Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலும் ஈழ ஆதரவும் -குமுதம் முச்சந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் முச்சந்தியில் 05.01.2009ல் வந்த 'திக்... திக்... திருமங்கலம்' தலைப்பில் இருந்த ஈழம் சம்பந்தமான விடயங்களை மட்டும் இங்கே இணைக்கிறேன்.

"ஏம்பா. சென்ட்ரல் பவர்ல இருக்குற காங்கிரஸ் கூட பிரச்சாரத்துல தீவிரமா இருக்கு. எப்படி தி.மு.க வெற்றிய விட்டுக் கொடுக்கும்...?"- சித்தன்

"ரொம்ப யோக்கியமான கேள்விதான். சொன்னமாதிரி காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சுதர்சனம்னு பெரிய டீம் தி.மு.க வேட்பாளரை வச்சுக்கிட்டு சுத்திசுத்தி ஓட்டு வேட்டை நடத்தறாங்க. ஆனால், உள்ளுக்குள்ள ஒரு பேச்சு இருக்கு. கதர் சட்டைக்குள்ளேயே ஒரு கோஷ்டி இருக்கு. அது தி.மு.க வெற்றிய விரும்பலையாம். ஜெயிச்சுட்டா ஈழ ஆதரவுக்குரலை தூக்கலா காட்டுவாராம் கலைஞர். அதை விரும்பலை. தோல்வின்னு தட்டி வச்சாதான் தி.மு.க.வின் ஈழ ஆதரவுக் குரலை தமிழக மக்கள் விரும்பலைன்னு நாம சொல்லிக்க வசதிப்படும்னு ஒரு பெரிய அண்டர்கிரவுண்ட் வேலையில இறங்குதாம். அதுக்கு டெல்லியில் அரசியல் உயர்மட்ட ஆலோசனைகளை தந்துகிட்டிருக்கிற ஈழ ஆதரவை விரும்பாத சில அதிகாரிங்க பக்கபலமா இருக்கிறதாவும் பேச்சு..."

"அடப்பாவிங்களா. தி.மு.க தோற்றால், கூட்டணியில இருக்கிற காங்கிரசுக்கும்ல கெட்டபேரு..."- அன்வர்பாய்

"எப்படி. வடக்க பல மாநிலத்துல காங். மெஜாரிட்டியா ஜெயிச்சுருக்கு. முன்ன இருந்த அளவுக்கு மோசமில்ல. அப்படி இருந்தும் தமிழ்நாட்டுல ஒரு இடைத்தேர்தல்ல தோல்வின்னா அதுக்கு ஆளுங்கட்சி தி.மு.க.வின் செயல்பாடுதான் காரணம். தேசிய அளவில் காங்.கட்சி நல்லா இருக்கு. ஆனா இங்க இருக்குற தி.மு.க பல விஷயக்ளில் மோசமா நடந்துக்கிட்டதுதான் காரணம்னு பழிய கலைஞர்மேல இறக்கிடவும் பேச்சு நடக்குது. இதை வச்சே வர்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் குடுமிய தன் கையில வச்சுக்கிடலாம்னு திட்டம் இருக்கு..."

"அடேங்கப்பா. தொகுதிக்குப் போய் ஒரு வாரம் சுத்திக்கிட்டு வந்ததுக்கே சுவருமுட்டி இம்புட்டு அரசியல் பேசறார்யா..." என்று சிரித்த சித்தன், "ஆமா. பா.ம.க.வோட செயல்பாடு அங்க எப்படி இருக்கு?" என்றார்.

"அதான் வெளிப்படையா சொல்லிட்டாரே ராமதாசு. தி.மு.க. கூட்டணியில இல்ல. அதுக்கு தேர்தல் வேலையும் கிடையாதுன்னு கிளியரா சொல்லிட்டாரே. கிட்டத்தட்ட அ.தி.மு.கவுக்குத்தான் வேலை செய்யறாங்க. ஆனா ஓப்பனா பேசிக்கிடல. லோக்கல் பா.ம.க ஆளுங்களை அ.தி.மு.க ராஜ மரியாதையா நடத்துது. அது மட்டுமில்ல. கலைஞர் நினைச்சிருந்தா ஈழமக்கள் மீதான இலங்கை ராணுவ தாக்குதல் இம்புட்டு தீவிரமாகியிருக்காது. கிளிநொச்சியும் வீழ்ந்திருக்காதுன்னு டாக்டர் ஐயா கோபப்படறாராம்..."

