Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவில் சமூகத்தில் ஏன் இராணுவத்தினரது அதிகரித்த பிரசன்னங்கள்?

Featured Replies

சிவில் சமூகத்தில் ஏன் இராணுவத்தினரது அதிகரித்த பிரசன்னங்கள், இராணுவத்தினர் ஏன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியாவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபருடன் கலந்துரையாடினர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே இந்தக் கேள்விகள் எழுந்தன. தற்போதைய யாழ்.மாவட்டத்தின் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காகவே மேற்படி 14 பேர்கொண்ட குழுவினர் நேற்று இங்கு வருகைதந்தனர்.

அரச அதிபருடன் குழுவினர் கலந்துரையாடிய வேளையில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும், மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அரச அதிபர் விளக்கிக் கூறினார். அத்துடன் இதுவரை மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டமை தொடர்பான விவரங்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மந்தமான கண்ணிவெடி அகற்றலினால் தாமதமடைவதாகவும், கண்ணிவெடி அகற்றுவதற்குப் போதிய ஆளணி மற்றும் நிதிவளம் இல்லையெனவும் அரச அதிபர் அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.அத்துடன் தற்போது எழுந்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் அதனால் எமது யாழ்ப்பாணத்து மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அரச அதிபர் எடுத்துரைத்தார்.

இராணுவத்தினர் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அரச அதிபர் நாங்களும் அரசாங்க ஊழியர்கள். இராணுவத்தினரும் அரசாங்க ஊழியர்கள் மக்களுக்குச் சேவைசெய்யவேண்டிய கடப்பாடு இருப்பதனால் அவர்கள் தமது திட்ட நடைமுறைகளைத் தமக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்துகின்றனர் என்றார்.

மக்களுக்கு இவ்வாறான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டபோதும் மக்களின் வருமான மட்டம் அதிகரிக்கவில்லை என்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.இதற்குப் பதிலளித்த அரச அதிபர் “மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டபோதும்” ஏனைய உட்கட்டுமான வசதிகள் விருத்தியடையவில்லை. வீதிகள் திருத்தப்படவில்லை. அவற்றைவிட உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது என்று பதிலளித்தார்.

ஏனைய பகுதிகளையும் விட யாழ். மாவட்டத்துக்கு எவ்வாறு அதிக நிதி கிடைக்கின்றது என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அரச அதிபர் எமது பிரதேசத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அதிகளவான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன கடனுதவிகளை வழங்கிவருகின்றன என்றார்.

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் ஏன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இது தேர்தல் ஆணையாளரால் எடுக்கப்பட்ட முடிவு. இது தொடர்பில் என்னால் ஒன்றும் கூறமுடியாது என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மாவட்ட செயலகத் திட்டமிடல் கிளையைச் சேர்ந்த பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இ.மோகணேஸ்வரன், ஐரோப்பிய நாடாளுமன்ற குழு சார்பில் தலைமையாளராக ஜீன் லம்பேட், ஜோன் அர்ராட் மொன்ரல்ரோ, தோமஸ்மான், லிடாஜோனா, நிக்கோலா ரிஷாட்டி, சிலாலி, நிராஜ்டேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://www.alaikal.com/news/?p=58355

  • தொடங்கியவர்

மேற்படி கலந்துரையாடல், ஐரோப்பிய ஒன்றியம் கேட்ட கேள்விகள் பல உண்மைகளை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதை காட்டுகின்றன. முக்கியமாக தமிழர் தாயகத்தில் இராணுவ ஆட்சியே நடக்கின்றது என்றும் மக்கள் தாமாக, சுதந்திரமாக எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது என்பதும்.

அங்கு இராணுவ கெடுபிடிகள் தொடரும் பொழுது தமது நாடுகளில் அகதி கோருபவர்கள் தொடருவார்கள் என்பது ஒருபுறம் இருக்க, உண்மையான ஒரு அரசியல் தீர்வுக்கு சிங்களத்தை ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இராசதந்திர ரீதியா அழுத்தம் கொடுக்குமா என்பதே தமிழர் எதிர்பார்ப்பாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.