Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிகிச்சை அடிப்படையிலான நீதிமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, யேர்மனியின் Saarland மாநிலத்தில் உள்ள Voelklingen நகரில், 34 வயதான பொலிஸ் அதிகாரி சைமன் போர், 19 வயதான அஹ்மத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எட்டு நாட்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 01.04.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்ப்பில், அஹ்மத் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்பபைத் தந்திருக்கின்றது. விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட அஹ்மத் தனது செயல்களை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

IMG_0105

சம்பவத்தின் விவரங்களின்படி, ஒரு பெற்றோல் நிலைய கொள்ளைக்குப் பிறகு, அவரைத் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரிகளை அஹ்மத் கத்தியால் தாக்கியிருக்கின்றார். பின்னர், ஒரு அதிகாரியின் துப்பாக்கியை பறித்து சைமன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் சைமனின் குண்டு துளைக்காத கவசம் தாக்குதலைத் தடுத்தது. ஆனால் அவர் கீழே விழுந்தபோது, அவரை நெருங்கி வந்து, கவசம் பாதுகாக்காத பகுதிகளை நோக்கி, முகம் உட்பட மூன்று தடவைகள் அஹ்மத் சுட்டிருக்கின்றார். இதனால் சைமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அஹ்மத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், அஹ்மத் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக, மாய நம்பிக்கைகள் (delusions) மற்றும் உண்மை உணர்வை இழக்கும் நிலை போன்ற அறிகுறிகள் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில், தனது செயலின் தவறை முழுமையாக உணர முடியாத மனநிலையிலேயே அவர் இருந்தார் என்று மருத்துவ நிபுணர்கள் சாட்சியமளித்தனர்.

யேர்மனியச் சட்டப்படி, ஒருவர் குற்றம் செய்தாலும், அந்த நேரத்தில் மனநிலை காரணமாக தனது செயலின் தவறுகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால், அவரை நேரடியாக குற்றவாளியாக அறிவிக்க முடியாது. இந்த அடிப்படையில், மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளை கருத்தில் எடுத்து, அஹ்மத் சமூகத்திற்கு இன்னும் ஆபத்தானவர் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவரை சிறைக்கு அனுப்பாமல், தடயவியல் மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டிருக்கின்றது. இது தண்டனை இல்லை மாறாக, சிகிச்சை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும் என தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. பொலிஸ் தரப்பு, இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

படம்-இன்ஸ்டாகிராம்

Edited by Kavi arunasalam
படம் பற்றிய விபரம் சேர்க்கப்பட்டது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.