Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சர்வதேச மகளிர் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச மகளிர் தினம்

Mar 8, 2026 - 06:55 AM

இன்று சர்வதேச மகளிர் தினம்

பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான சர்வதேச மகளிர் தினம் இன்று (08) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

இது வெறும் ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு உலகளாவிய இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது. 

முதலாவது மகளிர் தினம் 1909 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவில் கொண்டாடப்பட்டுள்ளதுடன், 1910 ஆம் ஆண்டில் ஜேர்மனிய செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின் என்பவரால் இது சர்வதேச தினமாக முன்மொழியப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

பின்னர் 1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகப் பெயரிடப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது. 

சர்வதேச மகளிர் தினத்தில் பிரதானமாக மூன்று நிறங்கள் பயன்படுத்தப்படுவதுடன், அது ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களால் பிரதிபலிக்கப்படுகிறது. 

ஊதா நிறம் நீதி மற்றும் கௌரவத்தையும், பச்சை நிறம் நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறது. 

அதேபோன்று வெள்ளை நிறம் தூய்மையை அடையாளப்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இன்று சர்வதேச மகளிர் தினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் : பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அறிக்கை 

06 Mar, 2026 | 04:58 PM

image

பெண்களின் சம உரிமைகள், நீதி மற்றும் கௌரவம் என்பவற்றுக்காகத் தொடரும் போராட்டத்தில் சர்வதேச மகளிர் தினம் என்பது பெரும் குறியீட்டுருவான முக்கியத்துவத்தினை வகிக்கின்றது. இந்த வருட சர்வதேச மகளிர் தினத்துக்கான ஐக்கிய நாடுகள் தொனிப்பொருள், ‘உரிமைகள், நீதி, நடவடிக்கை, சகல பெண்களுக்காகவும் சிறுமிகளுக்காகவும்’ என்பதாகும்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான எமது கடப்பாட்டினைப் புதுப்பிக்கும் ஒரு நாளாகவே பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகிய நாம் இந்த நாளைக் கருதுகின்றோம்.

இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் வகிபாத்திரம் மற்றும் செயற்பாடுகள் பற்றிய சுருக்கமான விளக்கத்தினை வழங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த நாள் அமைந்துள்ளது.

இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, 2004ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டவாக்க மேம்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லாகத் திகழ்கின்றது.

அரசியலமைப்புப் பேரவையினதும் பாராளுமன்றப் பெண்கள் குழுவினதும் விதப்புரைகளின் அடிப்படையில் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டனர்.

ஒரு சுயாதீனமான ஆணைக்குழு என்ற அடிப்படையில், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான பரந்த அதிகாரங்கள் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கு ஆணையாக வழங்கப்பட்டுள்ளன.

பெண்களின் உரிமைகள் பற்றிய மீறுகையினை விசாரித்துப் புலனாய்வு செய்வதற்கான தத்துவம் முதற்கொண்டு, மத்தியஸ்தத்தின் மூலம் குறைகளை நிவர்த்தி செய்தல், பெண்களின் உரிமைகளுக்காக ஆதரித்து வாதாடுவதற்காகவும் பெண்களின் உரிமைகள் பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அரச நிறுவனங்கள் மாத்திரமன்றி தனிநபர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இயைந்தொழுகுவதைக் கண்காணித்து மதிப்பிடுவதற்காகவும் பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் பற்றிய ஒரு தேசியக் கொள்கையினை உருவாக்குதல் வரை இந்தத் தத்துவதங்கள் பரவிக் காணப்படுகின்றன.

2004ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டம் மற்றும் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஆகியன நாடு முழுவதுமுள்ள பெண்கள் உரிமைகள் கூட்டுக்களதும் அமைப்புக்களதும் தசாப்த கால போராட்டங்களினதும் அயரா முயற்சியினதும் உச்சபட்ச விளைவே என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

2025 செப்டெம்பரில் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து, ஆணைக்குழுவுக்கென சுயாதீனமானஅலுவலக வளவுகள் இல்லாமை, பணியாளர்கள் இல்லாமை போன்ற பல சவால்களுக்குப் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

ஆணைக்குழுவின் முதலாவது தவிசாளர் நியமிக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே அவர் அண்மையில் அப்பதவியினை இராஜினாமா செய்தமையும் இச்சவால்களுள் உள்ளடங்குகின்றது. சம்பந்தப்பட்ட சகல பங்கீடு பாட்டாளர்களினதும் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் இச்சவால்கள் தீர்க்கப்படவேண்டியுள்ள நிலையில், கடந்த மாதங்களில் எமக்கு எண்ணற்ற வழிகளில் உதவிய அனைவரினதும் அந்த உதவிகளை நாம் ஆழமான மெச்சுதலுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.

