Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

The Times: Aid workers forced to leave Sri Lanka under strict new visa rules

Featured Replies

Aid workers forced to leave Sri Lanka under strict new visa rules

தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கத் தவறவேண்டாம்

The Times

சிறீலங்காவின் புதிய விசா நடைமுறையால் தொண்டுநிறுவன பணியாளர்கள் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – ரைம்ஸ் ஒன்லைன்

சிறீலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விசா நடைமுறையால் பிரித்தானியாவைசேர்ந்த பலடசின் பணியாளர்கள் மற்றும் பலநாடுகளை சேர்ந்த பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக சிறீலங்கா கருதுவதாகவும் ரைம்ஸ் ஒன்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இவர்களுடைய இப்புதிய கொள்கையால் இத்தொண்டு நிறுவனங்களுக்கு பல ஆயிரக்கணக்கில் செலவாகின்றதாகவும் இதனால் தடுப்பு முகாம்களில் இருக்கும் 280 000 பொதுமக்களுக்கு உதவிசெய்வதில் கஸ்ரமேற்படுவதாகவும் அத்தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அரசசார்பற்ற நிறுவனங்கள் பதற்றமடைந்துள்ளன. இவர்கள் யாராவது குரல் எழுப்பினால் அடுத்தநிமிடம் இவர்கள் நாட்டைவிட்டு துரத்தப்படுவார்கள் என சர்வதேச தொண்டுநிறவனங்களின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சிறீலங்கா அரசாங்கம் நோர்வேயை தளமாக கொண்டு இயங்கும் போறூட் நிறுவனத்தின் நிறுவனத்தின் தலைவரை நாடுகடத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ஊழியர் ஒருவரை கடந்த மாதம் நாட்டுக்குள் செல்வதற்கு தடைசெய்துள்ளது.

இவர்களது புதிய விதியின்படி மூன்று வருடத்திற்கு மேல் அவர்கள் சிறீலங்காவில் பணியாற்ற முடியாது.

இதேவேளை கெயர் தொண்டுநிறுவனத்தின் பணியாளர் உட்பட இருபணியாளர்களுக்கு விசா அனுமதி நீடிப்பதற்கு கடந்த மாதம் சிறீலங்கா அரசாங்கத்தால் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நோர்வீயிய அகதிகள் சங்கம், சேவ் த சில்றன் பண்ட், மற்றும் ஜேர்மனியை சேர்ந்த ஏஸ்பி தொண்டு நிறுவனத்தின் மூன்று பணியாளர் ஆக ஐவர் நாட்டைவிட்டு கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் பிரித்தானிய படையினரின் தலைவர், அரசசார்பற்ற தொண்டு நிறுவன சங்கத்தை சேர்ந்தவர் இவரது பிள்ளைகள் சிறீலங்காவில் கல்விகற்கின்றபோதும் ஏழு நாட்களுக்கு நாட்டைவிட்டு வெளியேற கோரப்பட்டிருந்தார். எனினும் இவர் குறுகிய காலத்திற்கு அவர்களுடன் கதைத்து விசா அனுமதியினை பெற்றிருந்தார்.

டச்சு நிறுவனமான சோ நிறுவனத்தின் முகாமையாளர் கடந்த செப்ரம்பர் மாதம் நாட்டைவிட்டு வெளியேற்ப்பட்டிருந்தார் மற்றும் ஐந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு விசா அனுமதி பெறுவதில் பிரச்சனைகள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இதில் அடுத்த சில மாதங்களில் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் சிறீலங்காவின் தலைவர், டனிஸ் அகதிகள் சங்கத்தின் தலைவர் ஆகியோரும் அடங்குவர்.

செப்ரம்பர் மாதமளவில் 60 முதல் 70 வீதமான தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறNவுண்டி வரும் என உதவி தொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசாங்கம் கடந்த வருடம் அறிமுகப்படுத்திய புதய சட்டமுறையினை அமுல்படுத்துவதாக இலகுவாக தெரிவிப்பதாக அறியமுடிகிறது. ஊதவி பணியாளர்களுக்கு ஒருவருட அனுமதி முதலில் வழங்குவதாகவும் பின்னர் அவர்கள் விரும்பினால் மீண்டும் புதுப்பித்து கொடுப்பதாகவும் உள்ளது.

சிறீலங்கா அலுவலர்களின் கருத்தின்படி விடுதலைப்புலிகளின் அநுதாபிகளை களைவதற்காகவே இப்புதிய சட்டம் வரையப்பட்டதாக தெரியவருகிறது. போறூட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அவர்களது அலுவலகத்தில் அலுவலர்களை சிறீலங்கா கொடியை விடுதலைப்புலிகளின் வெற்றி விழாவின்போது

பறக்கவிடுவதை தடுத்த குற்றத்தின்பேரில் நாடுகடத்தப்பட்டுள்ளார். அவ் அம்மணி தெரிவிக்கையில் போறுட் நடுநிலையான தொண்டு நிறுவனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அலுவலர்க்ள கருத்து தெரிவிக்கையில் இப்புதிய நடைமுறை தொண்டுநிறுவனங்களை உள்ளுர் அலுவலர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்துவதை கூட்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் செயலர் ரறீவ விஜயசிங்க ஐநாவின் மனித உரிமைகள் சபையில் கடந்த வாரம் கருத்து தெரிவிக்கையில் ‘நாம் எமது ஆளுமையை கட்ட விரும்புகிறோம்.’ ,’எமக்கு தொண்டு நிறுவனத்கள் உதவியை கொண்டுவந்து தரவேண்டும்’, ‘எங்களுக்கு பணக்கார மனிதர்களின் மேசையில் இருந்து கொண்டு அவர்களுக்கு துதிபாடுபவர்கள் தேவையில்லை’

இப்புதிய சட்டம் மூலம் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு அரசாங்கங்களை லொபி செய்வது மட்டுப்படுத்தப்படும் எனவும் அந்நிறுவனத்தில் இருந்து அவர்களை அந்நிறுவனத்தின செலவிலேயே இல்லாமல் செய்வதுமாகும்.

மற்றுமொரு உதவி பணியாளர் தெரிவிக்கையில் ‘அரசாங்கத்திற்கு தொடர்புகளற்ற , அநுபவற்ற தொண்டுநிறவன பணியாளர்களை கையாள்வது இலகு என்று’

ஒரு தொண்டு பணியாளரை மாற்றுவதில் 20000 டொலர் செலவாகின்றதாக தெரியவருகிறது.

[Pathivu]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.