Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

Feb 28, 2026 - 08:33 AM

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும்.

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே உறுதிப்படுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானத்தில் அவர் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை.

பதவி விலகல் தீர்மானம் குறித்து 'அத தெரண' விடுத்த வினவலுக்குப் பதிலளித்த அவர், தனது தலைமைப் பயிற்சியாளர் ஒப்பந்தக் காலம் மேலும் எஞ்சியிருந்த போதிலும், அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

2024 ஜூலை மாதம் இந்தியாவிற்கு எதிரான தொடரின் போது இடைக்காலப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜயசூரிய, அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஜயசூரியவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

அத்துடன், 2 போட்டிகள் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளன.

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்!

Mar 1, 2026 - 12:33 AM

பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (28) நடைபெற்ற போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளாரா என்பது குறித்து சனத் ஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற போட்டியின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், தான் முன்னரே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், தனது ஒப்பந்தக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும், இது குறித்து இதுவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும், இது தொடர்பாக கிரிக்கெட் நிறுவனத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய,

இந்த பதவியை வேறு யாருக்காவது வழங்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து தொடரின் போது, இதில் தொடர விருப்பமில்லை என்று கூறினேன். அந்த முடிவை எடுத்த பின்னரே நான் அதனைத் தெரிவித்தேன். உலகக்கிண்ணத் தொடரை ஒரு பயிற்சியாளராகச் சிறந்த முறையில் நிறைவு செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அதனைச் செய்ய முடியவில்லை. அது குறித்து கவலையடைகிறேன்.

ஆனாலும், அணி இருந்த நிலையிலிருந்து ஒன்றரை வருடங்களுக்குள் தரவரிசையில் 4ஆம் இடத்திற்கு கொண்டு வர என்னால் முடிந்தது. டெஸ்ட் அணியை 6ஆம் இடத்திற்கு கொண்டு வந்தேன். இதனை நான் தனியாகச் செய்யவில்லை, எனது உதவிப் பணியாளர்கள் ஆரம்பத்திலிருந்தே எனக்கு பெரும் ஆதரவை வழங்கினார்கள். நான் செய்த விடயங்கள் குறித்து மகிழ்ச்சியடைய முடியும் என்று நினைக்கிறேன்.

ஆனால் உலகக்கிண்ணத் தொடர் நிறைவடைந்த விதம் குறித்து என்னால் மகிழ்ச்சியடைய முடியாது. அது குறித்து மிகவும் கவலையாக உள்ளது. பார்க்கலாம், எனது ஒப்பந்தம் ஜூன் மாதம் வரை உள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. எனவே அவர்களுடன் பேசி அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.