"ஆமாம்யா. நேத்திக்குக்கூட கடுமையா தாக்கி அறிக்கை விட்டிருக்காரு. சோனியாவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் நல்லவங்கதான். ஆனா அவிங்களுக்கு ஆலோசனைகளை சொல்லிக்கிட்டு இருக்குற அதிகாரிங்கதான் தப்பானவங்க. ஆறரைக்கோடி தமிழினத்தின் சார்பா சட்டமன்றத்தில பேசிட்டோம். அனைத்துக்கட்சி சார்பா தமிழக முதல்வரும் கோரிக்கை வச்சாரு. ஆனாலும் இலங்கைத் தமிழருக்கு உதவலேன்னு கொதிச்சிருக்காரு..." என்றார் கோபாலு

குறுக்கிட்ட சித்தன் "வாஸ்தவம்தானே. வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல காங்கிரஸ்கட்சி தமிழ்நாட்டுக்காரன்கிட்ட ஓட்டுக்கேட்க போவுதா, இல்ல சிங்கள மக்கள்கிட்ட ஓட்டு கேட்கப் போவுதான்னு ஒரு கேள்வி தமிழ் மக்கள்கிட்ட இருக்கு இல்லே. பதில் சொல்லித்தான் ஆகணும் காங்கிரஸ். அனேகமா இந்த இடைத்தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வும் ஒரு முடிவுக்கு வந்துடும்னு பேச்சு இருக்குப்பா. இன்னொரு மேட்டரை கவனிச்சிங்களா. திருமாவளவன் தொகுதிக்குப் போகல. அவருக்கு ராமதாஸ், நெடுமாறன் உறவு அதிகம். அந்த வகையில கிளிநொச்சி விழுந்தது. அதுக்கு காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு உதவியா இருந்ததுன்னு கோபம். இதுக்கு மேலயும் காங்கிரஸ் உறவு தேவையான்னு கேட்கறாரு. இப்போது கூட இந்தியக் கடற்படையைச் சேர்ந்த பெரிய டீம் ஒன்று முல்லைத்தீவு போரில் சிங்கள ராணுவத்துக்கு உதவி பண்ணப் போயிருக்குன்னு சொல்லி கோபப்படறாரு. அந்தக் கோபம்தான் நேரில போகாம, தி.மு.க.வை ஆதரிச்சு வேலை செய்யுங்கள்னு அறிக்கையோட நிறுத்திக்கிட்டதா சொல்றாங்க..." என்றார்.

"ஓகோ. உனக்கு அப்படி கிடைச்சதா சேதி. எனக்கு வேற மாதிரி கிடைச்சது. திருமாவளவன் திருமங்கலம் தொகுதிக்கு வந்தா, காங்கிரஸ் அங்க பிரச்சாரத்துக்கு வராது. அவரு காங். கட்சிய கடுமையா விமர்சிக்குறாரு. அப்படிப் பேசறது எங்க கட்சிக்கு அவமானம். அவரு ஒருபக்கம் காங்கிரசை தாக்கிப் பிரச்சாரம் செய்வாரு. நாங்க எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு அதே பகுதியில தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு பிரச்சாரம் செய்ய முடியும்னு கலைஞர்கிட்ட சொல்லிட்டாங்களாம். இது திருமாவுக்கு தெரிஞ்சிருக்கு. கலைஞரை எதுக்கு நெருக்கடிக்கு உள்ளாக்கணும்னு பிரச்சாரத்துக்குப் போகாம இருந்துட்டாருன்னு ஒரு பேச்சு தொகுதியில இருக்கு..." -என்றார் சுவருமுட்டி.

-சபை களைகட்டும்

ஒட்டுக்கேட்டவர்: பா. ஏகலைவன்

----------------------------------------------------

29.12.08 -' அதிர வைத்த விடியோ காட்சி!

