Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த பத்திரிகையாளர் ரி.சபாரத்தினத்தின் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த பத்திரிகையாளர் ரி.சபாரத்தினத்தின் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பு!

Posted by admin On March 6th, 2011 at 4:25 pm / No Comments

நன்கு அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ரி.சபாரத்தினம் அமரத்துவம் அடைந்தமை பத்திரிகை உலகிற்கு பேரிழப்பாகும் என்று இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் சிங்கள தமிழ் ஆங்கில ஊடகங்கள் எவ்வாறு மொழிப் பிரயோகத்தை கையாள வேண்டும் என்று ஆலேசாணைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தவேளை சபாரத்தினம் இயற்கை மரணமடைந்தமை ஊடகத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்றும் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு விபரம் வருமாறு -

சபாரத்தினம் டெய்லி நியூஸ் பத்திரிகையின் முன்னாள் செய்தியாசிரியராகவும் தினகரன் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார். யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருடைய பத்திரிகைப் பணி மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

அரச ஊடகங்களில் இருந்து கொண்டு தனது சமூகத்துக்கான கண்ணோட்டத்துடன் பணியாற்றுவது இலகுவான காரிமல்ல. ஆனாலும் சபரத்தினம் தனது பத்திரிகை துறையின் அனுபவத்தின் ஊடான சாணக்கியத்தின் மூலமாக பல விடயங்களை வெளிக்கொணர்ந்த பெருமைக்குரியவராவார்.

இலங்கையில் இதழியல் கல்லூரி 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்போது அன்று முதல் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் இறக்கும்வரை அந்த கல்லூரியின் கற்பித்தல் செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

புத்திரிகைகளில் மொழிகள் எப்படி கையாளப்பட வேண்டும் என்பது தொடர்பாக அவர் பல கட்டுரைகளை எழுதியதுடன் இதழியல் தொடர்பாக இலங்கை இதழியல் கல்லூரியினால் வெளியிடப்பட்ட நூலின் ஆசிரியராகவும் செயற்பட்டார்.

பத்திரிகை ஆசிரியர் சங்கம் வருடவருடம் வழங்கிவரும் ஊடக விருதுகளுக்கான தெரிவுக்குழுவின் உறுப்பினராகவும் சபராத்தினம் திகழ்ந்தார். பத்திரிகை பணியில் இருந்து ஓய்வு பெற்றபின்னரும் சபாரத்தினம் பல அங்கில இணையத் தளங்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் செய்திகளையும் ஆக்கங்களையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

சிங்கள அங்கில மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுடன் நெருங்கிய உறவுகளை பேணி வந்த சபாரத்தினம் தமிழ் பத்திரிகை உலகுக்கு மாத்திரம் அல்ல ஆங்கில பத்திகைத்துறைக்கும் ஒரு நிபணராக விழங்கினார்.

இலங்கையின் ஊடகத்துறை வராலற்றில் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற ஊடகவியலாளர்கள் வரிசையில் சபராத்தினம் மகவும் முக்கியமானவர். அவருடைய இழப்பால் துயரடைந்திருக்கும் உறவினர்கள் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் ஒன்றியம் ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

saritham.com

பல பயனுள்ள ஆக்கங்களை மொழிபெயர்த்தும் தந்தவர். எனக்கு பிடித்திருத்த ஒரு ஊடகவியலாளர்.

அன்னாரின் அமரத்துவம் தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு இழப்பே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.