Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அமைச்சர், அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அமைச்சர், அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

வியாழக்கிழமை, 03 மார்ச் 2011 12:02

முக்கிய அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்கப் பயணத்துக்கான விசா வழங்குவதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்திகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியான ஆர்னோல்ட் கிளாசிக்ஸ் ஆணழகன் போட்டியில் பங்குபற்றுமாறு இலங்கையின் முன்னணி ஆணழகன் பிரசன்ன பீரிஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 2010ம் வருடம் நடைபெற்ற மிஸ்டர் வோ்ல்டு ஆணழகன் போட்டியில் பிரசன்ன பீரிஸ் வெற்றி பெற்றிருந்ததன் காரணமாகவே அவருக்கு போட்டி ஏற்பாட்டாளர்களிடமிருந்து அந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அதனை காரணமாக வைத்து அமைச்சர் ஒருவர் மற்றும் விளையாட்டுக் களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தது. அதற்கென விளையாட்டு அமைச்சகத்தின் அனுமதிக் கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் விசா தொடர்பான நோ்முகத் தோ்வின் போது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அமைச்சர் உள்ளிட்ட அனைவரதும் விசா விண்ணப்பத்தையும் அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sangamam.com

இலங்கை ஆணழகன் பிரசன்ன பீரிஸ் உடன் இணைந்து அமெரிக்கா செல்வதற்கு அமைச்சர் முரளிதரனும் விண்ணப்பித்திருந்தார். அமைச்சரின் விசா விண்ணப்பம் காரணமாகவே விளையாட்டு வீரருக்கான விசாவும் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் தன் அந்தரங்கச் செயலாளரான தில்ருக்ஷி பெரேராவையும் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆணழகன் போட்டிகளில் அமைச்சர் மற்றும் அவரது அந்தரங்கச் செயலாளருக்கு சிறிதும் தொடர்புகள் இல்லாமை மற்றும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பவங்களில் அமைச்சர் முரளிதரனுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதைக் காரணம் காட்டி அமெரிக்கத் தூதரகம் அவர் மற்றும் அவரது அந்தரங்கச் செயலாளரின் விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=385104&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.