Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்தாலும் தடைகளும், சுய தணிக்கையும் தொடர்கிறன

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காவில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்தாலும் தடைகளும், சுய தணிக்கையும் தொடர்கிறன

இலங்கையில் நிலவுகின்ற நிலைமைகள் தொடர்பில் சுதந்திரமாகச் செய்தி சேகரித்து வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்துவதாகவும் புதியவகைத் தணிக்கையைத் திணிப்பதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறைந்திருக்கின்றபோதும் ஊடகவியலாளர்கள் தாம் நினைத்ததை எழுதும் நிலை தோன்றவேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் தடுக்கிறார்கள் என்றும் அந்த அமைப்புக் குற்றம் சுமத்தியிருக்கிறது.

இலங்கையில் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் தங்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலிலிருந்து தப்புவதற்காக புலம்பெயர் நாடுகளில் அடைக்கலம் புகுந்த பத்திரிகையாளர்களின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் இது இலங்கையின் ஊடகத்துறையில் பாரிய வீழ்ச்சினை ஏற்படுத்தியிருப்பதாகவும் அந்த அமைப்புக் கூறுகிறது.

2011ம் ஆண்டிலாவது நாட்டில் ஊடக சுதந்திரம் நீடித்து நிலைக்கும் வகையிலான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபடும் எனத்தாம் நம்புவதாக அந்த அமைப்பு தனதறிக்கையில் கூறியிருக்கிறது.

இதற்கமைய இலங்கை அரச அதிகாரிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவினை படுகொலை செய்தவர்கள் யாரோ அவர்கள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்றும் கடந்த ஜனவரியில் காணாமற்போன அரசியல் கேலிச்சித்திரம் வரைபவரான பிரகீத் எக்லினிகொடவின் நிலை என்னவெனக் கண்டறியப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு பி.பி.சி உள்ளிட்ட பத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்குச் சிறிலங்கா அரசாங்கம் நேற்றையதினம் தடை விதித்திருக்கிறது.

தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடமிருந்து ஊடகவியலாளர்கள் முன்னனுமதி பெறவேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 700க்கும் அதிகமானவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பூசா முகாமில் சித்திரவரை மற்றும் நீதிக்கும் புறம்பான காணாமற்போதல்கள் தொடர்வதாக அண்மையில் மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு பி.பி.சி நிறுவனத்திற்கு முன்னரும் தடைவிதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஓகஸ்ட்டில் வடக்கே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த ஆணைக்குழுவின் அமர்வுகளில் கலந்துகொண்டு செய்தி சேகரிப்பதற்கு பி.பி.சி செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகை மற்றும் சண்டே ரைம்ஸ் என்ற ஆங்கில வார இதழ் ஆகியன போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற கட்டாயக் காணமற்போதல்கள் தொடர்பான செய்திகளை அண்மையில் வெளியிட்டிருந்தன.

தற்போது தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பான முழுமையாக தகவல்கள் எதனையும் சிறிலங்கா அரசாங்கம் ஊடகங்களுக்கு வழங்க மறுத்துவருகிறது.

தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களது எண்ணிக்கை தொடர்பாக ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை ஒவ்வொரு அமைச்சும் வழங்கிவருகிறது. இவ்வாறு புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குப் பத்திரிகையாளர்கள் சென்று வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கும் பத்திரிகையாளர்கள் அஞ்சுகிறார்கள்.

‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் சென்று செய்தி சேகரிப்பதற்கு ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களில் பத்திரிகையாளர்கள் பலருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றபோதும், அமர்வுகளின் போது வெளிவரும் போர்க் குற்றங்கள் தொடர்பாக தகவல்களை வெளியிடுவதற்கு இந்தப் பத்திரிகையாளர்கள் துணிவதில்லை. தங்களைத் தாங்களே சுய தணிக்கைக்கு உட்படுத்தவேண்டிய நிலைக்கு இவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்” என கொழும்பினைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஊடக சுதந்திர ஆர்வலர் ஒருவர் கூறுகிறார்.

தமிழ் மாணவர்கள் தேசிய கீதத்தினைச் சிங்கள மொழியிலேயே பாடவேண்டும் என வலியுறுத்திய அரசாங்கத்தின் முடிவு தொடர்பாகக் குறைகூறிய யாழ்ப்பாணக் குடாநாட்டினைச் சேர்ந்த கல்வி அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினையும் இலங்கை ஊடகங்கள் பெரியளவில் வெளியிடாதமை அங்கு காணப்படும் சுய தணிக்கைக் காலாச்சாரத்தின் இன்னுமொரு உதாரணம்.

இதுபோன்ற போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய செய்திகளை வெளியிட்ட ஒரு சில ஊடகங்களும் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தன.

இவற்றுள் ஒன்றான ‘சண்டே லீடர்’ பத்திரிகை பல வகையான இன்னல்களை முகம்கொடுத்து நிற்கிறது. ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் பிறட்றிக்கா ஜேன்சுக்கு எதிராக அதிபர் மகிந்தவின் சகோதரர் கோத்தபாய சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

இலங்கையில் பிரதான கைத்தொலைபேசி வலையமைப்பான டயலொக் 2010ம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான குறுந்தகவல்கள் தனது சேவையூடாக அனுப்பப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்தது.

டயலொக் கைத்தொலைபேசிப் பாவனையாளர்கள் குறித்த சில செய்தி நிறுவனங்களின் செய்திகளைக் குறுந்தகவல்கள் ஊடாகப் பெறமுடியும். இதனூடாக அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை அனுப்பமுடியாது என்ற நிலைப்பாட்டினை டயலொக் எடுத்திருந்தது. இதன்காரணமாக தங்களது செய்திகளைத் தணிக்கைக்குட்படுத்தியே டயலொக் வழியாக அனுப்புவதற்கு செய்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டன.

ஊடகங்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவது முற்று முழுதாக நின்றுவிடவில்லை. ‘எம் ரி.வி’ மற்றும் ‘சிரச தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் மற்றும் லங்கா ஈ நியூஸ் செய்தித்தளத்தின் செய்தியாளர்கள் அண்மையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்டிருந்தார்கள்.

கடந்த ஒக்ரோபரின் நடுப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாகச் செய்தி கேகரிக்கச்சென்ற ‘டெய்லி மிறர்’ பத்திரிகையின் ஒளிப்படப்பிடிப்பாளர் உள்ளிட்ட நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

http://meenakam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.