Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!

Feb 22, 2026 - 12:28 PM

இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக  பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழாவில், வாழ்வகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.

மூன்றாம் நாளான நேற்று (21) நடைபெற்ற ஒன்பதாம் அமர்வில், வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் செல்வி. சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களுள் துரைராசா அருண்குமார், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, 1S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமன்றி, வாழ்வக வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் ஏனைய மாணவர்களுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றுச் சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இன்றுவரை இவருக்கே உரித்தாகின்றது.

பார்வைத்திறனற்ற இந்த இரு மாணவர்களும், தமது வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டமை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlxe43pw0003356pl60yv84b

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியை பறித்த கடவுள் வழியை கொடுக்க மறக்கவில்லை; யாழ்.பல்கலை பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!

Published By: Digital Desk 3

22 Feb, 2026 | 09:25 AM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது தொடர்ச்சியாக மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

பார்வை இழந்தும், கல்வியில் சாதிக்த வேண்டும் என்ற அவாவில் கல்வி பயின்று, இவ்வாறு பட்டம் பெற்ற பட்டதாரிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/239257

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.