Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதான கால நாடோடிகள்

Featured Replies

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இராஜபாதையாக விளங்கும் வீதியின் ஒரு பகுதியில் தொழிலாளர் குழுவினர் திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தையும் வவுனியாவையும் இணைக்கும் ஏ9 வீதியில் கனகராயன் குளம்வழியாக வீதி திருத்தப்பணி இடம் பெற்றுக் கொண்டிருந்தது.வெளிநாட்டு உதவி அதிகளவில் வந்துள்ளது.

கிளர்ச்சியின் பின்னர் கொழும்பின் நிர்வாக வரை படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில இடங்களில் கனகராயன் குளம் பகுதியும் ஒன்றாகும்.இப்பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன.இரு வாரங்களுக்கு ஒரு தடவை இங்குள்ள குடும்பங்களுக்கு 3 கிலோ அரிசியும் மாவும் ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படுகின்றது.கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளன.

400 பிள்ளைகளுடன் ஒரேயொரு பாடசாலை இயங்குகிறது.ஆனால் யாவுமே சிறப்பானவையாக இருக்கிறது என்று கூறமுடியாது.உண்மையில் விடயங்கள் மகிழ்ச்சியானவையாக இல்லை. தகரக் கூரைகளால் வேயப்பட்ட தங்குமிடங்களிலேயே மக்கள் இப்போதும் இருக்கின்றனர்.

தார்பீப்பா தகரங்களே சுவர்களாக காணப்படுகின்றன. ஷெல் தாக்குதலினால் பகுதிகள் சின்னாபின்னமடைந்திருக்கும் கட்டிடங்களில் சிலர் தங்கியிருக்கின்றனர். மீளக்குடியமர்த்தப்பட்டபோது பல குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. "பங்கீட்டுப்பொருட்கள் போதாது%27 என்று ஜானகி என்ற பெண் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கூறினார். அவருக்கு கைக்குழந்தை உள்ளது.பால்மா மட்டுமே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

வன்னிப் பிராந்தியத்தில் நெருக்கடியான வாழ்க்கையையே மக்கள் முன்னெடுக்கின்றனர். மேற்கில் மன்னாரிலிருந்து கிழக்கில் முல்லைத்தீவு வரையும் வடக்கில் முகமாலையிலிருந்து தெற்கில் ஓமந்தை வரையுமான பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, உளரீதியாக துன்பமான நிலையிலேயே உள்ளனர்.

முதிய பெண்ணான கமலாம்பிகையின் நிலைமை இவையாற்றையுமே கூறுகிறது. 2008 இல் ஷெல் தாக்குதலில் அப்பெண்ணின் கணவர் குமரேசன் இறந்துவிட்டார். சுதந்திரபுரத்தில் இச்சம்பவம் நடந்தது. அங்கு அச்சமயம் அவர்கள் அகதிகளாக இருந்தனர்.கமலாம்பிகை தனது குடும்பத்தினருடன் முள்ளிவாய்க்காலுக்கு தப்பிச்சென்றுள்ளார்.

அச்சமயம் அப்பகுதி மோதல் சூன்யப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர்களை ஷெல்கள் பின்தொடர்ந்தன. அவர்கள் வெளியேறினர்.இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றனர். இது மேலும் துன்பத்தைத் தந்தது என்று அப்பெண் அழுதார். என் மகன் யோகேந்திரனை பாதுகாப்புத் தரப்பினர் கொண்டு சென்றனர். புலிகளின் காவலில் இருந்து தப்பிச்செல்ல இரு தடவை அவர் முயற்சித்தாரென நான் அவர்களுக்கு கூறினேன் அவர்கள் கேட்கவில்லை என்று அப்பெண் தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் கமலாம்பிகையும் அவரின் இரு மகள்மாரும் அவர்களின் சொந்த இடமான கனகராயன் குளத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.அங்கு அவர்களின் வீடு இடிந்து சின்னாபின்னமடைந்து கிடந்ததை கண்டனர். இதனை திரும்பக்கட்ட என்னிடம் பணம் இல்லை என்று அப்பெண் கண்ணீருடன் கூறினார்.

கமலாம்பிகையின் அயலவர் ஒருவரும் இதேமாதிரியான தனது துன்பத்தைக் கூறினார்.முள்ளிவாய்க்காலில் இருந்தபோது தனது கணவனையும் மகனையும் ஷெல் தாக்குதலினால் கனகா இரட்ணசிங்கம் என்ற அந்தப் பெண் இழந்துவிட்டார்.இதனால்,அப்பெண்ணின் மகள்மாரின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.இந்த வீதி நிர்மாணப்பணி இடம்பெறுகிறது.ஆனால், இந்த மாதிரியான வேலை செய்வதற்கு எனது முதுமை இடம் கொடுக்கவில்லை என்று அப்பெண் கூறினாள்.

