Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஒஸ்திரேலிய வில்வூட் ஈழத்தமிழர் ஒருவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jan 24, 2011 / பகுதி: செய்தி /

உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஒஸ்திரேலிய வில்வூட் ஈழத்தமிழர் ஒருவர்

ஒஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள வில்லாவுட் தடுப்பு முகாமில், கதிர் என்ற புனைப்பெயரை கொண்ட ஈழத்தமிழர் கடந்த ஐந்து வாரங்களாக உணவுத்தவிரப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்முடைய ஏதிலி உரிமை கோரிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தமிழர் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

கதிர், 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் தமது இரண்டு சகோதரர்களை இழந்துள்ளார். இதில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஸ்ரீலங்காப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவராவார்.

1990 ஆம் ஆண்டு கதிரின் தந்தை கடத்திச்செல்லப்பட்டார். இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவரவில்லை

இந்தநிலையில் 2009 ஆம் ஆண்டு 193 ஏதிலிகளுடன் ஒஸ்திரேலிய சென்ற படகின் மூலம் கதிரும் ஒஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

இவருடன் படகில் சென்ற 193 பேரில் 188 பேருக்கு ஒஸ்திரேலியாவில் ஏதிலி உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஒஸ்திரேலியாவின் சமூகத்துடன் இணைவதற்கு அந்த நாட்டின் புலனாய்வுத்துறை விடுகை அனுமதியை ஏதிலி ஒருவர் பெறவேண்டும்.

எனினும் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கதிர், தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இன்னமும் அந்த அங்கீகாரத்தை பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டிருந்த குறிப்பாக அவர்களின் கீழ் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்.

2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான போர் நிறுத்த காலத்தில் பணியாற்றியவர்களும் இந்த குற்றத்துக்குள் அடக்கப்படுவதாக ஒஸ்திரேலிய மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

2009 ஆம் ஆண்டு ஒஸ்திரேலியாவின் குடிவரவு திணைக்களம், “கதிரை” உண்மையான ஏதிலியாக ஏற்றுக்கொண்டது.

எனினும் புலனாய்வுப்பிரிவு அவருக்கு விடுகை அனுமதியை வழங்கவில்லை. இருப்பினும் அவரை நாடு கடத்த முடியாது என்பதே “கதிர்” தரப்பு மனித உரிமை அமைப்புகளின் நிலைப்பாடாக உள்ளது.

ஸ்ரீலங்காப் படையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அடையாளங்கள் “கதிரி”ன் உடலில் காணப்படுவதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குண்டு வெடிப்பொன்றில் தமது கைவிரல் ஒன்றையும் கதிர் இழந்துள்ளார். இந்தநிலையில் தொடர்ந்து 7 வது நாளாக உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் கதிர், இதுவரை 20 கிலோ வரை நிறைக்குறைந்துள்ளார்

தமக்கு எதிரான வழக்கை மீண்டும் தொடர்வதில்லை என ஒஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் உறுதியளிக்கும் வரை தாம் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கதிர் குறிப்பிட்டுள்ளார்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.