Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு அரசியல் நிலைவரங்களில் கவனம் செலுத்துவது அவசியம்

Featured Replies

வெளிநாட்டு அரசியல் நிலைவரங்களில் கவனம் செலுத்துவது அவசியம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியுறுவதற்கான காரணங்களைப் பலர் பலவாறு கூறலாம். ஆனால் விடுதலைப் போராட் டம் தோல்வியுற்றமைக்கு ‘உலகமயமாதல்’ முக்கிய காரணம் என்பதை நிராகரித்து விடமுடியாது.

விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திற்கும் அதன் முடிபு காலத்திற்குமான நீண்ட இடைவெளிக்குள் உலகில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்களில் உலக மயமாதல் என்ற பெருமாற்றமானது, பயங்கரவாத அமைப்புகள் என்ற பட்டியலுக்குள் அடக் கப்பட்ட விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கு முடிபுகட்ட வழிவகுத்தது. அதன் விளைவை விடுதலைப்புலிகள் அமைப்பும் சந்திக்க நேரிட்டது.

இவற்றின் மத்தியில் இப்போது உலகில் இருக்கக்கூடிய பயங்கரமான ஆட்சிகளை இல்லா தொழிக்கும் படலத்தை அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் ஆரம்பித்துள்ளன. இதன் பூர்வாங்க நடவடிக்கையாக எகிப்திய ஜனாதிபதி முபாரக் பதவி இறக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து லிபிய நாட்டின் அதிபர் கடாபியை வெளியேற்றும் படலம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்களை இல்லா தொழித்த நிலையில், இப்போது அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல், போர்க் குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் விரோதப் போக்குடைய ஆட்சியாளர் களை அதிகாரத்திலிருந்து அகற்றும் நடவடிக் கைகள் அரங்கேறப் போகின்றன. இதனைச் செம்மையாகச் செய்வதற்காக மக்கள் போராட்டம் உசார்ப் படுத்தப்படுகின்றது. அத்தகைய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காகவே கடாபிக்கு எதிராக போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

கடாபியை பயமுறுத்துவதற்காக அமெரிக்கா தனது போர்க் கப்பலை அனுப்பியது என்று நினைத்துக் கொண்டாலும், கடாபி நடந்துகொண்ட முறையானது கடாபியின் படைகள் மீது தாக்குதல் நடத்தும் கட்டாயத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆக, அரச பயங்கரவாதத்ததிற்கு எதிராக ‘உலகமயமாதல்’ திசைதிரும்பியிருக்கும் இவ் வேளையில் தமிழ் அரசியல் தலைமைகள் உலக விவகாரங்களை உன்னிப்பாக அவதானிப்பது மிகவும் நல்லது.

இத்தகைய உலக மாற்றங்களை அறியாது விடுகின்றபோது அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளை நாம் இழந்துவிடவேண்டிய சூழ் நிலை உருவாகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=16971

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.