Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் காடுகளை அழித்து மரமுந்திரிகைச் செய்கை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் காடுகளை அழித்து மரமுந்திரிகைச் செய்கை: சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் !

திகதி:21.08.2010

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் அடர்ந்த காட்டை அழித்து அங்கு மரமுந்திரிகையை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரச வளங்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ணவே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, அரச அதிகாரிகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

வடபகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இவர் அங்கு இதுதொடர்பான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அதிகாரிளைப் பணித்துள்ளார்.

முன்னர் இந்த நிலப்பரப்பில் மரமுந்திரிகைச் செய்கை பண்ணப்பட்டு வந்ததாவும் பின்னர் அது கைவிடப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.

தற்போது அந்தப் பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டை அழித்து அங்கு மரமுந்திரிகை பயிரிடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புலிகளால் வெள்ளாங்குளத்தில் உருவாக்கப்பட்ட 400 ஏக்கர் பழமரப் பண்ணை நிலத்தை சுவீகரிப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வன்னியில் மரமுந்திரிகை, இறப்பர் போன்ற பயிர்களை நாட்டி அவற்றைப் பராமரிப்பதற்கு என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடலாம் என்று வன்னிப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

sankathi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.