Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம். கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கி நிற்கும் இலங்கை அரசு

[Monday, 2011-02-28 05:10:37]

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 16வது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தில்இலங்கை்கு எதிரான மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் நோக்கில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க கடந்த வெள்ளியன்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து இலங்கை நிலைமைகள் குறித்து விபரித்துள்ளார்.

இது இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை வலுவற்றதாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவே கருதப்படுகிறது.

இலங்கைத் தரப்புக் குழுவுக்குத் தலைமையேற்று ஜெனிவா சென்றுள்ள அவர், இன்று காலை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை நிலைமைகள் குறித்து உரையாற்றவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கை சார்பில் பங்கேற்கும் குழுவில் வெளிவிவகாரச் செயலர் றொமேஸ் ஜெயசிங்கவும், சட்டமா அதிபர் மொகான் பீரிசும் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.நா பொதுச்செயலரை இரகசியமாகச் சந்திக்க கடந்தவாரம் நியூயோர்க் சென்றிருந்த இவர்கள் அங்கிருந்து ஜெனிவா சென்றுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 16வது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 25ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடத்த சில ஐரோப்பிய நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

2009ம் ஆண்டில் இதுபோன்ற குற்றச்சாட்டு பிரேரணை ஒன்று விவாதத்துக்கு வந்த போது அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை அரசதரப்புக் குழு நட்பு நாடுகளின் துணையுடன் அதை முறியடித்திருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டே அமைச்சர் மகிந்த சமரசிங்கவை இலங்கை அரசாங்கம் ஜெனிவா அனுப்பியுள்ளது.

seithy.com

ஐ. நா. தனது அங்கத்துவரான லிபியாவை, அது அங்கத்துவரல்லாத சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) பரிந்துரை செய்துள்ளது. இது மனித உரிமை மீறல்களை இன்றும் உலகம் மதிக்கின்றது என்பதை காட்டுகின்றது. அத்துடன் மனித உரிமை ஆர்வலர்களுக்கு புத்துணர்ச்சியையும் தந்துள்ளது. இது தமிழர் மனித உரிமை மீறல்களையும் மதித்து ஒரு நீதியை பெற்றுத்தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.