இந்த நாட்டின் பெண்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றுள் பின்வருவன உள்ளடங்குகின்றன என்பதுடன் இச்சவால்கள் பின்வருவனவற்றுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டவை அல்ல. பெண்களைப் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தல், பொருளாதார வலுவூட்டலின்மை, பாகுபாடு மிக்க சட்டக் கட்டமைப்புக்களாலும் நிறுவனக் கட்டமைப்புக்களாலும் ஏற்படும் முழுமையான அநீதிகளுக்குப் பெண்கள் உட்படல், அரசியல் பதவிகளிலும் தலைமைத்துவப் பதவிகளிலும் பெண்கள் போதியளவு இடம்பெறாமை, ஒரு பால்நிலையினருக்கு மாத்திரம் அதிக தாக்கம் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புறுநிலைகள். எனவே, சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான பெண்களின் உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பவற்றினை உறுதிப்படுத்த பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவினால் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்படவேண்டியுள்ளன.Politics

இந்த பின்னணியை கருத்தில்கொண்டு, கடுமையான வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், பணியாளர்களும் பொருத்தமான அலுவலக வளவுகளும் இல்லாதிருக்கையிலும் எம்மால் இனியும் மௌனம் காக்க முடியாது என நாம் உறுதியாக நம்புகின்றோம். எனவே, பெண்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதான செயற்பாடுகளில் சிலவற்றினை பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு தொடங்கும். அவற்றுள் உள்ளடங்குபவை:

⦁ பெண்களின் உரிமைகள் தொடர்பான, 2024ஆம் ஆண்டின் பெண்கள் வலுவூட்டல் சட்டம் தொடர்பான பெண்களின் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள், நியமங்கள் மற்றும் தராதரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தகவல்களைப் பரப்பவும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.

⦁ பெண்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பதற்கு ஆதரவளிக்கும் ஆய்வினைப் பொறுப்பேற்று அறிவினைப் பரப்புதல்.

⦁ பின்வருவன தொடர்பாக அரசாங்கத்திற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருக்கும் விதப்புரைகளை வழங்குதல்:அ) உள்நாட்டுச் சட்டங்களும் கொள்கைகளும் நிர்வாக நடைமுறைகளும் பெண்களின் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள் மற்றும் தராதரங்களுக்கு அமைவாக உள்ளன என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.ஆ) பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் தேவைப்படும் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் நிர்வாகப் பணிப்புரைகளையும் நடைமுறைகளையும் உருவாக்கல்.

⦁ பெண்களின் உரிமைகள் பற்றிய உத்தேசச் சட்டவாக்கங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றின் தாக்கத்தினை மதிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்களுக்கு விதப்புரைகளை வழங்குதல்.

⦁ பெண்களின் உரிமைகளைப் பாதிக்கும் முக்கியமான விடயங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகப் பகிரங்கக் கூற்றுக்களை வெளியிடுதல்.

⦁ பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் பொதுவான கொள்கைகளையும் நடைமுறைகளையும் போஷிப்பதற்காக அரச நிறுவனங்களுடனும் அரச சார்பற்ற செயற்படுனர்களுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் இணைந்து செயற்படுதல். மேலும்

⦁ பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் தொடர்பாக ஒரு தேசியக் கொள்கையினை உருவாக்கல்.

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் காரணமாக பெண்களின் உரிமைகள் மீறுகை தொடர்பாக விசாரித்துப் புலனாய்வு செய்யும் முக்கியமானதும் இன்றியமையாததுமான செயற்பாட்டினைப் பொறுப்பேற்பதற்கு ஆணைக்குழுவுக்குத் தற்போது இயலாமலிருக்கின்றது.

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, விசாரித்துப் புலனாய்வு செய்யும் அதன் செயற்பாடுகளின் அதீத முக்கியத்துவத்தினைப் புரிந்துகொள்வதுடன், நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் ஆணைக்குழுவினை இயங்கவைப்பதற்குத் தேவைப்படுத்தப்படும் நிலைமைகளை உருவாக்குவதற்காக முனைப்பாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறது.

முடிவாக, நீதியில் நிலவும் இடைவெளியினை நிரப்பவும், பெண்கள் எதிர்நோக்கும் வன்முறையினையும் பாகுபாட்டினையும் இல்லாதொழிப்பதற்கும் பெண்களின் பொருளாதார வலுவூட்டலை வலுப்படுத்தவும் எம்முடன் கூட்டாகப் பணியாற்ற நாம் சகல அரச நிறுவனங்களையும் அரச சார்பற்ற செயற்படுனர்களையும் சிவில் சமூகத்தினையும் பொதுமக்களையும் அழைக்கின்றோம்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு சுயாதீனமானதும் சட்ட ரீதியானதுமான நிறுவனப் பொறிமுறையினைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் பெண்கள் உரிமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தசாப்த காலப் போராட்டத்தினை நாம் கௌரவிக்கின்றோம். Beaches & Islands

ஆணையாளர்கள் என்ற ரீதியில், இலங்கையிலுள்ள சகல பெண்களுக்காகவும் சமமான உரிமைகளையும் கௌவரத்தினையும் நீதியினையும் பற்றிப்பிடிக்கும் ஒரு சமூகத்தினை உருவாக்குவதற்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு சாத்தியமான சகல முயற்சிகளையும் எடுக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எமது கடப்பாட்டினை நாம் மீளுறுதிப்படுத்துகின்றோம்.

