Jump to content

இவர்களின் கையில் தான் அரசின் எதி்ர்காலம் உள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்திற்குத் தேவையான எம்.பிக்களை பெற்றுள்ளதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. அதே சமயம், எதிரணியை விட 1 எம்.பியே காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதலாக உள்ளதால் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே குழப்பம் தொடர்கிறது.

இந் நிலையில் பாஜகவில் உள்ள 6 அதிருப்தி எம்பிக்கள், ஒரு பிஜூ ஜனதா தள எம்பி, 1 சிவ சேனை எம்பி மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 11 பேர் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவர்களின் கையில் தான் அரசின் எதி்ர்காலம் உள்ளது.

அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள். அவர் இங்கே தாவுகிறார், இவர் அங்கே போகிறார் என்ற செய்திகள். யாருக்கு எத்தனை பேர் ஆதரவு என்பதில் நிலையில்லாத நிலை என டெல்லி வட்டாரத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் எந்த அணிக்கு எத்தனை பேர் உறுதியாக உள்ளனர் என்பதை திட்டவட்டமாக கணித்துக் கூற முடியாத குழப்ப நிலை.

நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று பகல் நிலவரப்படி நாடாளுமன்றத்தில் கட்சிகளுக்குள்ள ஆதரவு எம்.பிக்களின் விவரம்:

மொத்த உறுப்பினர்கள் - 541

பெரும்பான்மைக்குத் தேவை - 271.

அரசுக்கு ஆதரவு:

காங்கிரஸ் - 151

சமாஜ்வாடி - 35

ஆர்.ஜே.டி. - 24

திமுக - 16

தேசியவாத காங். - 11

பாமக - 6

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 5

லோக் ஜனசக்தி - 4

அதிருப்தி மதிமுக - 2

அதிருப்தி ஐக்கிய ஜனதாதளம் - 2

தேசிய மாநாடு - 2

சுயேச்சைகள் - 4

அகில இந்திய மஜ்லிஸ் - 1

பாரதீய நவ சக்தி - 1

மக்கள் ஜனநாயக கட்சி - 1

சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1

கேரளா முஸ்லீம் லீக் - 1

இந்திய குடியரசுக் கட்சி - 1

அதிருப்தி டி.ஆர்.எஸ் - 1

மொத்தம் - 269

எதிர் அணி:

பாஜக - 128

இடதுசாரிகள் - 59

பகுஜன் சமாஜ் கட்சி - 17

சிவசேனா - 12

பிஜூ ஜனதாதளம் - 11

சிரோன்மணி அகாலிதளம் - 8

ஐக்கிய ஜனதாதளம் - 7

தெலுங்கு தேசம் - 5

அதிருப்தி சமாஜ்வாடி - 5

ராஷ்ரடிரிய லோக் தளம் - 3

மதச்சார்பற்ற ஜனதாதளம் - 3

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 2

அசாம் கண பரிஷத் - 2

மதிமுக - 2

அதிருப்தி காங். - 1

கேரளா காங்கிரஸ் - 1

மிஸோ தேசிய முன்னணி - 1

சுயேச்சை - 1

மொத்தம் - 268

மதில் மேல் பூனை: 4

இந்த வரிசையில் கடைசி நேர தாவல்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது. எனவே யாருக்கு எவ்வளவு பேர் ஆதரவு என்பது வாக்கெடுப்புக்குப் பின்னர்தான் தெரிய வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.