Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் ஆதிக்கப் போட்டியில் உருவாகும் இந்திய இலங்கை முரண்பாடுகள்

Featured Replies

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் சேது சமுத்திரத் திட்டத்திற்காக 2,427 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.இதற்கான அடிக்கல்லை, அவ்வருடம் ஜூலை 2ஆம் திகதியன்று, பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் நாட்டினார். மூன்றரை வருடங்களில் முடிவடையுமென்று கணிப்பிடப்பட்ட இத்திட்டம், ராமர் கட்டிய அணை விவகாரத்தால் இழுபட்டுச் செல்கிறது.

7500 கிலோ மீற்றர் நீள கடல் எல்லையைக் கொண்ட இந்தியாவிற்கு, பாக்கு நீரிணையானது, தொடர் பாதையைப் பேணுவதற்கு இடையூறாகவிருக்கிறது.

இந்தியாவின் மேற்குத்துறை முகங்களிலிருந்து கிழக்குத் துறைமுகங்களுக்குச் செல்வதற்கு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று, இலங்கையைச் சுற்ற வேண்டும்.

இச் சேது சமுத்திரத் திட்டம், இந்தியாவின் கடல் ஆதிபத்திய எல்லைக்குள் அமைந்தாலும், ஐ.நா.சபையின் கடற் சட்ட சாசனத்தின்படி இலங்கைக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்கிற ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும், விடுதலைப் புலிகளுடன் தீவிரமான முரண்பாட்டினைக் கொண்டிருந்த அரசாங்கம், சேது சமுத்திரத் திட்டத்தினை எதிர்த்து, இந்தியாவைப் பகைத்துக் கொள்ள அன்று விரும்பவில்லை.

அரசு சாராத அமைப்பின் கடலாதிக்கத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்பதைப் புரிந்து கொண்ட இலங்கை, இத்திட்டம் குறித்து அதிகம் பேசவில்லை. சேது சமுத்திரத் திட்டமானது, தென்னிலங்கைத் துறைமுகங்களின் முக்கியத்துவத்தை குறைத்து, பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துமென்கிற விவகாரத்தை உணர்ந்தாலும் நீண்ட நோக்கின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை நிர்மூலமாக்க வேண்டுமென்கிற குறுகியகால உத்திக்கு அரசு முன்னுரிமை வழங்கியது.

இத்திட்டம் ஆரம்பித்த காலத்தில் இந்திய கப்பல் போக்குவரத்து மத்திய அமைச்சராக இருந்தவரே தமிழக தூதுக்குழுவின் தலைவராக இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு.

இந்த பயணத்தின் பின்புலத்தில், பிராந்திய கடலாதிக்கம் குறித்த இந்தியாவின் கரிசனை, மறைமுகமான பங்கினை வகித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆளும் கட்சி உறுப்பினர்களை அனுப்பியதன் ஊடாக, மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அத்தோடு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மறுப்பு ஐ.நா.வின் அழுத்தங்கள், மனித உரிமை சங்கங்களின் நச்சரிப்பு போன்றவற்றை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியாவால் பயன்படுத்தப்பட்டார்கள் இந்த தமிழக எம்.பி.க்கள்.

58ஆயிரம் மக்கள், 15 நாட்களுக்குள் மீள குடியமர்த்தப்படுவார்களென்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட செய்தி ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும் நாளான ஒக்டோபர் 15 இல் வந்தது.

இவர்களின் பயணத்திற்கும், ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நீடிப்பிற்கும், இடைவெளியற்ற நெருக்கமான தொடர்பு இருப்பது போல் தெரிகிறது.

முகாம்களிலுள்ள மக்கள் அவலப்படுகிறார்களென்று தமிழக மக்களுக்கும், மக்கள் மீள் குடியேற்றம் ஆரம்பமாகி விட்டதென இந்திய மத்திய அரசிற்கும், இரட்டைத் தொனியில் கலைஞர் கூறியுள்ளார்.இந்த செய்தியைத் தான், இலங்கை அரசிற்கும், சர்வதேச நாடுகளுக்கும் சொல்ல இந்தியா விரும்பியது.

அனைத்துலகின் அழுத்தங்களிலிருந்து இந்தியா தம்மைக் காப்பாற்றுமென்கிற நம்பிக்கையிலேயே தமிழக ஆட்சிக் குழுவை இலங்கை அரசாங்கம் வரவேற்றது.

ஆபத்தில் உதவும் நண்பன் பிரதியுபகாரமாக இனி எதைக் கேட்பார் என்பது பற்றிப் பார்ப்போம்.

கச்சதீவிலிருந்து, முகாம் நிலை குறித்த அறிக்கை வரை, பல விட்டுக் கொடுப்புக்களையும், சமரசங்களையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.

ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்குச் செய்த பணிக்காக, திருமலை நிலத்தடி எண்ணெய் குதங்களும், அனல் மின் நிலைய ஒப்பந்தங்களும், காங்கேசன்துறை துறைமுகமும், மன்னார் கடற்பரப்பும் அரசால், தானமாக இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், மே மாதம் நடந்த இந்திய தேர்தல் காலத்தில், அரை மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவு கடற்படுகையை, தனதென உரிமை கொண்டாடிய இந்தியா, தற்போது மேலதிகமாக, அடுத்த அரை மில்லியன் ச.கி.மீற்றர் எண்ணெய், கனிமம், உலோகம், எரிவாயு வளம் கொண்ட கடற்படுக்கையை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.

இந்த புதிய கடற்படுக்கையால்தான், இலங்கையுடன் கடலாதிக்கச் சிக்கல் உருவாகப் போகிறது.

முதலில் கடற் சட்டத்திற்கான ஐ.நா. சாசனம் குறிக்கும், "கடற்படுக்கை' என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது "கடற் படுக்கை' யானது ஆழ்கடலுக்கு முன்பாக, ஆழமில்லாக் கடலின் படுக்கையாயுள்ள கண்டத்தைச் சார்ந்த தரை அல்லது கண்டத்திட்டு.

இதனை பெருநிலப்பரப்பின் பாறை அடுக்கின் நீட்சி என்றும் கூறலாம். இந்த நீட்சியின் எல்லைக்கு அப்பால், அப் பெரு நிலப்பரப்பைச் சார்ந்த நாடு, உரிமை கோர முடியாது.

மே 1999 இல் அல்லது அதற்கு முன்பாக ஐ.நா. சாசனத்தில் இணைந்து கொண்டவர்கள், மே 2009 இல் தமக்குரிய கடற்படுக்கையை, அறிவியல் பூர்வ ஆதாரத்தோடு வரையறுத்து அதற்கான உரிமை கோரலை முன்வைக்கலாமென அறிவுறுத்தப்பட்டது.

ஆனாலும், மே 11இல், இந்தியா சமர்ப்பித்த முழுமையற்ற உரிமை கோரல், 10 வருட காலக் கெடுவைத் தாண்டினாலும், மீதியை வேறொரு தினத்தில் முன்வைக்கலாமென்கிற அனுமதியை அது பெற்றது.

இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. மே 8 இல் தனது இறுதியான அறிக்கையை சமர்ப்பித்தபோது, இந்தியா பெற்ற நாள் நீடிப்பு அனுகூலத்தை, இலங்கை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது.

காலக்கெடு கடந்த பின்னர், இந்தியா முன்வைக்கவிருக்கும், அந்தமான், நிக்கோபர் தீவுகளின் மேற்குக் கடல் பகுதியில் உள்ள 600,000 சதுர கிலோ மீற்றர் கடற்படுக்கைக்கான உரிமை கோரலில், இலங்கை சமர்ப்பித்த படுகைகளும் உள்ளடங்குகிறது.

இலங்கை பெருநிலப்பரப்போடு இணைந்த பாறை அடுக்கின் நீட்சிக்குள், இப்படுகை வரவில்லையென்பதே இந்தியாவின் வாதம்.

இத்தகைய முரண்பாடுகளை இரு நாடுகளும் பேசித் தீர்க்கலாம். அவ்வாறு ஒரு இணக்கச் சூழ்நிலை உருவாகாதநிலையில், ஹம்பேர்க்கிலுள்ள கடற் சட்டத்திற்கான சர்வதேச நீதிமன்றிற்கு இவ்விவகாரத்தை இலங்கை கொண்டு செல்லலாம்.

ஏற்கெனவே பங்களாதேஷிற்கும் மியன்மார் அரசிற்குமிடையே, கடல் எல்லையை வரையறுக்கும் விவகாரத்தில், இதுபோன்ற சிக்கல் உருவாகியுள்ளதைக் குறிப்பிடலாம்.

கடல் எல்லை வகுப்பிற்கான காலக்கெடு, 2011 வரை பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. மியன்மாரிற்கான காலக்கெடு மே 2009 இல் முடிவடைந்துவிட்டது.

ஐ.நா. சாசனத்தின் கடற் சட்டத்தின் பிரகாரம், ஒருநாட்டின் கடல் எல்லை, 3 இலிருந்து 12 மைல் வரை அதிகரிக்கப்பட்டு, பிரத்தியேக பொருளாதார வலயம் (உதுஞிடூதண்டிதிஞு உஞிணிணணிட்டிஞி ஙூணிணஞு) 200 மைல் களாக நிர்ணயிக்கப்பட்டது.

