Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்க அரசின் இனவெறி முகம்

Featured Replies

சிறிலங்க அரசின் இனவெறி முகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், ஈழத் தமிழர்களால் தங்களின் தேசியத் தலைவராக மதிக்கப்படுபவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் சடலம் எரிக்கப்பட்ட சிதையில் நாய்களை கொன்று போட்டு எரித்த சிறிலங்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, சிறிலங்க அரசின், சிங்கள அரசியலின் இனவெறி முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

மறைந்த பார்வதி அம்மாளின் உறவினர்கள், சிதையில் இருக்கும் சாம்பலைக் கொண்டு இறுதிச் சடங்கை செய்ய வந்து பார்த்தபோது, அதில் கொல்லப்பட்ட நாய்களின் எரிந்த சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர். சிறிலங்க இராணுவத்தின் இந்த ஈனச் செயல் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பார்வதி அம்மாள் இறந்துவிட்ட செய்தி பரவியதும், யாழ்ப்பாணத்து மக்கள் அவருக்கு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்த திரண்டபோது, அவர்களை சிறிலங்க இராணுவமும், காவல்துறையினரும் தடுத்துள்ளனர். மறுநாளும் பொது மக்கள் எவரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

இறுதி ஊர்வலத்தின் போதும் அதில் கலந்து கொள்ள வந்த மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது. ஆயினும் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறட்டும் என்பதால் மக்கள் அமைதி காத்துள்ளனர். யாழ் பல்கலை மாணவர்களும் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே தங்களின் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தை சிதையில் நாய்களை கொன்று வீசி எரியச் செய்து வெளிப்படுத்தியுள்ளனர் சிறிலங்க இராணுவத்தினர்.

இந்த இழி செயலை சிறிலங்க அரசோ அல்லது அதிபர் மகிந்த ராஜபக்சவோ கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. இவர்தான் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட பாடுபடுவதாக கொழும்புவில் இருந்து பேசிக்கொண்டிருக்கின்றார்!

பார்வதி அம்மாளின் சிதையில் நாய்களைக் கொன்று போட்டதால் அவருக்கு எந்த அவமரியாதையும் ஏற்படப்போவதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கையில் சிறிலங்க இராணுவம் ஈடுபடுவதும் முதல் முறையில்லை. தமிழருக்கு எதிரான இனப் படுகொலை போர் நடந்தபோது சிறிலங்க படையினருடன் நடந்து போரில் வீர மரணமடைந்த விடுதலைப் புலிகள் இயக்கதின் பெண் போராளிகளின் பிணத்தை புணர்ந்த ‘நாகரீக’ படையினர் அல்லவா சிறிலங்க இராணுவத்தினர். தாங்கள் புணர்ந்த பெண் போராளிகளின் படங்களை எடுத்து அதனை தங்களுக்குள் பரிமாறி மகிழ்ந்தவர்கள்தானே இந்தப் படையினர்!

போர்ப் படையோடு எந்த தொடர்பும் அற்ற ஊடகவியலாளரான இசைப் பிரியாவை வன்புணர்ச்சி செய்து கொன்று அதனையும் படம் பிடித்த அயோக்கியர்கள் அல்லவா சிறிலங்க படையினர். போருக்கு பிறகு தமிழர்களின் சமயத் தலங்களை திட்டமிட்டு அழித்து, அந்த இடத்தில் அரச மரத்தை நட்டு, அதன் பக்கத்தில் ஒரு புத்தரின் சிலையை வைத்து, தங்களின் மதத்தை பரப்பிவரும் பெளத்த புக்குகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் ஒரு ‘சோசலிச, ஜனநாயக’ அரசின் படைகளின் யோக்கியதை வேறு எப்படியிருக்கும்?

தங்களுடைய ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழ் மண்ணில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள் அனைத்தையும் அழித்து, ஊர்களின் பெயர் பலகைகளை அழித்தொழித்து, சிங்களத்தில் புதிய பெயர் சூட்டி, தமிழர் பகுதி என்கிற அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டு ஈடுபட்டுவரும் ஒரு அரசின் படையிடமிருந்து நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா? “எதிர்பார்க்காதீர்கள், எங்கள் குணம் மாறாதது” என்பதையே பார்வதி அம்மாளின் சிதையை அவமதித்த அவர்களின் ஈனத்தனமான நடவடிக்கை நிரூபித்துள்ளது.

சிறிலங்க இராணுவத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிறிலங்க அரசின், அதன் தலைவர்களின் உண்மையான அரசியல் முகத்தை வெளிக்காட்டும் அத்தாட்சிகளாகும். தமிழின எதிர்ப்பு என்பதே சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படை. சிலோன் என்றழைக்கப்பட்ட லங்கா விடுதலைப் பெற்ற நாள் முதல் சிங்களவர்களின் தலைவர்களாக வந்த சேனநாயகே, பண்டாரநாயகே, டட்லி சேனநாயகே, சிறிமாவோ பண்டாரநாயகே, ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, சந்திரிகா குமாரதுங்கா, பிரேமதாசா, மகிந்த ராஜபக்ச என்ற அனைவரும் தமிழின எதிர்ப்பு அரசியலை நடத்தித்தான் தங்களின் சிங்கள பெளத்த அபிமானத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதன் பிரதிபலிப்பே தமிழர்கள் கொல்லப்படுவதும், தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும், தமிழர்களின் சமயத் தலங்கள் சிதைக்கப்படுவதும், அடையாளங்கள் அழிக்கப்படுவதுமாகும்.

இதனையெல்லாம் எதிர்த்து, தடுத்து நிறுத்தி, தங்களையும், தங்கள் மண்ணையும் காத்துக்கொள்ளவே ஆயுதம் ஏந்தி ஈழத் தமிழர்கள் போரிட்டனர். ஆனால் அதனை அண்டை நாடான இந்தியாவின் உதவியோடு பயங்கரவாதமாக சித்தரித்து அழித்தொழித்தது சிங்கள பெளத்த இனவெறி அரசு.

தங்களுடைய ‘அண்டை நாட்டு அரசியலிற்காக’ இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசை தெற்காசிய வல்லாதிக்கங்களான இந்தியாவும், சீனாவும் ஆதரித்ததே இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனங்கள் இன்றளவும் தொடர காரணமாகும். இந்திய, சீன அரசுகளின் பூகோள- பொருளாதார அரசியல் ஈழத் தமிழினத்தின் முழுமையான அழிவிற்கு வித்திட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால், தன்னையும், தனது பண்பாட்டையும், பாரம்பரிய மண்ணையும் காப்பாற்றிக்கொள்ள ஈழத் தமிழர்கள் நடத்திவரும் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலக சமூகம் புரிந்துகொள்ள இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிச்சயம் உதவும். பார்வதி அம்மாளின் சிதையை அவமதித்ததன் மூலம் வெளி்ப்பட்ட சிறிலங்க அரசின் இனவெறி முகத்தை உலக நாடுகளும், ஐ.நா.வும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1102/25/1110225071_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.