Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் சர்வதேச தமிழர் விளையாட்டு விழா -2010

Featured Replies

tsa_news-1.jpg

சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி. (10.04.2010) லண்டன் ஓவல் சர்வதேச கிக்கெட் மைதான மண்டபத்தில் இடம் பெற்றது. நாம் அறிந்த வரையிலே தன் தலாக சர்வதேச ரீதியில் தமிழர் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வு இந்த ஆண்டிலேயே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பின் னணி உண்டு. சங்ககாலத்திற்கு ன்பிருந்தே தமிழன் விளை யாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த நான்கே.' (தொல் மெய் 11) என்ற தொல்காப்பியர்' செய்யுள் சான்று பகர்கின்றது.

அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்கணத்தைக் கூறாது விட்டாலும் மன மகிழ்ச்சி ஊட்டும் ஒரு செயலே விளையாட்டு எனக் கூறுகின்றார். அத்துடன் சங்ககாலத்து நற்றிணையில் கூட “விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறித் திருத்தல் அறனும் அன்றே ஆக்கம் தேயம்' (நற்றிணை 68:13)

அதாவது உடலை நல்லறையில் பேணுதல் அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல்திறனும், தேடிய செல்வம் அழியும். என்று கூறுகின்றது நற்றிணை. ஆகவே அறிவுக்கும், உடலுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பது விளையாட்டு.

விளையாட்டு என்றால் விரும்பி ஆடுகின்ற ஆட்டம். அது இன்பத்தைக் கொடுகின்றது.

என்றும் பொருள் கூறுகின்றார்கள். அத்துடன் இந்த விளையாட்டானது ஒருவனுடன் அடுத்தவனைத் தோழமை கொள்ளவும், ஓரணிக்குள் திரண்டு பயிற்சியைப் பெறவும், எல்லைகள் கடந்து நேசத்தை இணைக்கின்ற பாலமாகவும் உள்ளது. அந்த வகை யில் தான் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வருடம் பித்தானியாவில் இடம்பெற்ற தமிழர் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி இடம் பெற்றது.

இந்த நிகழ்வினை வெகு சிறப்பாக இந்த வருடம் சர்வதேச தியாக வென்றவர்களுக்கான ஆண்டு விருது விழாவினை பித்தானிய தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தியது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத் திருந்த இடம் ஓவல் சர்வதேச கிக்கெட் விளையாட்டு மைதானத்திற்குள் அமைந்துள்ள மண்டபம். இது ஒரு மிக க்கியமான மைல் கைல்லாகும். இந்த விளையாட்டு விழா பற்றிய பார்வைகளுக்கு முன்னர் பிரித்தானிய தமிழர் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் இலச்சினையை ஒருகணம் நோக்குதல் சிறந்தது என நினைக்கின்றேன்.

அவர்கள் தமது இலட்சினையில் ஒரு ஆண் விளையாட்டு வீரனும், ஒரு பெண் விளை யாட்டு வீராங்கனையும், ஓட்டப் பந்தையத் தடத்தில் நின்று சங்கு ஒலிக்கின்றனர். இது ஒரு க்கிய செய்தியினைக் கூறுகின்றது. எனக்கு பாரதிதாசன் பாடல் ஒன்று இங்கு ஞாபகத் திற்கு வருகின்றது.

“எங்கள் வாழ்வும், எங்கள் வளம் மங்காத தமிழென்று சங்கே ழங்கு' என்பது பாரதிதாசனின் பாடல். நான் நினைக்கின்றேன். அந்தப் பாடலடிகளை மைய மாக வைத்து இந்த இலச்சினை உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று. ஏனெனில் சங்கானது கடல் மடியிலிருந்து கிடைக்கின்றது. அத்துடன் கடலானது உலகம் ழுவதையும் இணைக்கும் பாலமாகவும் அமைகின்றது. ஆகவே அப்படி உலகம் ழுவதையும் இணைக்கும் பாலமான கடலிலிருந்து கிடைக்கப் பெற்ற சங்கை எடுத்து ஊதிக் கொண்டிருப்பதால் உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கின்ற பாலமாக இந்தச் சங்கொலியுடன் கூடிய இலச்சினை விளங்குவதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

அத்துடன் பண்டைத்தமிழர்கள் தங்கள் விளையாட்டுக்களினை ஆரம்பித்து வைப்பதற்கு சங்கு, முழவு, பறை போன்றவற்றை பயன்படுத்தினார்கள் என்பதனை அறிய டிகின்றது. ஆகவே இதனை உணர்த்துவதாகவும் இவ் இலச்சினை அமைந்திருக்கலாம்.

