Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை மக்கள் முன் நிறுத்துவேன் --பொன்சேகா

Featured Replies

"தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி கொண்ட போது எனக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கிய பல அரசியல் தலைவர்கள் இன்று நான் அரசியலில் ஈடுபட்டு ஜனாதிபதித்

தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் என் மீது குற்றப் பத்திகை சுமத்துகிறார்கள்.

ஊழல், மோசடி, கொந்தராத்து வேலைகளில் யார் ஈடுபட்டார்களென்பதனை நான் ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படுத்தி அவர்களை மக்கள் ன்னிறுத்துவேன்'' என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பா ளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்தார்.

வெலிசறையில் நேற்று நடை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியிஉரையாற்றிய ஜெனரல் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்த நான் அப்போது படை வீரர்கள் மத்தியில்தான் உரையாற்றியிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றக் கிடைத்த முதல் நிகழ்வு இதுவே. இதற்கு முன்னர் நான் சட்டத்தரணிகள் மத்தியிலும் ஜே. வி. பி.யின் வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் மத்தியிலுமே உரையாற்றியுள்ளேன்.

யுத்தத்தின் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமல்ல இதில் முப்படையினர், பொலிஸார் மக்களும் பங்குதாரர்களே. ஆனால் இவற்றையெல்லாம் மறந்து ஒரு தரப்பினர் யுத்தத்தின் பிரதான கதாநாயகர்களாகத் தங்களைத் தாங்களாகவே இனங்காட்டி பிரகடனப்படுத்தியுள்ளனர்.

யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவ வீரர்களை இன்று கேள்வி கேட்கின்றனர். அவர்களின் பெறுமானத்தை ஏற்றுக் கொள்ளவே மறுக்கின்றனர்.

முப்பது வருடகாலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின் நாட்டை சரியான வழியில் நடத்தவும், பொருளாதார அபிவிருத்திகளைக் கட்டியெழுப்பவும் இந்த அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்யுமென நான் நினைத்தேன். மக்களும் அவ்வாறே நம்பினர். ஆனால் இன்று நடப்பது வேறு. இவ்வாறான நிலை தொடர அனுமதிக்கக் கூடாது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இன்றைய அரசாங்கம் மட்டும் யுத்தம் புரியவில்லை.கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரச தலைவர்களும் புலிகளுக்கு எதிராகப் போராடியவர்களே. ஆனால் அவர்கள் சில காரணங்களால் தொடர முடியாத நிலையேற்பட்டது.

கடந்த காலங்களில் புலிகளுக்கெதிரான யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற போது அது வெற்றியடையாமல் போனதற்கு இராணுவத்துக்குள் நிலவிய கருத்து முரண்பாடுகளும் பிரதான காரணம். இதன் காரணமாக, நாம் முன்னர் கைப்பற்றிய பல இடங்களையும் இராணுவ முகாம்களையும் இழந்தோம். முல்லைத்தீவு, மாங்குளம், ஆனையிறவு போன்ற முக்கிய தளங்களை இழக்க வேண்டி ஏற்பட்டது.

இறுதியாக இடம்பெற்ற யுத்தம் ஆரம்பித்த காலத்தில் யுத்தத்தை நிறுத்த வேண்டிய அவசியமோ அழுத்தங்களோ ஏற்படவில்லை.

ஆனால் யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. ஆனால் அவை நிராகக்கப்பட்டன.

யுத்தத்தினால் கிடைத்த வெற்றியைக் கொண்டு நாட்டுக்குத் தேவையான நல்லவற்றைச் செய்ய அரசாங்கம் ஆவன செய்யுமென எதிர்பார்த்தேன். நாட்டில் சமாதானம், ஐக்கியம் கட்டிக்காக்கப்படுமென நம்பினேன். ஆனால் இவற்றினை இந்த அரசாங்கம் செய்யத் தவறி விட்டது. இதன் காரணமாக இராணுவ சேவைக்கு "குட்'பை கொடுத்து விட்டு அரசியலுக்கு வந்தேன். இன்னும் எனக்கு ஒன்றரை வருடங்கள் இராணுவத்தில் கடமைபுரிய முடியும்.

