Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவினது தவறுக்கு சீனாவையும் ரசியாவையும்தான் குற்றம் சுமத்தவேண்டும் பான் கீ மூனையல்ல

Featured Replies

[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 08:47 GMT ] [ தி.வண்ணமதி ]

சிறிலங்காவில் போர்க் குற்ற விசாரணைகளை விரைந்து முன்னெடுக்கத் தவறியமைக்காக பான் கீ மூன் மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் ரசியாவினையும் சீனாவும்தான் இதற்குக் குறைகூறவேண்டுமே தவிர பான் கீ மூனையல்ல என்றும் அவர் அதிகாரமற்ற ஒருவர் என்றும் ஐ.நாவின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சனல்-4 தொலைக்காட்சியிடம் தெரிவித்திருக்கிறார்.

சிறிலங்காவினது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சீனாவையும் ரசியாவையும் தனது வழிக்குக் கொண்டுவருவதற்குப் பான் கீ மூன் தவறிவிட்டார் என எழுந்து குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐ.நாவின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் பான் கீ மூனின் இயலாத்தன்மையினை நியாயப்படுத்துகிறார்.

மே 2009 ம் ஆண்டு முடிவுக்குவந்த சிறிலங்காவினது போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை விசாரிப்பதற்கான விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் தன்னிடமில்லை என பான் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையினது அனுமதியின்றி தனக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் இதுபோன்றதொரு விசாரணையினை செயலாளர் நாயகத்தினால் முன்னெடுக்க முடியும் என மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது.

இரண்டாவது முறையாகவும் பதவியில் தொடர்வதற்கு விரும்பும் பான் கீ மூன் வீட்டோ அதிகாரத்தினைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபையினது நிரந்தர உறுப்பு நாடுகளான ரசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைப் பகைத்துக்கொண்டு சிறிலங்கா தொடர்பான போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு விரும்பவில்லை எனக் குற்றம் சுமத்தப்படுகிறது.

ஆனால் தற்போது நிலவுகின்ற 'புதிய பனிப்போர் சித்தாந்தங்களின் அடிப்படையில்' மனித உரிமை விடயங்களில் தாராளப் போக்கினைக் கொண்ட மேற்கு நாடுகளும் சீனா மற்றும் ரசியாவுடன் கூட்டாக இணைந்து செயற்படும் நிலைமை அதிகம் விரும்பப்படும் நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் தனித்து முடிவுகளை எடுத்துச் செயற்படுவது முடியாத காரியமே என 2006ம் ஆண்டு கோபி அனானது காலத்தில் ஐ.நாவினது பிரதிப் பொதுச் செயலாளராகச் செயற்பட்ட மார்க் மலொச் பிறவுண் கூறுகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த போரின் இறுதிக்கட்டத்தினபோது 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் என பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழு தனது 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் கூறுகிறது. மருத்துவமனைகளையும் பொதுமக்கள் வாழ்விடங்களையும் இலக்குவைத்துத் தாக்குதல் நடாத்திய சிறிலங்கா இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாக இந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்படுகிறது.

மனித உரிமை அமைப்புக்களதும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களதும் போலியான பரப்புரைக்கு எடுபட்டு வரையப்பட்ட அறிக்கைதான் இது எனக் கூறும் அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நாவின் இந்த அறிக்கைக்கு எதிராக தொழிலாளர் தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று திரளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதுபோன்றதொரு அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமானது என்றும் இல்லையேல் பாதுகாப்புச் சபை இதுபோன்ற நடவடிக்கைக்கு அனுமதி வழங்கவேண்டும் எனப் பான் கீ மூன் கூறுகிறார்.

ஆனால் ரசியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமக்கிருக்கும் வீற்றோ அதிகாரத்தினைப் பயன்படுத்தி இதுபோன்ற விசாரணைக்கான தீர்மானத்தினை முறியடிக்கும் நிலைமையே காணப்படுகிறது.

தனது பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவுக்குவரும் நிலையில் தான் இரண்டாவது முறையாகவும் பதவியில் தொடருவதற்கு ரசியா தனது ஆதரவினை வழங்கவேண்டும் என பான் கீ மூன் கடந்த வாரம் கோரியிருந்தார். "செயலாளர் நாயகமாக நான் எனது பணியினைத் தொடருவதற்கு உங்களது காத்திரமான ஆதரவு, தலைமைத்துவம் மற்றும் வழிநடத்தலை நான் எதிர்பார்த்து நிற்கிறேன்" என பான் கீ மூன் ரசிய அதிபர் மிற்றி மெட்வெடெவிடம் கடந்த வாரம் கூறியிருந்தார்.

ஆனால் பான் தனிப்பட்ட ரீதியில் தனக்கு ஆதரவு கோரவில்லை என்றும் ஐ.நாவினது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறே செயலாளர் நாயகம் ரசியாவிடம் கோரியிருந்தார் எனவும் பான் கீ மூனது பேச்சாளர் ஒருவர் பின்னர் விளக்கம் கொடுத்திருந்தார்.

"தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை இலக்காகக் கொண்டே பான் கீ மூன் செயலாற்றுகிறார். அது அவரது உரிமையும்கூட" என ஐ.நா விடயங்கள் தொடர்பான ஊடகவியலாளரும் நியூயோர்க் பல்கலைக்கழகம் ஒன்றின் விரிவுரையாளருமான ஜோன் ஜே மெல்சர் கூறுகிறார்.

"ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளினதும் நலன்களை செயலாளர் நாயகம் சமப்படுத்திச் செயலாற்றவேண்டும். மனிதாபிமான விடயங்கள் என்று வரும்போது அவர் அதியுச்ச கவனத்துடன் செயற்படவேண்டும்" என இந்த ஊடகவியலாளர் தொடர்ந்து தெரிவித்தார்.

"இரண்டாவது முறையாகவும் ஆட்சியில் தொடர்வதற்கு பான் கீ மூன் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் மனித உரிமை விடயங்கள் என்று வரும்போது அது அரசியல் கண்ணிவயலில் நடப்பதற்கு ஒப்பானது. நாங்கள் இறையாண்மையுள்ள நாடு. எங்களது நாட்டினுள் தலையிடுவதற்கு நாங்கள் உங்களை அழைக்கவில்லையே என்றுதான் சிறிலங்கா போன்ற பல நாடுகள் கூறப்போகின்றன" என்றார் அவர்.

"கெய்ற்றி மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் ஆகியவற்றின் போது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பான் கீ மூன் வினைத்திறனுடனேயே செயற்பட்டு வந்திருக்கிறார். சிறிலங்கா அல்லது டாபூர் போன்ற முனைப்பான பிரச்சினைகள் நிலவும் பிராந்தியங்கள் என்று வரும்போது ஐ.நா செயலாளர் நாயகம் அதியுச்ச கவனத்துடன் செயலாற்ற வேண்டும்" என அந்த ஊடகவியலாளர் தொடர்ந்தார்.

சிறுபான்மையினருக்குப் போதிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என வாதிடும் மேற்கினது தாராள சனநாயக நாடுகள், குறித்ததொரு நாட்டுக்கு எதிரான அனைத்துலகத்தின் விசாரணை என்பதைப் புறம்தள்ளி தேசிய இறையாண்மை என்ற கோட்பாட்டினை ஆதரிக்கும் ரசியா மற்றும் சீனா ஆகியவற்றை முட்டிமோதும் 'புதிய பனிப்போர் சித்தாந்தங்கள்தான்' தற்போது நடைமுறையில் இருக்கிறது என ஊடகவியலாளர் மலொச் பிறவுண் கூறுகிறார்

puthinappalakai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.