கடந்த 10 ஆம் திகதி மாலை 7 மணியளவில் அக வணக்கத்துடனும் தமிழ்த் தாய் வாழ்த்துடனும் ஆரம்பமான இந்நிகழ்வினை விளையாட்டுத் துறையின் செயலாளர் ஜோய் பூரணச்சந்திரன் தலைமை ஏற்று நடத்தினார். இதில் நடன நிகழ்வுகள், பாடல்கள், உரைகள், இரவுப் போசனம் ஆகியன இடம்பெற்றன. இந்த விருது வழங்கும் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வர்த்தகர்கள், கல்விமான்கள், மாணவர்கள், பொது மக்கள் என்று மண்டபம் நிறைந்திருந்தது. இந்த நிகழ்வில் பித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

பிரதம விருந்தினராக பித்தானிய இளைஞர்கள் விவகார அமைச்சர் டோன் பற்லர். (Hon. Minster Ms. Dawn Butler MP Minister for young Citizen and Youth engage- ment), சிறப்பு விருந்தினர்களாக பித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ப காட்ணர் (Barry Gardiner MP) சிபோன் மக்டொனால்ட் (Siobhain McDonal MP) ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் முன்னாள் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்ட்ன், பித்தானிய நிழல் வெளிவிவகார அமைச்சர் கேரத் தோமஸ்.

ஆகியோரும் தங்கள் ஆதரவுகளையும் கருத்துக்களையும் வழங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் இந்த விளையாட்டுப் போட்டியும் விருதுவழங்கும் நிகழ்வும் சர்வதேச ரீதியாக மேலும் விவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.

அத்துடன் இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கிய தமிழ்ப்பாடசாலைகளின் விளையாட்டுத்துறைச் செயலாளர் ஜோய் பூரணச்சந்திரன் “இந்த விளையாட்டு நிகழ்வும் விருதுவழங்கலும் உலகம் முழுவதும் நடைபெற வேண்டும் என்று கூறியதோடு அனைத்துத் தமிழ் விளையாட்டு அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு குடையின்கீழ் செயற்பட வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய இளைஞர்கள் விவகார அமைச்சர். டோன் பற்லர். சிறப்புரையாற்றும் போது எவ்வளவோ தடைகளைத் தாண்டி தமிழர்கள் இன்று இந்த நிகழ்வினை நடத்துகின்றார்கள். இது அவர்களது துணிச்சலையே காட்டுகின்றது. நிச்சயமாக 2012 ஆம் லண்டனில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிக தமிழர்களைக் காணடியும் என்றார். அத்துடன் பல விருதுகளை அவர்கள் பெற தான் வாழ்த்துவதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய விளையாட்டுத்துறையின் தலைவர் அருணாசலம் திருக்கேதீஸ்வரன்.

தமிழர் சமுதாயத்தில் முதன் முதலாக நடைபெறுகின்ற நிகழ்வு இந்த நிகழ்வாகும். என்று பெருமையடைந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2009 ஆண்டு விருதுபெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் 2009 இற்கான சிறுவர் கிக்கெட் போட்டியின் விருதினை நிஷாந் செல்வகுமார் ,2009 ஆம் ஆண்டுசிறந்த துடுப்பாட்டத்திற்கான விருதினை அருண் ஹநாத் , சிறுவர் உதைபந்தாட்டத்திற்கான 2009 ஆண்டுக்கான விருதினை வினோதன் சத்தியர்த்தி , உதைபந்தாட்டத்திற்கான கடந்த ஆண்டு விருதினை சிமிலன் ஆனந்தஜெயராஜா , கரப்பந்தாட்டத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான விருதினை தயாளன் சின்னத்துரைஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறுவர்களுக்கான தடகளப்போட்டியின் 2009 இற்கான ஆண்கள் பிவிற்கான விருதினை மதுசான் யூட் றொனில்.,சிறுவர்கள் தடகளப் போட்டியின் பெண்கள் பிவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருதினை நற்றலி ஜோர்ஜ் , தடகளப்போட்டியின் ஆண்கள் பிவில் 2009 ஆம் ஆண்டுக்கான விருதினை நவஜீவன் பரராஜசிங்கம் , தடகளப் போட்டியின் பெண்கள் பிவில் 2009 ஆண்டுக்கான விருதினை கனிஷயா நடராஜா , சிறுமிகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் 2009 ஆண்டின் விருதினை நற்றலி ஜோர்ஜ் , பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் 2009 ஆம் ஆண்டுக்கான விருதினை ரதிகலாதேவி ஆனந்தவடிவேல் , சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் விளையாட்டுத் துறை வாழ்க்கைச் சாதனையாளர் 2009 இற்கான விருதினை நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பொதுவாக புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் சூழ்நிலையில் அவர்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய நிகழ்வாகவே இவற்றைப் பார்க்க முடிந்தது. அத்துடன் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில் அவர்கள் விளையாட்டுத் துறையிலும் தங்களது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர் என்பது இந்நிகழ்வின் மூலம் தெட்டத் தெளிவாகத் தெந்தது.

இனிவரும் காலங்களில் புலம்பெயர்ந்து வாழும் விளையாட்டு வீரர்கள் தாயகத்தில் சென்று விளையாடவும், தாயகத்தில் உள்ள வீரர்கள் புலம் பெயர் தேசத்தில் வந்து விளையாடவும் இது போன்ற விளையாட்டுக் களும், விருதுவழங்கும் நிகழ்வுகளும் உதவும் என நினைக்கின்றேன்.

படங்கள்.........

http://www.tamilarkal.com/index.php?option=com_content&view=article&id=283:-----2010&catid=50:sports&Itemid=98

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.