Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை படுகொலைக்கு முழுக்க தி.மு.க தான் பொறுப்பு. பொன்.ராதாகிருஷ்ணன்

Featured Replies

முதல்வர் கருணாநிதி, மீண்டும் திராவிட நாடு, தனித் தமிழ்நாடு கொள்கைகள் பற்றி பேசி பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஏதோ சேதி சொல்கிறார். மீண்டும் பிரிவினை பேசுகிறார்’ என்று நாலாப்புறமும் இருந்து கருணாநிதியை நோக்கி விமர்சனங்கள் வருகின்றன.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் திராவிடக் கொள்கைகள் சீரழிந்து போகும் என்றும் அண்மையில் முதல்வர் பேசியிருக்கிறார். தேர்தல் நெருங்கிவிட்டால், கூட்டணிக் கட்சிகளைப் பயமுறுத்த இப்படியெல்லாம் பேசுவது அவரது வழக்கம்தான்’’ என்றார்.

இதுகுறித்து தேசிய முற்போக்குத் திராவிட கழக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பேசினோம்.

‘‘தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா செய்த 1.76 லட்சம் கோடி ஊழல் இன்று லண்டன், நியூயார்க், வாஷிங்டன் பத்திரிகைகளில் கேவலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதிலிருந்து தப்பிக்க பழைய பிரிவினைவாதத்தைக் கையில் எடுக்கிறார். உண்மையில் எந்தக் கொள்கைப் பிடிப்பும் கருணாநிதிக்குக் கிடையாது. சுயநலம் ஒன்றுதான் அவரது குறிக்கோள்.மனுதர்மம், பிரிவினை குறித்துப் பேசினால் பத்திரிகைகள்,ஊடகங்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும்.

மக்களின் கவனத்தை இமாலய ஊழலில் இருந்து திசை திருப்புவதே அவரது நோக்கம்’’ என்றார் பண்ருட்டியார்.

பா.ஜ.தமிழ் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கள் கொஞ்சம் சூடாக இருந்தது.

‘‘44 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஏமாற்று வேலையை இப்போதும் கருணாநிதி செய்ய நினைக்கிறார். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு முழுக்க முழுக்க தி.மு.க.தான் பொறுப்பேற்க வேண்டும்.மலேசிய சிறைகளில் தவிக்கும் தமிழர்களின் துயர் துடைக்கவும் இவர் எதுவும் செய்யவில்லை.

தமிழருக்குப் பெருமை சேர்த்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமை செம்மொழி மாநாட்டுக்கு கருணாநிதி அழைக்க வில்லை.தமிழர்களுக்கு அவர் செய்த துரோகங்களை மறைக்கவே செம்மொழி மாநாட்டை நடத்தினார்.

மொழியின் பெயரால் இளைஞர்களைத் தூண்டிவிட அவர் நினைத்தால், அது அவருக்குத்தான் ஆபத்தாக முடியும்’’என்று ஆவேசப்பட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்.

பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணனிடம் கருணாநிதியின் பேச்சு குறித்து கேட்டோம்.

‘‘மத்திய அரசால் தமிழ்த் தேசிய இனமும் அடக்குமுறைக்கு ஆளாகி வருகிறது.தமிழக முதல்வர் தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கப்படுவதை முழுமையாக ஏற்றுக் கொண்டு இப்படிப் பேசியிருக்கிறாரா அல்லது தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாகப் பேசியிருக்கிறாரா என்று தெரியவில்லை. உண்மையிலேயே தமிழ்த் தேசிய இனத்திற்காக முதல்வர் பேசியிருந்தால் தமிழ்நாட்டு மக்களும், திராவிட இயக்கங்களும் அவருக்குப் பின்னால் நிற்கத் தயாராக இருக்கிறார்கள்’’ என்றார்.

ஆனால் பொதுவான சிலரோ, ‘‘கூட்டணி பேரத்துக்கு பணிய வைக்கும் பேச்சு. காங்கிரஸை பணிய வைக்க கருணாநிதி அடிக்கும் ஸ்டண்ட்தான் இது’’ என்றனர்.

‘‘தேர்தல் வருவதற்குள் தமிழ் மீதும், தமிழ் இனம் மீதும் இன்னும் எவ்வளவு பாசத்தைப் பொழியப்போகிறார் பாருங்கள். எத்தனை வருஷமா கருணாநிதியைப் பார்த்துக்கிட்டு இருக்கோம்.தேர்தலுக்குப் பிறகு எல்லாத்தையும் மறந்து, மத்திய அரசுடன் உறவுக்கு கை கொடுப்பார்.

உரிமைக்கு மட்டும் குரல் கொடுக்க மாட்டார்’’என்கின்றனர் ம.தி.மு.கவினர்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

http://www.thedipaar.com/news/news.php?id=21481

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.