Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தியசோதனையில் சாதனை படைக்க வாரீர்!

Featured Replies

வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டாக அறிவித் துள்ளனர்.

வன்னிப் பகுதியில் இராணுவக் குடும்பங்களைக் குடிய மர்த்தும் நடவடிக்கை இடம்பெறப் போகும் தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தெரிந்த விடயம். ஏ-9 பாதையால் பயணிக்கும் எவரும் இராணுவத் தின் குடும்பத்தினருக்கு வீடமைப்பதற்கான கட்டடப் பொருள்கள் அடுக்கி வைத்திருப்பதை அவதானித்து வருகின்றனர். இருந்தும் அதனைப் பகிரங்கப்படுத்த எவரும் இல்லை என்ற ஆதங்கம் இருந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில், நான்கு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்த அரசு திட்டந்தீட்டியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர்.

உண்மையில் இவர்கள் வெளியிட்ட தகவலுக்காக அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இத்தகைய தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இதுபற்றி இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்டிய போதெல் லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வலம்புரி எழுதுகின்றதெனப் பிரசாரம் செய்யப்பட்டது.

என்ன செய்வது? எங்கும் போக்கிரித்தனங்கள் தலை விரித்தாடத் தொடங்கினால் தேவையற்ற-ஆரோக்கிய மற்ற மற்றவர்களின் மனங்களை நோகடிக்கக் கூடிய வெறுவிலித்தன விமர்சனங்களே தாண்டவம் ஆடும்.இப்போதும் நாம் கூறுகின்றோம். அன்புக்குரிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே! தமிழ் மக்களின் நலன் கருதி ஒன்றுசேருங்கள். ஓரணியில் திரளுங்கள். அப்போது தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வெளிச்சத்துக்கு வந்து சேரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகிய மூவரும் வன்னிக்குச் சென்றனர்.

மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். கள நிலைமைகளைக் கண்டனர். உண்மை வெளிப்பட்டது. நான்கு இலட்சம் சிங்கள மக்களைக் கொண்ட மாபெரும் குடியேற்றத் திட்டத்தை நிறைவேற்ற அரசு தீட்டியுள்ள திட்டத்தை வெளிப்படுத்தினர். அந்தத் தகவல் லண்டன் பி.பி.சியிலும் ஒலிபரப்பப்பட்டது. இப்போது உலகம் உண்மையை அறிந்து கொண்டுள்ளது. இதைத்தான் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற அனைவரிடமும் கேட்கின்றோம்.

உங்களுக்காக-பதவிக்காக துன்பப்பட்ட தமிழ் மக்களுக்குக் கெடுதி இழைக்காதீர்கள். அது மிகப் பெரும் பாவச் செயல். அன்புக்கினிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே!உங்களிடம் தாழ்மையாகக் கேட்பது, கல்லுகள், முள்ளுகள், காடுமேடுகள் எங்கும் நடந்து சென்று தமிழனமே உன் துயரைச் சொல். அவலத்தைச் சொல். உலகமே இதைப் பார். இந்த அவலத்தை பார். இதற்கு முடிபுகட்டு என்று கூப்பாடு போடுங்கள்.

அந்தக் குரலுக்கு சர்வதேசம் செவிசாய்க்காவிட்டாலும் அந்த ஆண்டவன் நிச்சயம் உதவுவான்.துன்பப்படுவோன் பாக்கியவான் என்ற விவிலியத் தின் தத்துவத்தை மறக்காமல் சத்திய சோதனையில் சாதனை படைப்போம். வாருங்கள். பேதங்கள் களைந்து கைகோர்த்து வன்னியில் நடவுங்கள். சம்பந்தர்,டக்ளஸ்,சங்கரி, கஜேந்திரன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம்... எங்கே கைகளை இறுகப் பற்றுங்கள். புறப்படுங்கள்; திட்டங்கள் தவிடுபொடியாகட்டும்.

