Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் தமிழரின் உரிமையை நோக்கிய TLAP முதலாவது மாநாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவில் தமிழரின் உரிமையை நோக்கிய TLAP முதலாவது மாநாடு.

நேற்றுமுன் தினம் ( 29-09-2009 ) பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர்கள் நலன் பேணும் அமைப்பாக TLAP எனும் புதிய அமைப்பின் முதலாவது மாநாடு சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழர்கள் அல்லாத வேற்று இனத்தவர்களான சட்டத்தரணிகளும் , மனிஉரிமை அமைப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு லண்டனில் உள்ள றெட்லயன் ஸ்குயர் எனும் பகுதியில் அமைந்துள்ள கொன்வே மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 19:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வினை மற்பூட் Mr. Matt Foot ( Human Rights Lawyer, Birnberg, Peirce & Partners ) அவர்கள் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து Mr. Mark Muller ( QC, Chair, The Bar Human Rights Committee of England & Wales ) என்பவர் நிகழ்வை தொகுத்துவழிநடத்தினார்.

இடம்பெயர்ந்தோர் தடுப்பு முகாம் ( IDP Camps )

இந் நிகழ்வில் முதலாவதாக உரையாற்றிய Dr. Yolanda Foster (Amnesty International ) என்பவர் கூறுகையில் இடம்பெயர்ந்த தமிழர்களை தடுத்துவைத்துள்ள பல முகாம்களுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் அங்கே சென்றதில் பெரிதாக பலனேதும் இல்லை. ஏனெனில் அந்த முகாம்களுக்கு செல்லுவதற்கு ஒரு சில அமைப்பினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. அப்படி அனுமதி வழங்கப்பட்ட ஒருசில அமைப்புக்களால் செல்பவர்களிடம் பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். அதாவது முகாமிற்குள்ளே யாருடனும் உராயாடக்கூடாது, புகைப்படங்களோ காணொளிப்பதிவுகளோ செய்யக்கூடது எனும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்படும். அதுமட்டுமன்றி முகாம் முழுவதும் இராணுவத்தினரின் பூரணகட்டுப்பாட்டிலேயே உள்ளது. அத்தோடு முகாம்களின் பொறுப்பாளர்களாக இருப்பவர்களும் முகாமின் முகாமையாளர்களும் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளாகவே இருக்கின்றனர். எனவே இவை அனைத்தையும் மீறி எந்த அமைப்பாலும் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலையே காணப்படுகிறது. அத்தோடு கண்ணிவெடி அகற்றலை காரணம் காட்டி மனித உரிமைகளுக்கு சர்வதேச வழக்குகளுக்கு மாறாக ஏனைய வழிமுறைகளை மறைத்து மக்களை சுதந்திரமாக வெளிவிடாமை மிகவும் கண்டனத்துகுரியது.

இலங்கையில் ஊடகசுதந்திரம் |( Press Freedom in Sri Lanka )

அடுத்ததாக உரையாற்றிய Mr. Thomas Hughes ( Deputy Director, International Media Support ) இலங்கைத் தீவில் ஊடக சுதந்திரம் இல்லை என்பதை பல அதாரங்களுடன் விளக்கினார். அரசுக்கு எதிராக உண்மைகளை எழுதும் ஊடகங்களும் , ஊடகவியலாளர்களும் உயர் மட்ட அரச பயங்கரவாதத்திற்கு ஆட்படுகிறார்கள். ஊடக சுதந்திரமின்மை அனைத்து ஊடகங்களையும் பாதித்திருப்பினும் தமிழ் ஊடகங்களே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது யதார்த்தம். ஜனாதிபதியே நேரடியாக ஊடகவியலாளர்களுக்கு கட்டளை பிறப்பித்ததை கண்டேன். அரசுக்கு பயந்து ஊடகங்கள் அரசகட்டளையை ஏற்று உண்மைக்கு மாறாக அரசு சார்பான செய்திகளை வெளியிடும் துர்ப்பாக்கிய நிலையே இலங்கையில் நிலவுகிறது என்ரார்.

சர்வதேச சட்டவல்லுனர் அமைப்பு (Rule of Law and the Independence of the legal profession )

இலங்கை சட்டத்தினை பரிசோதித்த சர்வதேச சட்டவல்லுனர் அமைப்புகள் ஒன்றியம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கூடிய குழுவின் அங்கத்துவரான Ms. Michelle Butler, ( Barrister, Matrix Chambers and Mission Rapporteur to International Bar Association Human Rights Institute’s Delegation to Sri lanka ) இலங்கையில் சட்ட ஒழுங்கின்மையினை விரிவாக எடுத்துரைத்தார். அரசால் , அரசாங்க ஊளியர்களால், காவல் துறையினரால் சட்டங்கள் மீறப்படுவதோடு துணை மற்றும் ஒடுக்குழுக்களாலும் மனித உரிமை சட்டங்கள் மீறப்படிகிறது என்பதை விளக்கினார். வெள்ளை வான் கடத்தல் சட்ட அனுசரணையுடன் கூடிய மனித உரிமை மீறல்கள் உயர் நீதிமன்றம் முதல் கணப்படுவதாக கூறினார். அரசுக்கு எதிராக நீதிசார்ந்து முன்நிறுத்தும் சட்டவல்லுனர்கள் வேலையை இழந்து பல மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். இதனை இலங்கை அரசு பகிரங்கமாக செயற்படுத்தி வருகிறது எனக் கூறினார்.

அடுத்து Dr. Lutz Oette, School of Oriental and African Studies (SOAS) பேசுகையில் சர்வதேச சட்டங்கள் மூலமும் மனித உரிமை மற்றும் மனிதநேய சட்டங்கள் மூலமும் பாதிக்கப்பட்டோருக்கான் நீதி மற்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து உரையாற்றினார். மனித உரிமை சட்டங்களை ஆராய்ந்து மனித உரிமை மீறல்களில் செயற்பட்டோரை நீதிக்கு முன் நிறுத்தும் சட்டத்தை ஆராய்வதாக உறுதி கூறி கூட்டம் முடிவுற்றது.

கூட்டத்தின் முடிவில் மக்களின் கேழ்விகளுக்கு பதிலளிக்கையில் மனித உரிமை மற்றும் இன சுத்திகரிப்பு என்பதை நிலைநாட்ட சட்ட நடவடிக்கைகளுடன் அரசியல் சார்பான மாற்றமும் இன்றியமையாதது எனக் கூறினார். ஒவ்வொரு தமிழரும் அரசாங்களுக்கும் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் , தமிழரின் சுயநிர்ணய உரிமையையும் விளக்குவதன் மூலம் அரசியல் சார்பான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று கூறி நிறைவு செய்தார்.

http://www.meenagam.org/?p=12191

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.