Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவின் பழிவாங்கல் நடவடிக்கையே விமானப் படைத்தளபதியின் ஓய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவின் பழிவாங்கல் நடவடிக்கையே விமானப் படைத்தளபதியின் ஓய்வு

* Tuesday, March 1, 2011, 2:40

விமானப் படைக்கு 60 வருடம் நிறை வடைந்தமையை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுக்கு 3 தினங்கள் இருக்கும் நிலையில் அதன் தளபதியாக இருந்த ஏயார் சீப் மார் ­ல் ரொஷான் குணதிலக நேற்று ஓய்வு பெற் றுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள் ளப்பட்டுள்ளார்.

இது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பழிவாங்கலின் ஓர் அங்கம் என விமானப் படை உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 4ஆவது ஈழ யுத்தத்தின்போது வான் படைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். இவ் வாறான பழிவாங்கல் முன்னர் சரத் பொன் சேகாவுக்கும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவிருந்த சந்தர்ப்பம் பறிக்கப்பட்டு சரத்பொன்சேகா கூட்டுப் படைத்தளபதியாக்கப்பட்டார். இராணுவத்தின 60ஆம் ஆண்டு நிகழ்வு நடைபெறும் வரைக்கும் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நீடிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. எனினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதற்கு இணக்கம் தெரிவிக்காமையிலேயே அவரைப் பதவி மாற்றம்செய்தார்.

இவ்வாறான ஒரு நிலையே வான் படைத் தளபதிக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரொஷான் குணதிலக கூட்டுப்படைத் தளபதியாக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி எவ் வித அதிகாரமும் அற்ற பதவியாகும். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதியாகச் செயற்படுமாறு ரொஷான் குணதிலகவை, கோத்தபாய ராஜ பக்ச கேட்டுக்கொண்ட போது, அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கோத்தபாயவிற்கும் ரொஷான் குணதிலகவுக்கு மிடையில் முறுகல் உருவானது. இந்நிலையில் புதிய விமானப்படைத்தள பதியாக ஹர்சா அபேவிக்கிரம நேற்றுப் பொறுப் பேற்றுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரி விக்கின்றன.

http://www.tamilthai.com

Edited by கறுப்பி

இந்த செய்திக்கும் இன்று நடந்த விமான "விபத்திற்கும்" கூட தொடர்பு இல்லாமல் இருக்கலாம் இல்லை உள்சதி வேலையாகவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.