Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு வடக்கு, கிழக்கில் வென்றவர்களும் - தோற்றவர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு வடக்கு, கிழக்கில் வென்றவர்களும் - தோற்றவர்களும்

[ சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2010, 12:57 GMT ] [ கார்வண்ணன் ]

சிறிலங்கா நாடளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனிப்பெரும் கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைபு [தமிழரசுக் கட்சி] உருவெடுத்துள்ளது.

மாவட்ட அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 13 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 05 ஆசனங்களையும், மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் தலா 03 ஆசனங்களையும், திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனத்தையும் தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது.

தேசியப்பட்டியல் மூலம் தமிழரசுக் கட்சிக்கு குறைந்தது ஒரு ஆசனம் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சரவணபவான், சிறிதரன் ஆகியோர் தமிழரசுக் கட்சி சார்பில் அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

அதேவேளை வன்னி மாவட்டத்தில் இருந்து செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து யோகேந்திரன், அரியநேந்திரன், பொ.செல்வராசா ஆகியோரும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து பியசேனவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன் அதிகப்படியான விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளார்.

கும்புறுப்பிட்டியில் மீள்வாக்களிப்பு இடம்பெற்ற பின்னரே திருகோணமலை மாவட்ட இறுதிமுடிவு அறிவிக்கப்படும் என்பதால் அவரது தெரிவு குறித்து இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ஆனாலும் திருகோணமலையில் இரா.சம்பந்தன் தெரிவாவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர வடக்கு, கிழக்கில் ஈபிடிபியே அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட ஈபிடிபிக்கு 03 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இந்தக் கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா, சில்வெஸ்திரி அலன்ரின், முருகேசு சந்திரகுமார் ஆகியோர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

இவர்களை ஈபிடிபி பிரதிநிதிகள் என்பதை விட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதிநிதகள் என்றே சொல்ல வேண்டும்.

ஐதேக சார்பில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினரும், அம்பாறையில் இருந்து 02 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐதேக வடக்கு,கிழக்கில் ஆறு ஆசனங்களைப் பெற்றுள்ள போதும் அவர்களில் விஜயகலா மகேஸ்வரன் மட்டுமே தமிழராவார்.

அதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வன்னி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 02 ஆசனங்களையும், அம்பாறையில் 04 ஆசனங்களையும், மட்டக்களப்பில் 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இவர்களில் எவருமே தமிழர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்தத் தேர்தலில் புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி ஆகிய கடசிகளும் போட்டியிட்டிருந்தன.

வவுனியாவில் புளொட் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்தக் கட்சி தோல்வியடைந்தது.

கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தமக்கு ஆசனம் கிடைக்கும் என்று உறுதியாக நம்பியிருந்த போதும் ஒரு ஆசனம் கூடக் கிடைக்கவில்லை.

ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு மிகக் குறைந்தளவான வாக்குகளே கிடைத்தன.

அதேவேளை வடக்கு,கிழக்கில் போட்டியிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகளும் குறைந்தளவு வாக்குளையே பெற்று தோல்வியடைந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்தமுறை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து, மீளவும் அதில் போட்டியிட்டவர்களில் இருவர் தோல்வியடைந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் தோமஸ் தங்கத்துரை வில்லியம்ஸ் ஆகியோரே தோல்வியடைந்தவர்களாவர்.

அதேவேளை கடந்தமுறை தமிழரசுக் கடடசி சார்பில் தெரிவு செய்யப்பட்டு ஆளும்கட்சியோடு இணைந்து வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட கனகரத்தினம், சிவநாதன் கிசோர் மற்றும் மட்டக்களப்பில் போட்டியிட்ட தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு தமிழ் காங்கிரஸ் சின்னதத்தில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும், குடை சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோரும் இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தனர்.

தோல்வியடைந்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் தர்மலிங்கம் சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, தி.சிறிதரன், அருட்பிரகாசம் [அருளர்] போன்றோரும் அடங்குகின்றனர்.

வடக்கு, கிழக்கில் அதிகளவிலான சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்ட போதும் அவற்றில் எதுவுமே குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை.

கடந்தமுறை வடக்கு, கிழக்கில் இருந்து 23 தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர். ஆனால் இந்தமுறை நாடாளுமன்றத்துக்கு 17 தமிழர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தமுறை ஆளும்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 4 முஸ்லிம்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் இருந்து றிசாத் பதியுதீன், உனாயிஸ் பாருக் ஆகியோரும்- மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஹிஸ்புல்லாவும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதாவுல்லாவும் தெரிவாகியுள்ளனர்.

அதேவேளை, ஐதேக சார்பில் வன்னி மாவட்டத்தில் நூர்தீன் மசூர், திருகோணமலையில் தௌபிக், மட்டக்களப்பில் பசீர் சேகுதாவூத், அம்பாறையில் ஹாரிஸ், பைசல் காசிம் என மொத்தம் 05 முஸ்லிம்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை வடக்கு,கிழக்கில் இருந்து இந்தமுறை 05 சிங்களவர்களும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கப் போகும் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யார் நியமிக்கப்படுவார்; என்ற தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

கூட்டமைப்பு சமர்பித்த தேசியப் பட்டியலில் முதலாவதாக சட்டத்தரணி சுமந்திரனின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20100410100888

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.