Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்-சிங்கள புத்தாண்டு தினத்திலாவது எம்மை விடுதலை செய்யுங்கள் – அரசியல் கைதிகள் கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்-சிங்கள புத்தாண்டு தினத்திலாவது எம்மை விடுதலை செய்யுங்கள் – அரசியல் கைதிகள் கடிதம்!

Posted by uknews On March 30th, 2011 at 3:57 am

தமிழ்-சிங்கள புத்தாண்டு தினத்திலாவது எம்மை விடுதலை செய்யுங்கள். அல்லது பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் – என்று கண்டி போகம்பரை சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கண்டி போகம்பரை சிறைச்சாலையில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய நாங்கள், பல தடவைகள் எமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம். இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தற்போதைய சூழலில் எம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது பிணையிலாவது விடுவிக்க எமக்கு உதவி செய்யுங்கள். பல வருடங்களாக எதுவித முடிவுகளும் இன்றி நாம் இருக்கின்ம். எமது குடும்பங்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் கடும் பாதிப்புக்குள்ளாகி பல இழப்புக்களைச் சந்தித்து வருகின்றன.

நீங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற முறையில் எமது விடுதலை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் பரிந்துரை செய்து பிறக்க இருக்கின்ற தமிழ் – சிங்கள புத்தாண்டிலாவது எமது குடும்பங்களுடன் சந்தோஷமாக வாழ்வதற்கு உதவி செய்யுங்கள்.

எமது நாட்டில் தற்போது யுத்த சூழ்நிலை இல்லை தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை அத்துடன் எமது நாட்டில் இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசமென்று ஒன்றில்லை அனைத்து பிரதேசங்களும் அரச நிருவாக பிரதேசமாகக் காணப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில் எமது விடுதலையை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள்? எம்மில் பலர் நாட்டில் அபிவிருத்தி நிலவவேண்டும் என்ற பாரிய சிந்தனை கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

அத்தோடு வெலிக்கடை சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் குழந்தைகளுடன் உள்ள தாய்மார் மிகுந்த துன்பங்களை எதிர்நோக்குகின்றார்கள். அவர்களின் குழந்தைகளின் கல்விநிலை சிதைந்துபோயுள்ளது. அவர்கள் பலவிதமான வியாதிகளுடனும் போஷாக்கு குறைபாடுகளுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். அத்தோடு அங்கவீனர்களாகவும், மனநோயாளிகளாகவும் பல வருடங்களாக எந்தவிதமான முடிவும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதனை இந்தச் சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.

எனவே மேற்கண்ட எமது விடயம் தொடர்பாக அக்கறை காட்டுங்கள். எமது விடுதலையைத் தாமதப்படுத்தாமல் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கடிதத்தை அனுப்பி வைக்கிறோம் – என்றுள்ளது.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.