்குள்ள நிலைமையின் கோரத்தை, அவலத்தை இதைவிடக் கூடுதலாக உங்களால் தெரிந்து கொள்ளமுடியும் எனக் கருதுகிறேன்.

இக்கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கையில் அங்குள்ள கலாசாரங்கள், இயற்கை அமைப்பு, குடியேற்றங்கள் அனைத்தையும் வெளிக்கொணர வேண்டுமென்றுதான் நினைத்தேன். ஆனால் அவலங்களையே முழுமையாக என்னால் கொண்டுவர முடியவில்லை. அதைவிட கட்டைபறிச்சானில் ஒரு தாக்குதலில் 60 இராணுவக் கொமாண்டோக்கள் பலியான சம்பவம் போன்ற விடயங்களை எழுத முடியவில்லை. முடிந்தால் அவற்றையும் புத்தகவடிவில் தர முயற்சிக்கிறேன்.

நாங்கள் அங்கு சென்றபோது இருந்த நிலைமைகளை விட இப்போதைய நிலைமை இன்னும் மோசம் திருமலையிலிருந்து மட்டக் களப்பு சென்று திரும்ப முன்னர் நான்கு இராணுவ முகாம்' கள் அங்கே கூடிவிட்டன. இப்போது மேலும் பல முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன . 1010 சதுரமைல் உள்ள திருக்கோணமலை மாவட்டத்தில் தற்போது 108 சிறிலங்காப் படை முகாம்கள் உள்ளன. அந்தளவுக்கு ஆக்கிரமிப்பின் வேசம் உச்சநிலையிலுள்ளது. இதைவிட சிங்கள, முஸ்லிம் ஊர்காவல் படைகளின் காவல் நிலைகள் வேறு. இத்தனைக்கும் மத்தியில் தான் அங்கு போராளிகள் போராடுகின்றார்கள். எஞ்சி இருக்கும் மக்கள் இவர்களுக்குக் கைகொடுக்கிறார்கள். குடியிருப்புக்களில் மக்கள் இல் லாத இடங்களில் போராளிகள் எதிர் நோக்கும் சிரமங்கள் எடுத்துரைக்க முடியாதவை. எந்தத் தகவல்களுமோ போராளிகளுக்குக் கிடைக்கமாட்டா. சகலத்தையும் போராளிகளே செய்ய வேண்டும். ஆனாலும் தங்கள் மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளார்கள்.

அம்பாறை மாவட்டத்தின் அவலங்கள்தான் மிக அதிகம். இன அழிவைக் கூடுதலாகச் சந்தித்த மாவட்டம் இதுவேதான். அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை இந்த மூன்று மாவட்டங்களிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட இந்தப் படுகொலைகள் எவ்வளவு காலத்துக்குள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என்பதை அவதானித்தால் தான் இன அழிப்பின் வேகம் புரியும்; கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டோர் கழுத்தை நெரிக் கையில்... வருத்தத்துடன், அதேவேளை தவிர்க்க முடியாமல் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகளுக்கு காரணங்கள் புரிந்திருக்குமென நினைக்கிறேன்.

அகதி முகாம் படுகொலைகள், சுற்றி வளைப்புக்கள், பயணங்களின் போது கடத்தப்படுதல் என்று பல்வேறு வடிவங்களில் இவை மேற் கொள்ளப்படுகின்றன. வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த அவலங்களை மூடிமறைக்க, அவற்றை நியாயப்படுத்த சிறிலங்காவின் தேசியப் பத்திரிகைகள், அதிலும் குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகள் எடுத்துவரும் பகீரதப் பிரயத்தனங்கள் தான் - வந்தாறு மூலை அகதிகள் முகாமிலிருந்து அகதிகள் வெளியேற்றம் இதற்கு சிறு உதாரணம்.

தடுத்து வைக்கப்பட்டோர் பற்றிய தகவலைப் பெறுதல், நோயாளிகளை பராமரித்தல் காயமடைந்தோருக்கு வைத்திய வசதி, அகதிமுகாம் மக்களுக்கு உணவு, அவர்களுக்கான வைத்திய வசதி போன்றனவெல்லாம் தங்களுடைய கடமைகள். இவற்றில் எவரும் தலையிடாதீர்கள். தலையிட முடியாது என்றெல்லாம் இராணுவம் இல்லாத பகுதிகளில் முழக்கமிடும், (ஏன் சண்டித்தனம் என்று கூடச் சொல்லலாம்) செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கிழக்கு மாகாணத்தில் எந்தளவு பொறுப்புடன் கடமை புரிந்துள்ளனர் என்பதும் கேள்விக் குறியே; முடிந்தால் எனது அன்புக்குரிய வாசகர்கள் இந்த அமைப்புகள் தங்கள் பணி குறித்து அச்சிட்டு வைத்திருக்கும் பிரசுரங்களை வாங்கி கிழக்கின் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஐயாயிரம் பேர் டிசம்பர்-10 (தற்போதைய நிலவரப்படி) வரையில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக் கணக்காணோர் கைதாகியுள்ளனர். தடுப்புக்காவலில் இருப்போர் பற்றி அறிகிறார்களோ இல்லையோ, இவர்கள் கண்ணெதிரே கைது செய் யப்படுவதே அலட்சியமாகிறது இவர்களுக்கு.

அடுத்து கோட்டையைக் கைப்பற்றுவதில் மட்டக்களப்பு ஆயுதங்களின் பங்களிப்பு கணிசமானது. அதைவிட மட்டக்களப்பு போராளிகளும் அங்கு போராடியிருக்கிறார்கள். வீரமரணமடைத்திருக் கின்றார்கள்என்று திரு. நியூட்டன் கூறிய வார்த்தை அவதானிக்கப்படவேண்டியவை, இன்று வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்களைப் பாதுகாப்பதில் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பை இந்த வார்த்தைகள் உணர வைக்கும், பதிலுக்கு நாம் அவர் களுக்காக என்ன செய்துள்ளோம். வெட்கப்பட வேண்டிய விடயம். இந்தப் போரினால் எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்தான். பாலுக்குச் சீனி இல்லையென்ற பிள்ளைக்கும் கூழுக்கு உப்பு இல்லையென்ற பிள்ளைக்கும் ஒரேயளவு கவலைதான் என்பார்கள், கூழே இல்லாத பிள்ளைகளுக்கு...?

இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்த எவருக்காவது கிழக்கு மாகாண மக்களுக்கு உதவ வேண்டும். அந்த அவலங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று சிந்தனை பிறந்திருக்குமாயின் இத்தொடரை எழுதிய நோக்கம் வெற்றி பெற்றதென்றே கருத வேண்டும். அன்பான வாசகர்களே! எங்கள் பார்வைகளை அகலமாக்கிக் கொள்வோம். அவர்களை நோக்கி எங்கள் கரங்கள் நீளட்டும். உதிக்கும் திசையிலுள்ளோர் உயிர் பெறட்டும். நீங்கள் சம்மதம் தானே? நன்றி.

கரும்பறவை

(முற்றும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதில் சில பாகங்கள் விடுபட்டுள்ளன. அவை அனைத்தையும் சேகரித்து முழுமையான நூலாக்கி இதை வெளியிட்டு வைக்குமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். இது எமது தேசத்தின் இன்றியமையாத நூலாகும்.

இதை ஈழத்தமிழர்கள் தான் வெளியிடவேண்டும் என்றில்லை. தமிழகத் தமிழர்களும் வெளியிடலாம். யார் குற்றினாலும் அரிசியானால் சரி.

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.