Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

Featured Replies

சிறிலங்கா அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கதத்தின் இம் முடிவு குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையையே சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு பிற்போட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது இச் சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

இந் நிலையில், சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால் இச் சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அடுத்த சந்திப்பு உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னரே நடைபெறும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் இக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து விசனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசாங்கம் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த முடியும் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை மட்டும் ஏன் நடத்த முடியாது என்று கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரோ அல்லது நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னரோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை நடத்த முடியும்.

பேச்சுவார்த்தைகளை திகதி குறிப்பிடாமல் பிற்போடுகின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி கொண்டுள்ளது' என இக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து பேசவுள்ளதாக சுமந்திரன் முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={150A46D5-63AA-47B6-8761-0ABB5E0D83AB}

  • தொடங்கியவர்

அரசு - கூட்டமைப்பு சந்திப்பில் வெளிப்படைத் தன்மை இல்லை! - கொழும்பு தமிழ் ஊடகம்

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மை இல்லை என கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று விசனம் தெரிவித்துள்ளது.

இச் சந்திப்புக்கள் தொடர்பான விபரமான தகவல்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரும் வெளியிடுவதில்லை எனவும், அவ்வாறு கேட்டால் அத் தகவல்களை வெளியிட அவர்கள் மறுப்புத் தெரிவிப்பதாகவும் இவ்வூடகம் குற்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்ற இப் பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை தமிழ் மக்களே அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு இப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக இல்லை என இவ்வூடகம் கவலை தெரிவித்துள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இச் சந்திப்பில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஏற்பாட்டுக்கு அமைய இடம்பெற்று வருவதுடன் அரசாங்க தரப்பில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ் மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={BB1620BC-9644-48B7-9D53-FEB8C814317C}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.