Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கை விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday, 20 April 2011 12:59

ரொபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கை விஜயம்

தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளதாக தூதரக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எதிர்நடவடிக்கைகளை தடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசிப்பார் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அவர் தனது விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எத்தி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

sankathi.com

போர்குற்ற விசாரணைகள், பிளேக் என்ன சொல்லுவார், எப்படி சொல்லுவார் என்பதிலும் அதை சிங்களம் ஏற்றுக்கொள்ளுமா என்பதிலும் ஓரளவுக்கு தங்கியுள்ளது.

சிங்களத்தை ஐ.நா. வின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள பிளேக் கேட்பதுடன் அவ்வாறு இல்லாவிடில் என்ன பின்விளைவுகள் ஏற்படும் எனவும் கூறக்கூடும். மொத்தத்தில் இது ஒரு முக்கியாமான பிரயாணம்.

ரொபேர்ட் ஓ பிளேக்குடன் சந்திப்பைத் தவிர்க்க மகிந்தா முடிவு? - கொழும்பு ஊடகம் செய்தி

கொழும்புக்கு மே மாத ஆரம்பத்தில் விஜயம் செய்யவுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திக்கமாட்டார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் அடுத்த மாதம் 3ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக The Nation எனும் கொழும்பு ஊடகம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. கொழும்பின் மனிதவுரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ரொபேர்ட் ஓ பிளேக் தனது விஜயத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருந்த இவ்வறிக்கையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இக் குற்றச்சாட்டு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொழும்புக்குச் செல்லும் ரொபேர்ட் ஓ பிளேக்கைச் சந்திக்க அவர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இந் நிலையில், இவ்வறிக்கை தொடர்பாக ரொபேர்ட் ஓ பிளேக்கைச் சந்தித்துக் கலந்துரையாடுமாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணித்துள்ளதாக இவ்வூடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் கடந்த மாதமே கொழும்புக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இலண்டனில் தங்கியிருந்த காரணத்தினால் அவரது பயணம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={50AC0565-570B-4E04-AFF6-D3CA1F33F216}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.