Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி வானூர்தி நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் விரைவில் ஆரம்பம் – இந்தியத் தூதுவர் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, January 22nd, 2011 | Posted by admin

பலாலி வானூர்தி நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் விரைவில் ஆரம்பம் – இந்தியத் தூதுவர் தகவல்

பலாலி இராணுவ வானூர்தித்தளத்தை பொதுமக்கள் வானூர்தி நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வர்த்தக கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் இந்தியா அக்கறையுடன் உள்ளது.

இதற்காக பலாலி வானூர்திப்படைத் தளம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

தலைமன்னார் படகுச்சேவையை மீள ஆரம்பிப்பதற்காக இராமேஸ்வரம் இறங்குதுறையை இந்தியா புனரமைப்பு செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தப் புனரமைப்பு வேலைகள் முடிவடைய மூன்று நான்கு மாதங்கள் தேவைப்படும்.

கொழும்பு – தூத்துக்குடி இடையிலான படகுச் சேவையை ஆரப்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு கடந்த மாதம் செய்து கொள்ளப்பட்டது.

இந்தச் சேவை மார்ச் மாதமளவில் ஆரம்பமாகும்.

இந்த சேவை இரு நாடுகளையும் சேர்ந்த சாதாரண மக்கள் பயணம் செய்வதற்கு வசதியாக அமையும்.

இதன் காரணமாக இருதரப்பு உறவுகள் மேலும் பலமடையும்.

காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இந்தியா நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

இதற்கான வேலைகள் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=2112

Saturday, January 22nd, 2011 | Posted by admin

பலாலி வானூர்தி நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் விரைவில் ஆரம்பம் – இந்தியத் தூதுவர் தகவல்

பலாலி இராணுவ வானூர்தித்தளத்தை பொதுமக்கள் வானூர்தி நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=2112

அப்ப கொழும்புக்கு போகாமல் நேரடியாக நல்லூர் திருவிழாவுக்குன் போகலாம் என்றீயள்......ஜெய் கிந்..... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.