Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகம்

Featured Replies

மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகம்

Tuesday, 01 June 2010 23:53

சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஒரு அறிக்கை பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தமிழ் மக்களின் ஒரேயொரு தேசியத் தொலைக்காட்சியான TVI நிறுவனத்தை அது தற்போது இயங்கும் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது என்ற சாராம்சத்தைக் கொண்டு செழுமையான தமிழினால் பூச்சிடப்பட்ட இந்தச் செய்தி தொடர்பாக தமிழ் மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களான CTR, CMR, MTR, TVI நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பில் எழுந்துள்ள நிர்வாகச் சிக்கலை, உள்வீட்டுப் பிரச்சினையை நான்கு சுவரிற்குள் கூடிப் பேசித் தீர்ப்பதை விடுத்து அவசர அவசரமாக இந்தச் செய்தியை வானலையில் எடுத்து வர வேண்டிய தேவை என்ன என்பதே முதலாவதாக எழுகின்ற கேள்வியாகும்.

குறித்த அறிக்கையில் எதுவித பொருளாதாரப் பலமுமில்லாத ஒரு நிறுவனமாக TVI சித்திரிக்கப்பட்டிருப்பதுடன் அது இயங்குவதற்கான பணம் தமிழர் எதிர்ப்புத் தரப்பினரிடமிருந்து கிடைக்கப் பெறப் போகிறதா என மக்கள் ஐயுறும் வகையில் வார்த்தை ஜாலங்கள் அடங்கப் பெற்றதாய் அமைந்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

அத்துடன் TVI நிறுவனத்தின் புதிய பொறுப்பாளராகப் பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட திரு. பி.விக்னேஸ்வரனை சிறிலங்கா தொலைக்காட்சியில் பணிப்பாளராகப் பணியாற்றியவர் என்று அறிமுகம் வழங்கப்பட்டதன் மூலம் அவரைச் சிங்கள அரசின் கைக்கூலியாகக் காட்ட முற்பட்டார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

கடந்த பல ஆண்டுகளாக TVI நிறுவனத்தில் பணியாற்றிய போது அவரது பின்னணி குறித்து எதுவித கேள்வியும் எழுப்பாதவர்கள் திடீரென சிறிலங்காத் தொலைக்காட்சி குறித்து அழுத்தமாகத் தெரிவித்து மக்களின் மனதில் தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்த முற்பட்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

மொத்தத்தில் புலத்திலே தற்போது தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் தமது கருத்துடன் உடன்படாதவர்களுக்கு துரோகி முத்திரை குத்தும் செயற்பாட்டில் CTR நிறுவனமும் குதித்துள்ளதோ என்ற சந்தேகத்தை இந்த விடயம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் தேசியம் சார்ந்த ஒரேயொரு தேசியத் தொலைக்காட்சியான TVI நிறுவனத்தை உடனடியாக குறித்த கட்டடத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளை அறியாமல் செயற்பட்டார்களா அல்லது தமது கட்டுப்பாட்டில் இல்லாதவிடத்து குறித்த தொலைக்காட்சி செயலிழக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டார்களா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

குறிப்பாக புதிய இடம் தேடி மீண்டும் தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்பதுடன் இதன் காரணமாக குறித்த தொலைக்காட்சி பெரும்பான்மையான சந்தாதாரர்களையும் விளம்பரதாரர்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதையும் இது புலம்பெயர் ஊடக சந்தைக்குள் மூக்கை நீட்டியுள்ள கருணாநிதி உள்ளிட்டவர்களின் ஊதுகுழல் தொலைக்காட்சிகளான சன்ரீவி, கலைஞர் ரீவி போன்றவற்றிற்கு வலுச் சேர்க்கும் என்பதையும் சமூக நோக்கிலான பணியினைத் தொடர்ந்து எடுத்து வருவதாக கூக்குரலிடும் CTR நிர்வாகம் கவனத்தில் எடுக்கவில்லையா அல்லது எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழையானால் போதும் என்ற ‘சமூக அக்கறை’யின் வெளிப்பாடா என்பதும் இயல்பாக எழுகின்ற ஒரு கேள்வியாகும்.