இந்த நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரம் என்பது ஒரு சாபக்கேடு. அதனை முதலில் ஒழிக்க வேண்டும். இதன் முலமே ஊழல், மோசடிக்குத் தாழ்ப்பாள் இட முடியும்.

அடுத்த மாதம் 27 ஆம் திகதி நான் ஜனாதிபதியாகத் தெவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்தால் அதனைச் செய்தே தீருவேன். நான் ஜனாதிபதியாக வந்தவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றை நிறுவுவேன். அதன் பின் நடைபெறக் கூடிய தேர்தலில் முன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்று அதிகார ஆட்சி றையை ஒழித்து ஜனநாயக ரீதியான நாடாளுமன்ற ஆட்சி றைக்கு வழிவிடுவேன். நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டின் நல்லாட்சிக்கு வித்திடப்படும்.

எதிர்காலத்தில் இந்நாட்டில் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க நான் பாடுபடுவேன். அதற்கு ஒத்துழைப்பு வழங்கி உதவி புய வேண்டியது உங்களது பொறுப்பு. ஊழல், மோசடிகளற்ற நேர்மை மிக்க தலைவராக நான் பார்க்கும் ரணில் விக்கிரமசிங்க மூலம் இந்த நாடு எதிர்காலத்தில் சுபிட்சமிக்க நாடாகத் திகழும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

நான் அடையும் வெற்றியானது மக்கள் அடையும் வெற்றியாகும்.

வடபகுதியில் நாம் யுத்தம் புந்த போது எமக்குத் தமிழ் மக்களும் உதவிகள் புந்தனர்.அதேபோன்று கிழக்கில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது முஸ்லிம் மக்கள் எனக்கு ஆதரவு தந்தனர்.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஆசியாவிலேயே பெயபணக்காரனாக வேண்டுமென்றோ சொத்து, சுகங்களை தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ அல்ல. நீதியை நிலை நிறுத்தி, சமாதானத்தைக் கொண்டு வந்து ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே தேர்தலில் போட்டியிடுகிறேன். இவற்றின் மூலமே புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வட பகுதி மக்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்காக இலஞ்சம் வழங்குவதற்கான பேரம் பேசுதலில் ஈடுபட்ட நபர்களும் இன்று உள்ளனர்.

குடும்ப ஆட்சியை தோல்வி அடையச் செய்வோம் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, ஊழல், மோசடி கொண்ட ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை தோல்வியடையச் செய்து இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி முறையை ஏற்படுத்துவதே ஐக்கிய தேசிய ன்னணியின் ஒரே குறிக்கோளாகும். அதற்காகவே நாங்கள் இன்று ஒன்றுபட்டுள்ளோம்.

இந்நாட்டில் உண்மையான ஜனநாயகத்தைத் தோற்றுவிக்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகார ஆட்சி றையை ஒழிக்க வேண்டும்.

நீதித்துறையிலும் அரசியலமைப்பை புகுத்தப் பார்க்கிறார்கள்.

மக்களின் ஜனநாயக உமைகள் இன்று மீறப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள். அச்சுறுத்தப்படுகிறார்கள்.

புலிகளின் சொத்துகள், பண வைப்பீடுகள் தொடர்பில் அவர்கள் கூறுகிறார்கள். அவற்றின் சரியான மதிப்பீடுகளை அவர்கள் விபரங்களுடன் நாடாளுமன்றத்தில் ன்வைக்க வேண்டும். புலிகளின் சொத்துகளுக்கு நடந்தது என்ன?

பேலியகொடை, நுகேகொடை, தெஹிவளை பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தின் போது தரகுப் பணம் பெற்றவர்கள் யார்?

நாட்டின் சில இடங்களில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியில் காணிகள், வீடுகள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன. இதுதான் நாளைய இளைஞர்களுக்கான திட்டமா?

இவை அனைத்துக்கும் முடிவு கட்டும் காலம் வந்துள்ளது.

ஆகவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குடும்ப ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும். அதற்கான தினம் தான் ஜனவரி 26 ஆகும் என்றார்.

