Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களை உடன் விடுதலை செய்க: நாம் இலங்கையர் அமைப்பு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களை உடன் விடுதலை செய்க: நாம் இலங்கையர் அமைப்பு கோரிக்கை

[Tuesday, 2011-03-01 03:48:57]

புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வருடக்கணக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்கும்படி நாம் இலங்கையர் அமைப்பு நேற்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக நாம் இலங்கையர் அமைப்பு கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல்பிரேமரட்ன மேலும் கூறியவை வருமாறு:

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 120 புலிச்சந்தேக நபர்களில் 15 பேருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. அதே போன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 55 புலிச் சந்தேகநபர்களில் 9 பேருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை.

இந்த அப்பாவிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் சுமார் 400 தடவைகள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.கிளிநொச்சியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 18 வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எதுவிதக் குற்றமும் இழைக்காத மகேந்திரன் 18 வருடங்களாகச் சிறையில் உள்ளார்.

ஆயுதம் ஏந்திய குற்றத்துக்காக 18 வருடங்களாக சிறையில் உள்ள மகேந்திரனைப் போன்று பலர் இன்னும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுவிப்பதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

www.seithy.com

வலுவான சட்ட நடவடிக்கைதான் சிங்களத்தை நடுங்கவைக்கும். இப்படியான சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறும் சிங்களம் மீது சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்படல் வேண்டும். நாம் சிங்கள தலைவர்களுக்கு எதிராக அந்தந்த நாடுகளில் இனியும் தாமதிக்காமல் வழக்கு பதிதல் அதில் ஒரு வழியாக அமையலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.