TVI நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவது போலவும் அதனை தமது வானொலிகளே தாங்கிப் பிடிப்பது போலவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருபவர்களுக்கு இதன் பின்னாலுள்ள ‘திருகுதாளங்களை’ இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தமது பொருளாதார பலத்தை தக்க வைத்துக் கொள்ள தமிழ் மக்களிடையே கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளை நடத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு ஸ்திரமான வளர்ச்சிப் பாதையில் சென்ற தொலைக்காட்சி திடீரென சரிவுப் பாதையில் சென்றதன் மர்மத்தையும் கணக்கியல் நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்த கணக்காளர்களே விளக்க வேண்டும்.

இறுதியாக இது எனது தொழில் என நழுவல் பதிலைச் சொல்லி இந்தச் செய்தியை வானலை வழியாக மக்களிடம் சேர்ப்பித்த பெருந்தகையிடம் ஒரு கேள்வி ...

எனது பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் தொழில் சார் கடமை என்று வந்து விட்டால் நான் அதிலிருந்து வழுவ மாட்டேன் என்று பறைதட்டும் நீங்கள் உங்கள் ஒருவரின் பொருளாதார நலனுக்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் அறிவிலிகளாக்கி அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தும் விதமான கருத்துக்களை முன்வைப்பது எந்த தர்மத்தில் அடங்குகின்றது எனச் சற்றே விளக்குங்கள். தமது பொருளாதார வாழ்வு நலனுக்காக சிங்கள அரசின் அடிவருடிகளாகச் செயற்படும் ஒட்டுக் குழுக்களும் இதே நியாயத்தைப் பேசினால் அதனை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதையும் தெளிவு படுத்துங்கள்.

தமிழ் மக்கள் தங்கள் பிரச்சாரப் பலத்தை பலமடங்கு அதிகரிக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் எமது மக்களை திசை வழுவாது வழிநடத்த வேண்டிய ஒரு தருணத்தில் உங்கள் அற்ப நோக்கங்களுக்காக எமக்கான ஊடகங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதீர்கள். ஏற்பட்டிருக்கும் நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து அடுத்த படிக்குச் செல்வதை விடுத்து ‘தேசத் துரோகி’, ‘தேசியத் துரோகி’களின் பட்டியலை அதிகரிக்காதீர்கள். அடுத்தவரை நோக்கிக் கல்லெறிவதற்கான காலமல்ல இது என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.

தமது தாய் தந்தையரை, பெற்ற குழந்தைகளை, வாழ்ந்த வீட்டை, ஊரை, இழந்து சிங்களத்தின் அடிமைகளாய் வாழ்ந்து கொண்டு, புலத்திலிருந்தேனும் தமக்கொரு நம்பிக்கை ஒளி பரவாதா என அங்கலாய்க்கும் எமது தாயக சொந்தங்களுக்காக இதனைச் செய்வார்களா?

இதன் ஒலி வடிவத்தினைக் கேட்க இங்கே அழுத்தவும்: http://www.youtube.com/watch?v=lAxh-af7Vp4

http://www.eelamweb.com

Edited by Saniyan

தன் தலையில் தானே மண்ணள்ளிப்போடும் கைங்கரியங்களை இந்த உலகத்தில் தமிழினத்தைத் தவிர வேறு எந்த இனமும் செய்திருக்காது......

காகமே பற..பற..பற

காகத்தின் குஞ்சே பற..பற..பற..

காகத்தின் முட்டையே பற..பற..பற

இந்தக் வரிகளை டமாசுக்குத்தான் போட்டன் இப்ப பாத்தா இப்பிடியான முட்டாள்த்தனமும் முடிச்சமுக்கிற அடாவடித்தனமும் இருந்தாத்தான் உலகத்தில வாழலாமோ?

சி.ரி.ஆர். காரர் ஒருக்காலமும் திருந்தபோறதில்லை. சனத்தை முட்டாள்கள் எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறாங்கள்....சீ.டி.ஆர் வானொலியை உருவாக்கி அதை தேசியத்தின் பாதையில திறமையா நடாத்திச்சென்ற கலாதரனை வெளியேற்றி சக்தியா சக்களத்தி சண்டையை உருவாக்கின நேரத்திலயே இந்த வானொலிட சீத்துவம் விளங்கி இத ஓரம்கட்டி இருக்கவேணும். எங்கட சனம் எப்பவுமே டியு!ப்லைட்டுகள்தானே

Edited by DAM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.