"திருமாவளவன் கூட்டின தமிழீழ அங்கீகார மாநாட்டுக்குப் போயிருந்தேன். ஏகப்பட்ட கூட்டம். நிறைய செய்தியாளர்கள். கூடவே போலீஸ் டீமும் படம் பிடிச்சுக்கிட்டு இருந்துச்சு. அந்த மாநாட்டுக்கு போலீஸ் ரொம்பவே நெருக்கடி கொடுத்திருக்கு. அந்த போஸ்டர் ஒட்டக்கூடாது. இந்த போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு நச்சரிப்பு. பேனர் டிசைன் பண்ணின ஆளுங்களைக் கூட தூக்கிக்கிட்டு போய் ஸ்டேஷன்ல வச்சுட்டாங்க. அதே மாதிரி கம்ப்யூட்டர் திரையில் ஒளிபரப்பு செய்யும் டீமையும் உள்ளே வச்சுட்டாங்க. பிரபாகரன் படத்தை ஓட்டப் போறீங்களான்னு கேட்டு காய்ச்சி இருக்காங்க. அவிங்ககிட்ட இருந்த சி.டி.ய எல்லாம் போட்டுப்பார்த்த பிறவுதான் எச்சரிச்சு அனுப்பியிருக்காங்க. இப்படி எல்லாமும் முடிஞ்சு மேடை போடுறப்போ வந்து தமிழீழ அங்கீகார மாநாடு ன்னு பேனர் இருக்கக் கூடாதுன்னு குடைச்சல் வேற. இப்படி எல்லாத்தையும் மீறிதான் நடந்தது. அதிலும் முதல்வர் கருணாநிதி கேட்டுக்கிட்டதற்காக விடுதலைப்புலிகள் பேரைச் சொல்லாமலேயே முடிச்சாரு திருமா..." என பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட கோபாலு,

"ஆமாம்யா... புலிகள் ஆதரவு இல்லேங்கிற காங்கிரஸ் முடிவுலதான் தி.மு.க.வும் இருக்காம். ரெண்டு பேரும் ஈழத்தமிழர்களை ஆதரிப்பாங்களாம். புலிகளை ஆதரிக்க மாட்டாங்களாம். ஆதரிச்சா நடவடிக்கை எடுப்பேன்னு கருணாநிதி சொல்றாரு. ஆதரிக்கிறவங்க கூட கூட்டணி வைக்க மாட்டோம்னு வேற சொல்றாரு. என்னா சங்கதியாம்...?" என்றார்.

"ஒரு சங்கதியுமில்ல. எல்லாம் தேர்தல் ஆதாய சங்கதிதான். இந்த விஷயத்துல தி.மு.க கூட்டணிய விட்டு விலகிடலாம்னு திருமா நினைக்கிறாராம். வர்ற தேர்தல்ல தனியாவே நின்னு காட்டணும். தமக்கு இருக்கிற ஓட்டு வங்கிய தி.மு.க-அ.தி.மு.க.வுக்கு போகாம தடுத்துக் காட்டினாதான் தெரியும்னு நினைக்குறாரு. அதுக்கேத்த மாதிரி காங்கிரஸ் கட்சி வேற இன்னும் திருமாவளவனை கைது பண்ணணும்னு ஓயாம கோஷம் வச்சுக்கிட்டிருக்கு. எங்க போய் முடியும்னு தெரியல..." என்றார்.

"எப்படியோ. தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சி இனி தலையெடுக்கவே கூடாதுன்னு சபதம் செஞ்சு வேலை பார்க்குறாங்க போல..." என்ற சித்தன், "நான் வேற விஷயத்துக்கு வாறேன்...." என்றபடியே,

"ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஹசன் அலி இருக்காருல்ல. அவரு அடிக்கடி இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூட போன்ல பேசறாரு. இவரும் அவருக்கு பேசறாரு. பாகிஸ்தான், சீனாவோட தொடர்பு வச்சிருக்கிற ராஜபக்சே கூட ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி சகஜமா பேசலாம். இது பதவி ஏற்பு பிரமாணத்தை மீறினதாச்சே. ஹசன்அலி அப்படிப் பேச யாரு அனுமதி கொடுக்கிறதுன்னு ஒரு வழக்கு நீதிமன்றத்துக்கு போக இருக்காம். அதுக்கு முன்னாடி முறைப்படி சட்டமன்ற சபாநாயகருக்கு புகார் அனுப்பணும்னு இருக்காம். இதுக்கான ஏற்பாட்டை செய்றது திருச்சி வேலுசாமி டீம்தான்னு சொல்றாங்க. இது நடைமுறைக்கு வந்தா ஏகப்பட்ட விவரம் வெடிக்கும்னு பேசிக்கிறாங்கப்பா..." என்றபடியே லேப்-டாப் திரையை திறந்தார்.

குறுக்கிட்டுப் பேசிய அன்வர்பாய், "தி.மு.க பொதுக்குழுவுக்குப் போயிருந்தேன்பா. கலைஞரை பத்தாவது முறையா தலைவருக்கு தேர்ந்தெடுத்திருக்காங்க. பொருளாளர் பதவிய ஸ்டாலினுக்கு கொடுத்ததுதான் புதுசு. எம்.ஜி.ஆர், கலைஞர் எல்லாம் பொருளாளர் பதவியில இருந்துதான் முதல்வர் இடத்துக்கு வந்தாங்க. அந்த ராசிப்படி ஸ்டாலின் மேல வர்றாருன்னு பேசிக்கிட்டாங்க. அதுல முக்கியம் என்னா தெரியுமா. ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுப்போம்னு கலைஞர் திரும்பவும் சொன்னதுதான்...." என்று பேசிக்கொண்டிருக்கும்போதே எல்லாரும் சிரித்து விட்டார்கள்.