அதாவது இந்த வலயத்தில் கனிமவளத்தை அகழ்ந்தெடுப்பதற்கும், அப்பகுதியை உரிமை கொண்டாடுவதற்கும் இச்சாசனம் வழிவகுத்துள்ளது.

ஆனாலும், உரிமை கோரப்படும் கடலடிப் பாறை அடுக்கின் நீட்சி, ஐ.நா. சாசனம் வரையறுத்த 200 கடல் மைல் எல்லைக்குள் அப்பால் விரியுமாயின், அதற்கான அறிவியல் பூர்வமான தொழில்நுட்பத் தகவல்களை, உரிமை கோரல் நாடு வழங்க வேண்டும்.

இதில் வங்கக்கடல் விவகாரத்தில், தனது நிலை மிகத் தெளிவாக, விஞ்ஞான பூர்வமான தகவல்களோடு தாம் இருப்பதாகவும் இந்தியா நம்புகிறது.1947 இல் சுதந்திரமடைந்த இந்தியா, தனது பாரம்பரிய கடற் பிராந்திய எல்லையை 3 மைல்களாக பிரகடனம் செய்தது.

1955 ஆகஸ்ட்டில், பாறை அடுக்கின் நீள அகலத்தை கருத்தில் கொள்ளாமல், கடற் படுக்கைக்கான பூரண இறைமையை உரிமை கோரியது.

1956 மார்ச்சில் கடல் ஆதிக்கத்தை 6 மைல்களாக அதிகரித்து, 29 நவம்பர் 1956 இல். தாமே வரையறுத்த எல்லைக்கு அப்பாலுள்ள 100 மைல் கடற்பரப்பை, மீன்பிடி வலயமாக்கியது.

அதேவேளை ஐ.நா.வின் 1982 ஆண்டு சாசனமே, கடற் சட்டத்தில் பல இறுக்கமான வரையறைகளை கொண்டு வந்தது. இதனை கடற் சட்டத்திற்கான ஐ.நா.சாசனம் 3 (க்NஇஃOகு 3) என்று கூறுவார்கள்.கடல் எல்லை 12 மைல்களாகப்பட்டு, பிரத்தியேக பொருண்மிய வலயம் (உஉஙூ) 200 மைல்களாக நிர்ணயிக்கப்பட்டு, அப்பகுதிக்கான ஆதிபத்திய உரிமையும், விசேட பொருளாதார நடவடிக்கைகளுக்கான அனுமதியும் இச்சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டதெனலாம்.

ஆயினும் தமது அனுமதி இல்லாமல், பிறநாட்டு போர்க் கப்பல்கள் உள் நுழையக் கூடாதென்கிற விவகாரமும், இக்கடல் எல்லை வரையறுப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

பொருளாதார நலன்களுக்கு அப்பால், நாட்டின் பாதுகாப்பு பற்றியதான விடயத்தில் கடற்பிராந்தியம் பெரும் பங்கு வகித்திருப்பதை இரண்டு உலகப் போர்களிலும் காணலாம்.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை யுகத்திலும், கடற்படையின் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை.

இந்த ஐ.நா. சாசன உடன்பாட்டில் கைச்சாத்திட்ட நாடுகள், சுமுகமான முறையிலோ அல்லது சர்வதேச நீதிமன்றிலோ, தமது கடல் ஆதிக்க எல்லையை வகுத்த பின்னர், மீண்டும் அதனை மீளப் பெறும் சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே இருக்கும்.

நிலப்பரப்பிலுள்ள அத்தனை இறைமை சார்ந்த உரிமைகளும், கடலிலும் பிரயோகிக்கப்படும். தம்மைச் சூழவுள்ள அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்து சமுத்திரம் போன்ற கடல் பகுதிகளில், தமது ஆதிபத்திய எல்லைகளை நீடித்து, ஒரு அகண்ட, நிலம்,கடல் சார்ந்த இந்தியா உருவாக்கும் சாத்தியப்பாடுகளை இப்போது காணக்கூடியதாகவிருக்கிறது.

மீன் வலை உயர்த்தப் பயன்படும் சிறு கச்சதீவைக் கொடுத்து, பெரும் கடற் பரப்பை தமதாக்க இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகளை பிராந்திய வல்லரசுகள் எவ்வாறு எதிர்கொள்ளுமென்பதை அவதானிக்க வேண்டும்.

பொருளாதார நலனும், நாட்டின் பாதுகாப்பும் பின்னிப் பிணைந்துள்ள இக் கடலாதிக்கப் போட்டியில், ஈழத் தமிழினத்தின் இறைமையும், உரிமைப் போராட்டமும் எத்தகைய பங்கினை வகித்தது என்பதை மே மாதம், முள்ளிவாய்க்காலில் தரிசித்தோம்.

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

Edited by அன்புச்செல்வன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.