-- வலம்புரி

http://www.valampurii.com/online/viewnews.php?ID=8805

  • தொடங்கியவர்

வடக்கு, கிழக்கில் திடீரென முளைக்கும் இராணுவ முகாம்களால் மக்கள் குழப்பம் பெரும்பான்மையின ஊடகங்கள் சிறுபான்மையினரின் பிரச்சினைகளில் அலட்சியம்; ஹக்கீம்

[ தினக்குரல் ] - [ Aug 04, 2010 04:00 GMT ]

-- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திடீரென முளைக்கும் இராணுவ, கடற்படை முகாம்கள்

-- சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெரும்பான்மையின ஊடகங்கள் தயாராயில்லை

-- கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வடக்கிலும் காணி அபகரிப்பு

-- படையினரையும் அவர்கள் சார்பானவர்களையும் குடியேற்ற நடவடிக்கைகள்

-- காணிகளிலிருந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

  • தொடங்கியவர்

வடக்கில் சிங்களக் குடியேற்றம் - [ உதயன் ] - [ Aug 04, 2010 04:00 GMT ]

-- வடக்கில், சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள் வதற்காக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட் டங்களில் தமிழ் மக்களின் பத்தாயிரம் ஏக்கர் காணியை அரசாங்கம் கையகப்படுத்த இருப்பதாகத் தமிழ்த்தேசி யக் கூட்டமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது;

-- வடக்கு, கிழக்கின் பாதுகாப்புக்கருதி அங்கு நிரந்தர இராணுவ முகாம்களும் படைத்தளங்களும் அமைக்கப் படும்

-- இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் கூறியபோதே வடக்கின் பெரும் பிரதேசம் கபளீகரம் செய்யப் படும்; பல்லாயிரக் கணக்கான தமிழர் நிலம் அரசினால் கையடக்கம் செய்யப்படும் என்ற ஆபத்துக்குச் சமிக்ஞை காட்டப்பட்டிருந்தது. அது இப்போது செயல்வடிவம் பெறுகிறது.

-- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்குப் பிரகாரம், அரசின் நட வடிக் கைகளால், வடக்கின் மக்கள் தொகையில் சிங்களவர் 30 சதவீதத்தினர் ஆகிவிடும் ஆபத்து தொட்டுக்காட் டப்பட்டுள்ளது.

-- முந்தைய அரசாங்கங்கள் எதனையும் விட, இப் போதைய அரசு, இலங்கையில் தமிழர் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில், மிகக்குறிப்பாக வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை மிகத் தீவிரமாக டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் கிழக்கில் பட்டிப் பளையை அம்பாறை என்று பெயர் மாற்றம் செய்த அள வுக்கும் வடக்கில் நாயாறை பதவியா என்றும் மாற்றும் அளவுக்கும் நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றத்தின் வேகத்தை விடவும், அசுர வேகத்தில் தமிழ்ப் பகுதி களைச் சிங்களப் பிரதேசங்களாக்கும் அதி தீவிரப் போக்கைக் கொண்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சம்.

கடந்த ஜூன் மாதப் பிற்பகுதியில் வடக்கு, கிழக்கில் சிங்கள மக்களை பெரும் எண் ணிக்கையில் குடியேற்றத் திட்டமிடப்படுகிறதா என்ற ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கான ஜனாதிபதி யின் பதில், அரசாங்கத்தின் உள்நோக்கத்தை வெளிப் படுத்தியிருந்தது.

இந்த இரண்டு மாகாணங்களிலும் சிங்கள மக்கள் முன்னர் நிறையவே வாழ்ந்தனர். பிரபாகரனே அவர் களை அடித்துத் துரத்தினார். இனி அவர்கள் அங்கு சென்று வசிக்க விரும்பினால் அவ்வாறு செய்யலாம் என்று தெரி வித்திருந்தார் நாட்டின் தலைவர்.

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் அவசரப்படுவதில் காரணம் இல்லாமல் இல்லை. தமிழர் பிரச்சினையில் தீர்வு என்று வரும் போது, வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மட்டும் வாழவில்லை என்பதால் அவை இணைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு இடமே இல்லை என்று தட்டி விடுவதற்கான கபட புத்தி இது.

இனப்பிரச்சினைக்கு நியாயமான, உகந்த தீர்வு காணப்படுவதற்குப் போடப்படும் தடைக் கல்லே வடக் கில் அரச அனுசரணையுடன் நடக்கப்போகும் அவசர அவசரமான சிங்களக் குடியேற்றம்.

இதன் பின்னரும் தமிழர் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்று நம்புவது எப்படி...?

இந்தியா உட்பட்ட சர்வதேசம் தானும் இதற்குப் பதில் அளிக்கவும் முடியாது, பரிகாரம் தேடவும் முடியாது. ஐயகோ, தமிழினமே....!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.