"என்னமோ உணர்ச்சி, உணர்வுன்னு இருந்தா சரிதான்..." என்ற சித்தன் தனது லேப்-டாப்பில இருந்த அந்தக்காட்சியை எல்லோருக்கும் காட்டினார். அலப்பறை டீம் அப்படியே உறைந்து போனது.

"அடிபட்டு வீழ்ந்த பெண் விடுதலைப்புலிகளை நிர்வாணப்படுத்தி தனது அபிலாஷைகளை தீர்த்துக் கொள்கிறது சிங்கள சிப்பாய்கள் தரப்பு. குற்றுயிராய் கிடந்த பெண்புலி மீது உட்கார்ந்து ஏதோ செய்யும் ராணுவவீரன் ஒருவன் நாக்கை தொங்கப் போட்டு நாய்மாதிரி கத்துகிறான். பிறகு துப்பாக்கியால் சுட்டு குதறி எடுத்து வீரத்தைக் காட்டுகிறது சிங்கள டீம் ஒன்று. ராணுவ வீரர்களா? அராஜகப் பேயகளா..? என்ற கேள்வி எழுகிறது..." என்று குமுறியபடியே எழுந்தார் சுவருமுட்டி சுந்தரம்.

-சபை களைகட்டும்

ஒட்டுக்கேட்டவர்: பா. ஏகலைவன்

-----------------------------

24.12.08 காங்கிரஸின் போர்த்தந்திரம்!

"காங்கிரஸ் கட்சிய எடுத்துக்கோங்க. ஒரு கோஷ்டி தி.மு.க.தாங்கிறது. இன்னொரு கோஷ்டி அ.தி.மு.க உறவுன்னு சொல்லுது. இதை மையம் வச்சுதான் திருமாவளவனை கைது செய்யணும். அவர் நடத்துற தமிழீழ ஆதரவு மாநாட்டை தடை செய்யணும்னு கிளம்பி ஊர்முழுக்க திருமாவளவன், பிரபாகரன் உருவபொம்மைய கொளுத்தறாங்க. ஏன்யா இம்புட்டு தீவிரம்னு கேட்டா சத்தியமூர்த்தி பவனுக்குள்ள ஆள் அனுப்பி அட்டாக் பண்ணிட்டாரு திருமா ன்னு குதிக்கிறாங்க..." என்றார்.

"அடப்பாவிங்களா. பாகிஸ்தான் தீவிரவாதி மும்பைக்குள்ள நுழைஞ்சு அட்டாக் பண்ணியதற்கு இப்படி குதித்திருந்தா இன்னைக்கு ஓரளவு பயந்திருக்கும் பாகிஸ்தான். இடிக்கிறத விட்டுட்டு வெறும் உரலைப் போட்டு இடிக்குறாங்களே..."- கோபாலு.

"அதான. காங்கிரஸ் கட்சின்னா சும்மாவா. ஒரிஜினலா ரோஷப்படுற ஒரே கட்சி அதுதான..." என்ற சுவருமுட்டி, "நேத்திக்கு கோட்டை பக்கம் போயிருந்தேன். திருமாவளவன் அங்கே வந்திருந்தாரு. 26ந்தேதி நடக்குற தமிழீழ ஆதரவு மாநாட்டுக்கு தடை போட்டதை நீக்க சொல்லி முதல்வர்கிட்ட வற்புறுத்த, முதல்வரும் மாநாட்டை புலிய வச்சு கிலி ஏற்படுத்தாம நடத்துங்கன்னு போலீஸ் கமிஷனரைக் கூப்பிட்டு தடையை நீக்கச் சொன்னாராம். அந்த சந்தோஷத்துல கீழே இறங்கி வந்தவர்கிட்ட சத்தியமூர்த்தி பவன் மேல ஏண்ணே கல்வீச்சு நடத்தினீங்கனு கேட்டுப்புட்டேன். டென்ஷனாயிட்டாரு...

