Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல்

04 Jan, 2026 | 02:21 PM

image

(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்  எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு எனும் அமைப்பு இப்புதிய வரைவு தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது, தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் அடையப்பட்டிருக்கும் மனித உரிமைகள் சார்ந்த பெருவெற்றி போல் காண்பிக்கப்படுகின்றது.

அந்த பிம்பத்தின் விளைவாக நிர்வாக ரீதியான தடுத்துவைப்பு, இராணுவ அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் சார்ந்த குற்றங்கள் என்பன உள்ளடங்கலாக அவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள மிகமோசமான அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற தன்மை நிலவுகின்றது.

பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள் இவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதக்குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்துடன் அவசியமேற்படும் பட்சத்தில் அவசரகால வழிகாட்டல்களை இணைந்துப் பிரயோகிப்பதை விடுத்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் பிரயோகிக்கப்படுமாயின், அது சம்பந்தப்பட்ட நபருக்கான பாதுகாப்பு

தளர்த்தப்பட்ட குற்றவியல் அடிப்படையுடன், பரந்துபட்ட நிறைவேற்றதிகாரப் பிரயோகத்துக்கும் இடமளிக்கும். பரந்துபட்ட அதிகார வழங்கலுக்கு வாய்ப்பளிக்கும் இச்சட்ட வரைவின் அடிப்படை நோக்கம், அதன் பெயரில் உள்ளவாறு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதே தவிர, வன்முறைகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாப்பது அல்ல.

ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இவ்வரைவை உடன் வாபஸ் பெறுமாறும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து சகல தரப்பினருடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/235179

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்!

05 Jan, 2026 | 03:31 PM

image

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத அதேவேளை நடைமுறையில் உள்ள   பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர தீர்மானித்துள்ளது. 

இம் முயற்சிகளுக்கு எதிராக  மக்கள் பேரவைக்கான இயக்கம்  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்களால்  டிசம்பர் 30ம் திகதி நீதி அமைச்சின் அலுவலகத்தில் நீதியமைச்சரிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. 

மேலும் இது தொடர்பில்  நீதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் அல்லது வேறு பெயரில் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் அடிப்படையில் ஜனநாயக விரோத, மனித உரிமைகுக்கு எதிரான அபாயங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள  தடுப்புக்காவல் உத்தரவுகலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அதேவேளை , தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகலின் கீழ் நீதிமன்ற நடைமுறை மூலம் விசாரணைகளை நடத்தி சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் இயலுமாநதாக இருக்குப் போதே, தற்போதைய  அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே  ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பெயரில் புதிய சட்டங்களை கொண்டு வர முனைகிறது எனபதும் வலியுறுத்தப்பட்டது. 

606453439_845450425029682_16241149512506

607953779_845450198363038_25093235167524

606025825_845450295029695_75184509070829

605547329_845450101696381_39063169956799

605246523_845450151696376_41374314446790

https://www.virakesari.lk/article/235262

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.