உண்மையில் வன்னிப் பிராந்தியத்தில் வேலை வாய்ப்புக்கான ஒரேயொரு வளமாக இருப்பது வீதி நிர்மாணப் பணியாகும். 40 நாட்கள் வேலை செய்தால் 20 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொள்ள முடியும். மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று விவசாயம் செய்ய விரும்புகின்றனர். ஆனால், இப்போது விவசாயச் செய்கைக்கான காலம் முடிவடைந்துவிட்டது. கைக்கோடாரிகளையே அதிகாரிகள் கொடுத்துள்ளனர். ஜூனின் பின் பருவமழை ஆரம்பித்த பின் பயிர்ச்செய்கைக்கு ஆயத்தப்படுவதற்கு உபகரணங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர்.

நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் பகுதிகளைச் சேர்ந்த இளம் விவசாயிகளான ஸ்ரீகரன், ஞானரூபன் ஆகியோர் நிலைமையை விபரித்தனர். மீளக்குடியமர்த்தப்பட்ட சகல குடும்பங்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என்று குகன் கூறுகிறார். “கனகராயன் குளத்தில் எங்களைக் கொண்டுவந்துவிட்டுள்ளனர் என்று ஞானரூபன் கூறுகிறார். சொந்த இடங்களுக்குச் செல்வது தொடர்பாக அதிகாரிகள் ஊக்குவிக்கவில்லை. அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

2008 முழுவதும் நாங்கள் ஓடியவாறு இருந்தோம். கடந்த வருடம் நடுப்பகுதியில் வவுனியா முகாமில் ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்தோம். அங்கு சாப்பாடு, சுகாதாரப் பிரச்சினைகளால் அவதிப்பட்டோம். உஷ்ணம் எங்களைப் பலவீனமாக்கியது. விரைவில் சொந்த இடத்துக்கு திரும்பிச் செல்ல முடியுமென நினைத்தோம் ஆனால் மற்றொரு இடத்தில் வாழ வேண்டியுள்ளது என்று ஸ்ரீகரன் கூறுகிறார். இவர்களின் அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? புனர்வாழ்வு தொடர்பான விடயங்களில் தமது கட்சியுடன் கலந்தாலோசிக்கப்படுவது மிக அபூர்வம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கூறினார்.

வடக்கு செயலணிப் பிரிவிலுள்ள உயர்மட்டத்தினர் தன்னிச்சையாகவே தீர்மானங்களை எடுக்கின்றனர். சில சமயம் எம்மை சந்திப்புக்கு அழைக்கின்றனர். சில சமயம் அழைப்பதில்லை என்று தன்னை இனம் காட்ட விரும்பாத அந்த எம்.பி.கூறியுள்ளார்.

அதேசமயம் இந்த மாதிரியான கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டால் அநேகமான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லையென்றும் அரச சார்பானவர்கள் என்று எமது சமூகம் எம்மை அடையாளப்படுத்துவதை நாம் விரும்பவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேவேளை, தமிழர்களுக்கான சுயாட்சிக் கோரிக்கைகளில் முறிகண்டியைச் சேர்ந்த கந்தையா மகேஸ்வரன் என்பவர் உறுதியாக உள்ளார். விடுதலைப் புலிகளின் உருவாக்கத்தால் இந்த சிந்தனை தோற்றம் வந்ததல்ல. 1948 இல் இருந்தே இதனை நாம் கோரி வருகிறோம். நாம் தொடர்ந்து போராடுவோம் என்று அவர் கூறினார். இதற்காக நாம் சர்வதேச சமூகத்தை சார்ந்திருப்போம். இந்தியாவை அல்ல என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறினார்.

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலானது கண்ணாடியாகக் காணப்படுகிறது.

ஜனவரி 26 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் அகதிகள் மீள்குடியேற்றம் தாமதமடைந்துவிட்டது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை.

ஜனவரி 31 இற்கு முன்னர் முகாம்களிலுள்ள

சகல அகதிகளும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால், 1 இலட்சம் பேருக்கு மேற்பட்ட தொகையினர் இப்போதும் முகாம்களில் இருப்பதை அருணாசலம் முகாமிலிருப்போரின் புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றது.

கிளிநொச்சி, முறிகண்டி, புளியங்குளம் ,

உதயநகர் போன்ற பகுதிகளிலுள்ள தமது வீடுகளுக்கு பலர் திரும்பிச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. ஏனெனில், அவர்களின் கிராமங்கள் கட்டுப்பாட்டுப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

"நான் எனது கிராமத்தில் இருக்கிறேன். ஆனால், எனது வீட்டுக்கு செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லையென்று முறிகண்டியைச் சேர்ந்த நடேசன் என்பவர் கூறினார். ஆனால், நம்பிக்கையான விடயம் ஒன்று என்னவெனில், இராணுவத்தினரின் நடத்தை தொடர்பாக எவரும் முறைப்பாடு தெரிவிக்கவில்லை. பிள்ளைகள் சிலர் அவர்களை "அங்கிள்%27 என்று கூப்பிடுகின்றனர். அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டுவது பாவம் என்று இராஜேஸ்வரி என்ற வளர்ந்த இரு மகன்மாருடன் இருக்கும் இராஜேஸ்வரி என்ற பெண் கூறினார்.

எவ்வாறாயினும் அவர் கூறிய தொனியானது இதுவரை நல்லது என்பதாகக்காணப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

http://www.thinamurasam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.