"தகறாரு செஞ்சது காங்கிரஸ்தான். அந்த உண்மைய தங்கபாலு, இளங்கோவன், சுதர்சனம், வாசன், ப.சிதம்பரம்னு எல்லார்கிட்டேயும் எடுத்துச் சொல்லிட்டேன். அந்த சத்தியமூர்த்திபவன்லதான் பெரியவர் மூப்பனார் கைப்பிடிச்சு நான் அரசியலுக்குள்ள காலடி வச்சேன். அந்த நன்றிய மறந்துடறவனில்ல. நான் சொன்ன உண்மையை மத்தவங்க புரிஞ்சிக்கிட்டாங்க. ஆனா தங்கபாலு, இளங்கோவன் தரப்புதான் வேண்டும்னே வில்லங்கம் பண்றாங்க. அதாவது எனக்கு குடைச்சல் கொடுக்கிறது மூலமா தி.மு.க.வை சீண்டுறாங்க. தி.மு.க கட்சிக்கு நெருக்கடி கொடுக்க என்னையப் போட்டு உருட்டுறாங்க. அந்த ரெண்டுபேரும் அன்னையோட ஆணைப்படி செயல்படறதுக்கு பதிலா, அ.தி.மு.க அம்மா வோட ஆணைப்படி செயல்படறாங்கன்னு போட்டுத் தாக்கிப்புட்டாரு..." என்றார்.

"அப்படியே இன்னொரு மேட்டருப்பா..." என்ற அன்வர்பாய், "கோவை ஜெயில்ல இருக்குற இயக்குனர் சீமானைப் பார்க்கப் போயிருந்தேன். கூட்டத்தோட கூட்டமாதான். அவரைப்பார்க்க தினமும் பெரும்கூட்டம் படையெடுக்குதாம். நிர்வாகம் தடுமாறுதாம். கூட்டத்தோட கூட்டமா நின்னு நானும் பேசினேன். ஏண்ணே ராஜீவ்காந்தி மரணத்தை கொச்சைப்படுத்தி பேசினீங்க அப்படீன்னு கேட்டுப்புட்டேன். உள்ள இருக்கேன். வெளிய இருந்தா உதைச்சிருப்பேன்னு அன்பா சொன்னவரு, எங்கே கொச்சைப்படுத்தினேன். எப்படிப் பேசினேன்னு உருப்படியா ஒரு ஆதாரத்தை சொல்லுங்கடான்னா சொல்ல மாட்டேய்ங்கிறாங்க. பொத்தாம் பொதுவா ஒரு பொய்ப்பிரச்சாரம் பண்றாங்க. ராஜீவ்காந்தி மேல பாசமாக இருக்குறதா சொல்லும் அந்த காங்கிரஸ்காரன் என்ன பண்ணியிருக்கணும். ராஜீவ் கொலைக்கு காரணமே சோனியாகாந்திதான். சோனியாவைப் பிடிச்சு குற்றவாளிக் கூண்டுல நிறுத்தி விசாரிக்கணும். அதுவரை நான் விடமாட்டேன்னு புத்தகம் போட்டு ஊருக்கெல்லாம் சொன்ன சுப்ரமணிய சுவாமியோட கொடும்பாவிய இல்ல எரிக்கணும். ராஜீவ்காந்தி கொலையில விசாரிக்கப்படவேண்டிய முக்கியக் குற்றவாளி சந்திராசாமின்னு சி.பி.ஐ.யே சொல்லியிருக்கு. அந்த சந்திராசாமிக்கு எதிரால்ல குரல் எழுப்பணும். அட அம்புட்டு ஏன் தம்பி. ஜெயின் கமிஷன் அறிக்கைப்படி மறுவிசாரணை செய்ய ஒரு தனி விசாரணைக் குழுவை போட்டாங்க. உண்மையான ராஜீவ் கொலையாளிகள் யாருங்கிறத தெரிஞ்சுக்க காங்கிரஸ்காரனுக்கு அக்கறை இருந்தா அந்த விசாரணைக் கமிஷனை வேகமாக நடத்த இல்ல குரல் எழுப்பணும். அவிங்களுக்கு ராஜீவ்காந்தி பேர்ல அக்கறை இல்ல. வெளியில வந்து வச்சுக்கிறேன் கச்சேரிய அப்படீன்னு எகிறிட்டாரு..."

"அப்படிப்போடு. அப்போ திரும்பவும் கைதுதான். இந்த தடவை எந்த ஊரு ஜெயிலோ...?"- கோபால்.

"ஆயிரம் முறை போட்டாலும் நான் அடங்கமாட்டேன். உண்மைய ஊருக்கு சொல்லிகிட்டேதான் இருப்பேங்கிறாரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.