90 வீதமான ஸ்லிம் மக்கள் பொன்சேகாவுக்கு ஆதரவு ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது, கொழும்பு மருதானையில் பாதாள உலகத்தைச் சேர்ந்த சிலரைக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய மேற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப் போனதை நாம் அறிவோம். அங்கு நூற்றுக்கணக்கில் திரண்ட முஸ்லிம்கள் அவர்களை ஓட ஓட விரட்டியடித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்னைப் பகுதியில் தமிழ், முஸ்லிம் கிராமங்களான கல்முனைக்குடி, பாண்டிருப்பு, நீலாவணை ஆகிய இடங்களில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெவித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அதே தினம் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களால் கிழித்து வீசப்பட்டிருந்ததனை என்னால் காணக் கூடியதாகவிருந்தது. எதேச்சõதிகார குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க வேண்டும் மனோ கணேசன் எம்.பி.

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் உரையாற்றுகையில், எதேச்சõதிகாரமிக்க குடும்ப ஆட்சியை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழி ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்வதேயாகும்.

வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் தெற்கிலும் வாழக் கூடிய தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டு தங்களது பலத்தினைக் காட்ட வேண்டும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றி இன்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.ன் 64 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெவித் தார்.

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=95:2009-12-06-02-03-31&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது இராணுவ ஆட்சியில் தான்

1 கிருஷாந்தியை கற்பழித்து கொலை செய்ய ஆதரவாய் இருந்தேன்

2 செம்மணியில் பல மனிதப் புதைகுழிகளை அமைத்தேன்

3. பல தமிழ் மாணவர்களை கொன்றொழித்தேன்

4.படித்த தமிழர்களை அழித்தேன்

5. பல தமிழர் பாரம்பரிய ஆதாரங்களை அழித்தேன்

6 வடக்கு கிழக்கு இல் உள்ள ஒன்பது மாவட்டங்களையும் குண்டு வீசி ஈழப்பூமியை ஈயப்பூமியாக்கியவன் நாந்தான்

7.வடகிழக்கில் உள்ள பல ஈழத்தமிழர்களை ஈனத்த தமிழர்களாக்கியதும் நாந்தான்( டக்ளஸ், கருணா,,,,,,,,,,)

8. வட கிழக்கில் பெண்களின் கற்பை மலிவு விலையில் விற்றது நான்தான்

9. உலகின் அதி உன்னதமானதும், இலங்கையில் மட்டும் காணப்படும் கொலைகார புத்த மதத்தை

பின்பற்றும் மார்க்க வாதிகளில் நானும் ஒருவன்.

10. கடந்த ஆறு மாதகாலமழவில் கிளி நொச்சி , முல்லைத்தீவு ஈறாக பல மனிதப் புதைகுழிகளை அமைத்துள்ளேன். ஆனால் ஒருவரும் போய் பார்க்க முடியாது.

11. பல தமிழர்களின் இந்து கிறிஸ்தவ கோவில் தேவாலயங்களை அழித்துள்ளேன்.

12. பல மத குருமார்களை குரூரமாக கொலை செய்துள்ளேன்

13. பல முன்னணி பாடசாலைகளை அழித்துள்ளேன்

14. பல படசாலைகளை இராணுவ முகாமாக மாற்றியுள்ளேன்

எனது ஆசை நான் ஜனாதிபதியாக வந்து, இலங்கையில் உள்ள சகல தமிழர்களையும் ஓட ஓட துரத்துவதுதான். இங்கு பரந்தன் ராஜன், டக்ளஸ் தேவானந்தா,கருணா, சங்கரி , சித்தார்த்தன் ஒருவரும் ஒண்டும் பிடுங்க முடியாது. அதனால்தான் அவர்கள் தோற்கிற குதிரையில் காசு கட்டி யுள்ளனர்.

எனக்கு இதுவும் தெரியும் இலங்கையில் தற்போது டக்ளஸ் போன்ற கொலைகார தமிழர்கள் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர். இது நல்லதல்ல . இதுக்கும் முடிவு கட்டுவேன். பாவம் மனோகணேசன் போக இடம் இல்லாமல் என்னிடம் ஒட்டி யுள்ளார்.

எனது பொது எதிரி தமிழன்

எனது ஆட்சியில் சிங்களவனுக்காக செய்தவை இன்னும் வரும்..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.