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் : பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அறிக்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மகளிர் தினம் : சமத்துவமான உலகிற்காக எட்டு முக்கிய நடவடிக்கைகள் – ஐ.நா. பொதுச்செயலாளர்

06 Mar, 2026 | 05:25 PM

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவதற்காக உலக நாடுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட கருத்துரையில், உலகம் கடந்த ஒரு தசாப்தமாக காலநிலை மாற்றம், வறுமை, ஆயுத மோதல்கள் மற்றும் குடியுரிமைச் சுருக்கம் போன்ற பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதை பல அனுபவங்கள் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவம் என்பது இன்றைய உலகில் மிகப்பெரிய மனித உரிமைச் சவால்களில் ஒன்றாக இருப்பதுடன், சமத்துவத்தை முன்னேற்றுவது நிலையான அபிவிருத்தி மற்றும் உலக அமைதிக்கான முக்கிய சக்தியாகவும் விளங்குகிறது என அவர் வலியுறுத்தினார்.

சமத்துவமான உலகுக்கான 8 நடவடிக்கைகள்

பொதுச்செயலாளர் தனது அனுபவங்களையும் உலகளாவிய சமூக இயக்கங்களின் முயற்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கான எட்டு முக்கிய நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார்.

1. அதிகார சமநிலையை ஏற்படுத்துதல்

பாலின சமத்துவம் என்பது அதிகாரம் தொடர்பான ஒரு கேள்வியாகும். உலகின் பல முக்கிய நிறுவனங்கள் இன்னும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் போது சமூக சுதந்திரமும் வளர்ச்சியும் விரிவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

2. சமமான பிரதிநிதித்துவத்தை முன்னுரிமையாக்குதல்

உலக நாடுகளின் அரசியல் மற்றும் நிறுவனங்களின் தலைமை நிலைகளில் பெண்கள் இன்னும் குறைவாக பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பில் உயர்மட்ட பதவிகளில் பாலின சமநிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் நிறுவனம் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

3. பெண்களுக்கான முதலீட்டை அதிகரித்தல்

பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, தாய்மார் சுகாதாரம் மற்றும் குடும்ப திட்டமிடல் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பயனளிக்கிறது. பெண்களுக்கான முதலீடு தேசிய வருமானத்தை கூட 20 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. அமைதி பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு இடமளித்தல்

அமைதி உடன்படிக்கைகள் பெண்கள் பங்கேற்கும் போது நீடித்த பலன்களை அளிக்கும். எனினும், காசா, உக்ரைன் மற்றும் சூடான் போன்ற மோதல் பகுதிகளில் பெண்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

5. சட்ட ரீதியான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல்

உலகளவில் பெண்கள் ஆண்கள் பெறும் சட்ட உரிமைகளில் சுமார் 64 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளனர். பல நாடுகளில் பெண்களுக்கு சொத்து உரிமை, வேலை வாய்ப்பு மற்றும் விவாகரத்து உரிமைகளில் கட்டுப்பாடுகள் உள்ளன.

6. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பூஜ்ய சகிப்புத்தன்மை

பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய அவசரநிலையாகக் கருதப்படுகிறது. பாலின அடிப்படையிலான வன்முறைகளை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

7. தொழில்நுட்பத்துறையில் பாலின பாகுபாட்டை நீக்குதல்

உலகளவில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் நான்கில் ஒருவரே பெண்கள். இதனால் டிஜிட்டல் அமைப்புகளில் பாலின பாகுபாடு உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, தொழில்நுட்ப கல்வியில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பை அதிகரிக்கவேண்டியது அவசியம்.

8. காலநிலை கொள்கைகளில் பாலின பார்வையை சேர்த்தல்

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை பெண்கள் அதிகமாக எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான பல தீர்வுகளிலும் பெண்களே முன்னிலையில் உள்ளனர். எனவே காலநிலை கொள்கைகளில் பாலின சமத்துவம் பிரதிபலிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகத்தை மாற்றும் சக்தி

உலகின் பல பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை பார்த்துள்ளதாகவும், உலகத் தலைவர்கள் பாலின சமத்துவத்தை உண்மையாக முன்னுரிமையாக்கினால் உலகம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் மட்டுமல்லாமல் அனைவருக்கும் சிறந்த இடமாக மாறும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் : சமத்துவமான உலகிற்காக எட்டு முக்கிய நடவடிக்கைகள் – ஐ.நா. பொதுச்செயலாளர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.