Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

Published By: Digital Desk 3

15 Feb, 2026 | 12:05 PM

image

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குரார்ப்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர்.

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டமானது வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

3__2_.jpg

https://www.virakesari.lk/article/238696

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்

25 Feb, 2026 | 06:34 PM

image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.

இதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  “PTAஐ நீக்கு! PSTA  சட்ட வரைவை மீள பெறுக”, “ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்”, “நீதித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்”, “மனித மாண்பு பேணப்பட வேண்டும்”, “உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்”, “அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக எமது குரலை வலுப்படுத்துவோம்”, “மக்கள் நலன் கருதி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

622688408_3542636645890165_7909059237877

639845624_3734281593547265_1509141424448

638152841_949991637589995_26036835428166

635911976_1281922459974264_9125507221455

638367576_1693251178149007_7437898762174

636084738_1534636994891030_2633750040843

https://www.virakesari.lk/article/239583

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.