Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சியில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல்

31 மார்ச் 2011

மக்கள் அண்மையில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட உடுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் படைத்தரப்பு பெரும் எடுப்பிலான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஆயிரக் கணக்கில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் உள்ளேயோ வெளியேயோ செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. வீடுகள் தோறும் படையினர் தமது பதிவுகளை சரி பார்த்த வண்ணம் இருக்கின்றனர் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மக்கள் அண்மையில் குடியேறிய வடமராட்சியின் உடுத்துறையிலும் முல்லைத்தீவின் சில பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் இந்தத் தேடுதல்கள் இடம்பெறுகின்றன. ராணுவப் பவர் கவச வாகனங்கள் சகிதம் ஆயிரக் கணக்கில் படையினர் அதிகாலை முதல் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களே இந்த சுற்றிவளைப்பு தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

கடற்கரை மற்றும் அதனை அண்டிய கிராமங்களை உள்ளடக்கி இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென எமது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியே மீனவர்களின் படகொன்றினை பெற்று கடலுக்குச் சென்ற சிலர் மீளத் திரும்பியிருக்காத நிலையில் அவர்களைத் தேடி இந்த தேடுதல்கள் இடம்பெறலாம் எனவும் அப்பகுதி மீனவ அமைப்புகள் சந்தேகம் கொண்டுள்ளன. எனினும் படையினர் பொதுமக்களின் வீடகளை இலக்கு வைத்து தேடுவதால் தேடுதல் நோக்கம் வேறாக இருக்கலாம் எனவும் திசை திருப்பும் வகையில் இவ்வாறு தகவல்களை கசிய விட்டிருக்கலாம் என சில அவதானிகள் கூறுகின்றனர்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இத்தேடுதல்கள் இடம்பெறுவதை அப்பகுதி மீனவ அமைப்பு உறுதிப்படுதியது. எனினும் முல்லைத்தீவின் எப்பகுதிகளில் சோதனை நடவடிக்கை இடம்பெறுகின்றன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. எனினும் முல்லைத்தீவுப் பகுதியிலும் இதேபோன்று படையினர் பெரும் எடுப்பில் குவிக்கப்பட்டு சோதனைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.