Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

The hidden massacre: Sri Lanka’s final offensive against Tamil Tigers

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

More than 20,000 Tamil civilians were killed in the final throes of the Sri Lankan civil war, most as a result of government shelling, an investigation by The Times has revealed.

The number of casualties is three times the official figure.

The Sri Lankan authorities have insisted that their forces stopped using heavy weapons on April 27 and observed the no-fire zone where 100,000 Tamil men, women and children were sheltering. They have blamed all civilian casualties on Tamil Tiger rebels concealed among the civilians.

தொடர்ந்து வாசிக்க: The Times

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

More than 20,000 Tamil civilians were killed in the final throes of the Sri Lankan civil war, most as a result of government shelling, an investigation by The Times has revealed.

தொடர்ந்து வாசிக்க: The Times

மறைக்கப்பட்ட படுகொலைகள் : விடுதலைபுலிகள் மீதான இலங்கையின் இறுதி தாக்குதல்.

இலங்கையில் நடை பெற்ற உள்நாட்டு போரின் கடுமையான இறுதி கட்ட தாக்குதலின்போது இருபது ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள், பெரும்பாலும் அரசாங்க படைகளின் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டார்கள் என்பது "த டைம்ஸ்" நாளிதளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டதை போன்று மூன்று மடங்கு மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

ஏப்ரல் மாதம் இருபத்தேழாம் தேதியிலிருந்து தங்கள் படையினர் கன ரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்றும், மோதல் தவிர்ப்பு வலயங்களை தாங்கள் பேணி வந்ததாகவும், அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆண், பெண், குழந்தைகள் தங்கியிருந்தார்கள் என்றும் இலங்கை அதிகாரிகள் உறுதிபட தெரிவித்தார்கள். பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு, அவர்களூடாக மறைந்திருந்த விடுதலை புலிகள்தான் காரணம் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.

ஆனால், வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அதிகாரபூர்வமான பதிவேடுகளும், நேரில் பார்த்த சாட்சிகளும், நிபுணர்களின் கருத்துகளும் உறுதிப்படுத்தும் விடயம் வேறு விதமாக இருக்கிறது.

பன்னாட்டு ஊடகங்களையும், உதவி நிறுவனங்களையும் போர் நடக்கும் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டு, கடுமையான தாக்குதல்களை ராணுவம் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் துவக்கி தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு நீட்டித்தது.

இந்த தாக்குதல், விடுதலை புலிகளுடனான இருபத்தாறு வருட உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது என்றாலும், அப்பாவி மக்கள்தான் அதற்கான விலையை கொடுக்க நேர்ந்தது.

"த டைம்ஸ்" நாளிதழுக்கு கிடைத்த ஐக்கிய நாடுகளின் சபையின் ரகசிய ஆவணங்களின்படி, ஏப்ரல் மாதம் இறுதி வரையில், மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில் மட்டும் சுமார் ஏழு ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை, சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் அப்பாவி மக்கள் என்ற கணக்கில் உயர்ந்து , மே மாதம் பத்தொன்பதாம் தேதி வரை, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் வரை, நீடித்தது என்று ஐநா தகவல்கல் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை, "தி டைம்ஸ்" நாளிதழுக்கு, மே மாதம் பதினாறாம் தேதி மோதல் தவிர்ப்பு பிரதேசத்திலிருந்து பொது மக்களுடன் தப்பித்து தற்போது மாணிக் பார்ம் முகாமில் இருக்கும் பாதர் அமல்ராஜ் என்னும் ரோமன் கத்தோலிக்க பாதிரியார் அளித்த மதிப்பீடுகளுடன் ஒத்து வருகிறது. "கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்" என்று ஐநா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் முகாம் என்று நம்புவதற்கு சிரமமான (குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லாத) இடம் அழிக்கப்பட்டதை, மேலேயுள்ள உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் படம் உறுதிப்படுத்துகிறது. படத்தின் வலது கீழ் மூலை, அவசரம் அவசரமாக பொதுமக்களின் பிணங்களின் மீது அமைக்கப்பட்ட மணல் மேடுகளை காட்டுகிறது. மற்ற படங்களில் காணப்படும் நன்கு வடிவமைக்கப்பட்ட இடு காடு , கொல்லப்பட்ட நூற்றுகணக்கான போராளிகளுக்காக அமைக்கப்பட்டவையாக தோன்றுகிறது. ஒரு படத்தில், அகதிகள் அமுக்கு அருகில் அமைக்கப்பட்ட கன ரக ஆயுத தளம் காணப்படுகின்றது.

"தி டைம்ஸ்" நாளிதழ் கொடுத்த புகைப்படங்களை ஆராய்ந்த ராணுவ நிபுணர்கள், ராணுவம் மற்றும் போராளிகளின் சுடும் (பீரங்கி) நிலைகள், மிக குறுகிய மோதல் தவிர்ப்பு வலயம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, போராளிகளின் தாக்குதலால் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். "போராளிகள் தாக்குதல் நடத்த நிலைகொண்டிருக்கும் இடங்கள் ராணுவத்தினரால் கண்டறியப்பட்டு, வானிலேயே வெடிக்கும் மற்றும் தரையில் விழுந்து வெடிக்கும் குண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று 'பிரிட்டனின் ஆயுத படைகள்' என்ற இதழின் ஆசிரியர் சார்லஸ் ஹேமன் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகளுக்கான சபை, சீனா, இந்தியா,எகிப்து, கியூபா ஆகிய நாடுகளின் ஆதரவை பெற்ற இலங்கையை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து சென்ற புதன்கிழமை விடுவித்தது.

லண்டனில் இலங்கை உயர் ஸ்தாநீகராலய பேச்சாளர் ," இந்த குற்றச்சாட்டுக்களை எல்லாம் நாங்கள் மறுக்கிறோம். அரசாங்க படைகளால் பொது மக்கள் கொல்லப்படவேயில்லை. தப்பித்து போக முயலும் மக்கள் மீது விடுதலை புலிகள் சுட்டுதான் அவர்கள் கொல்லப்பட்டார்கள்" என்று கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.